மஹேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட்டின் அமரேந்திர பாகுபலி. இந்திய கிரிக்கெட் விளையாட்டின் கதா நாயகனாக இருந்தவர். 130 கோடி இந்தியர்களின் கனவான, உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.
அபேற்பட்ட கேப்டன் கூல், கடந்த ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கேட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.
டி20 உலகக் கோப்பை (2007), ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை (2011), சாம்பியன்ஸ் ட்ராபி (2013) என மூன்று ஐசிசி ட்ராபிகளையும் வென்ற ஒரே வீரர், கேப்டன் மஹேந்திர சிங் தோனி மட்டுமே. இது கிரிக்கெட் உலகில் யாருக்கும் கிடைக்காத பெருமை என்கிறது தமிழ் மைக்கேல் வலை தளம்.
நாடே வருத்தம்
ஆகஸ்ட் 15, 2020 அன்று மாலை தோனி ஓய்வு பெறும் செய்தி, அவரது ரசிக பெருமக்களுக்கு பேரிடியாக வந்து இறங்கியது. கேப்டன் கூலின் சாதனைகள், முடிவெடுக்கும் திறன், அவரது விக்கெட் கீப்பிங் திறன் போன்றவைகளை எல்லாம், சாதாரண ரசிகர்கள் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் வரை நினைத்து, பகிர்ந்து தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
சொமேட்டோ மரியாதை
அடுத்த நாள் (16 ஆகஸ்ட் 2020), உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, முன்னாள் இந்திய கேப்டன் மஹிந்திர சிங் தோனியை கவுரவிக்கும் விதத்தில், அவரது ஓய்வுக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஒரு ஆஃபரை அறிவித்தது. "A gift for the city that gifted India a legend!" என்கிற கேப்ஷன் உடன், சொமேட்டோ நிறுவனம் போட்ட ட்விட்டை, மேலே படத்தில் பார்க்கலாம்.
என்ன ஆஃபர்
"இந்தியாவுக்கு தோனி என்கிற லெஜெண்டை பரிசாகக் கொடுத்த ராஞ்சி நகரத்துக்கு ஒரு பரிசு" என்கிற கேப்ஷன் உடன், ராஞ்சி நகரவாசிகள், ஆகஸ்ட் 16 இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை, சொமேட்டோ தளத்தில் செய்யப்படும் ஆர்டர்களுக்கு 100 % (183 ரூபாய் வரை) தள்ளுபடி என அறிவித்து இருந்தது சொமேட்டோ. இதற்கு MAHI என்கிற கோடை பயன்படுத்தச் சொல்லி இருந்தது.
சரியான கேள்வி
அந்த ஆஃபர் தொடர்பான சொமேட்டோவின் ட்விட்டுக்கு கீழ், கரண் பங்கா என்கிற ட்விட்டர் வாசி "மஹிந்திர சிங் தோனி ராஞ்சியில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் மொத்த இந்தியாவும் அவரை நேசிக்கிறது. ஏன் இந்த ஆஃபரை இந்தியா முழுக்க அறிவிக்கக் கூடாது?" என ரிப்ளை செய்து கேள்வி எழுப்பி இருந்தார்.
சொமேட்டோவின் பதில்
கரண் பங்காவின் கேள்விக்கு அடுத்த சில மணி நேரத்தில், பதில் கொடுக்கும் விதத்தில் சொமேட்டோ நிறுவனம், ஒரு ட்விட் போட்டது. "எங்க கிட்ட அவ்வளவு பணம் இல்லிங்க" என ஹிந்தி மொழியில் ஒரு மீமை ரிப்ளையாகப் போட்டு இருந்தது சொமேட்டோ. இந்த பதில் ட்விட்டை சுமார் 5,600 பேர் லைக் செய்து இருக்கிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications