டபுளான சொமேட்டோ வருவாய்! ஆனாலும் நஷ்டம் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் ஹைபர் லோக்கல் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, 394 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறது.

அதற்கு முந்தைய 2018 - 19 நிதி ஆண்டில் சொமேட்டோவின் வருவாய் 192 மில்லியன் டாலராகத் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக, 2018 - 19 நிதி ஆண்டை விட இரண்டு மடங்கு கூடுதல் வருவாயை ஈட்டி இருக்கிறது சொமேட்டோ நிறுவனம்.

நஷ்டம் தான்

நஷ்டம் தான்

இருப்பினும் லாபம் பார்க்கவில்லை. சொல்லப் போனால் நஷ்டமும் பயங்கரமாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் ஹைபர் லோக்கல் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, 293 மில்லியன் டாலர் நஷ்டம் பார்த்து இருக்கிறது. அதற்கு முந்தைய 2018 - 19 நிதி ஆண்டில் சொமேட்டோவின் நஷ்டம் 277 மில்லியன் டாலராக இருந்தது நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. 

ஜூன் காலாண்டு

ஜூன் காலாண்டு

இந்த ஜூன் 2020 காலாண்டில் சொமேட்டோ நிறுவனம் 41 மில்லியன் டாலரை வருவாயாக ஈட்டி இருக்கிறார்கள். ஆனால் 12 மில்லியன் டாலர் நஷ்டம் பார்த்து இருக்கிறார்களாம். இந்த நஷ்டத்திலும் நாம் பார்க்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். இவர்களின் வியாபார அளவு அதிகரித்து இருப்பது தான். கடந்த 2018 - 19-ல் 718 மில்லியன் டாலருக்கு வியாபாரம் செய்தவர்கள், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் 1.49 பில்லியன் டாலருக்கு வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் லாக் டவுன் காரணத்தால், பல நகரங்களில், பல்வேறு உணவகங்கள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன. இப்போதும் பல உணவகங்கள் வழக்கம் போல வியாபாரம் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த காரணங்களால் உணவு டெலிவரி கம்பெனிகளும் போதுமான வியாபாரம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்களாம். 

ஜூலை மாத வியாபாரம்

ஜூலை மாத வியாபாரம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த விதித்த லாக் டவுனுக்குப் பின், இந்த ஜூலை மாதத்தில் ஓரளவுக்குப் பரவாயில்லாமல் உணவு டெலிவரி வியாபாரம் நடக்கிறதாம். கொரோனா லாக் டவுனுக்கு முந்தைய கால கட்டத்தில் பார்த்த வியாபாரத்தில் 60 % வியாபாரம் தான் இப்போதும் நடந்து கொண்டு இருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

zomato revenue doubled but still facing loss

The food delivery company zomato revenue has doubled in the last financial year, but the company is still reporting loss for Financial year 2019 - 20.
Story first published: Saturday, July 11, 2020, 20:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X