சோமேட்டோ ஊழியர்களுக்கு இது மிக நல்ல விஷயமே.. வருடத்தில் 10 நாள் பீரியட் லீவ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்றைய காலகட்டத்தில் இருக்கும் வேலையாவது நிலைக்குமா? சம்பளம் கிடைக்குமா? லீவு கேட்டால் வேலையை வீட்டு நீக்கி விடுவார்களோ? என்ற பய உணர்வும் ஊழியர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

அதிலும் பெண் ஊழியர்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஏனெனில் அடிக்கடி லீவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ பீரியட் லீவ் என வருடத்திற்கு 10 நாட்கள் ஒதுக்கியுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிப்பு

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிப்பு

உண்மையில் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் என்ன தான் உடல் வலி பிரச்சனையாக இருந்தாலும், அதனை கருத்தில் கொள்ளாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதனால் அவர்களால் சரியாக அலுவலக வேலையினையும் செய்ய முடியாமல், நிம்மதியான வீட்டில் இருந்து ஓய்வும் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெண் ஊழியர்களுக்கு ஆறுதல்

பெண் ஊழியர்களுக்கு ஆறுதல்

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக சோமேட்டோ நிறுவனம் வருடத்தில் 10 நாட்கள் பீரியட் லீவ் என அறிவித்துள்ளது. அதோடு இந்த விடுமுறைக்காக பெண்கள் விண்ணப்பிப்பதில் எந்தவித அவமானமும், களக்கமும் இருக்ககூடாது என்றும் அதன் தலைமை நிர்வாகி தீபிந்தர் கோயல் அதன் உழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

எந்த தயக்கமும் வேண்டாம்
 

எந்த தயக்கமும் வேண்டாம்

மேலும் பெண் ஊழியர்கள் தங்களுடன் பணிபுரியும் ஊழியர்களிடம் இந்த விடுப்பு பற்றி சொல்வதற்கோ அல்லது மின்னஞ்சல் அனுப்புவதற்கோ எந்த தயக்கமும் காட்டக்கூடாது எனவும் கூறியுள்ளார். கடந்த 2008ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பெண்களுக்கு உதவ வேண்டும்

பெண்களுக்கு உதவ வேண்டும்

இது குறித்து அதன் நிர்வாக அதிகாரி தீபிந்தர் கூறுகையில், நிறைய பெண்களுக்கு இந்த காலம் மிக வேதனையானவை என்பதை நான் அறிவேன். உண்மையில் அவர்களுக்கு நாம் உதவ நினைத்தால், சோமேட்டோவின் இந்த கலாச்சாரத்தை நாம் அமல்படுத்த வேண்டும் என்று கோயல் தெரிவித்துள்ளார்.

விடுமுறையே கிடைப்பதில்லை

விடுமுறையே கிடைப்பதில்லை

பொதுவாகவே இருக்கும் விடுமுறையே எடுக்க முடியாமல் தவிக்கும் சிலர், தங்களது வார விடுமுறைகளில் வரும் லீவுகளை எடுக்க முடியாமல் அலுவலகம் செல்ல நேரிடும். அதிலும் மாத இறுதியில் கொடுத்த டார்கெட்டை செய்யவில்லை எனில், விடுமுறை நாட்களில் கூட வேலையும் செய்யும் நிலை இன்னும் பல நிறுவனங்களில் உண்டு.ஆனால் இப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் பெண்களின் மனரீதியாக யோசித்துள்ளது சோமேட்டோ. நிச்சயம் கோயலுக்கு ஒரு ஹேட்ஸ் அப் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato announced period leave of up to 10 days per year for female employees

Food delivey firm zomato said it would give 10 days for period leave to female employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X