நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா..? இதை படிங்க போதும்..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை. சம்பாதித்த பணத்தை பாதுக்காப்பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வருமானத்தை பெருக்குவதே முக்கியம். இப்பணியில் நிதி திட்டமிடலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

 

நிதியை திட்டமிடுவதில் பணத்தை கையாளும் முறை பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் மக்கள் பாதுகாப்பான நிதியை எதிர்காலத்திற்கு திட்டமிடுவது இல்லை. சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் உங்களுக்காக.

முதல் ஸ்டெப்!!

முதல் ஸ்டெப்!!

நிதி இலக்குகளை அடைய ஒருவரின் தேவையை அறிய வேண்டும், அதன்பின் புத்திசாலித்தனமான நிதி, செலவு மற்றும் முதலீட்டுத் திட்டத்தைத் தீட்ட வேண்டும். முதலீட்டு துறையில் சில காரணிகள் உள்ளன அதை நம்மால் கையாள முடியாது, இருப்பினும் அதை கட்டுப்படுத்தும் வழிகளை கண்டறிய இயலும்.

நிதி இலக்கு

நிதி இலக்கு

நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று தெரியாமல் இருந்தால் இலக்கை அடைவது எப்படி, வாழ்க்கை எந்த பாதை இட்டுச் செல்லவிருக்கிறது?

ஒரு குறிப்பிட்ட நிதி இலக்கை அமைப்பது முதல் படியாகும்.

சிறப்பான நிதித் திட்டம்

சிறப்பான நிதித் திட்டம்

நிதித் திட்டத்தை வரையறுப்பது செலவுகளையும் முதலீடுகளும் கட்டுபடுத்த வழிவகுக்கும். தொகுத்திருக்கும் இலக்கு சாத்தியமானதாகவும் அடையத்தக்கதாக்வும் இருத்தல் வேண்டும். முதலில் நிதியியல் ரீதியாக இலக்கை நிர்ணயிக்கவும், முன்னுரிமைகளை வரிசைப்படுத்தவும்.

காலம் பொன் போன்றது
 

காலம் பொன் போன்றது

பொதுவாக நிதி இலக்குகள் மற்றும் அதனை அடையும் வழிகளை வகுக்கவே பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறோம். விரைவாக இப்பணியை ஆரம்பிப்பது பெரும் நன்மையைத் தரும். முதலீடுகள் நீண்ட காலமிருப்பின் அதற்கான அதிகமான பலனை அனுபவிக்கலாம்.

பொறுமை அவசியம்

பொறுமை அவசியம்

சந்தை என்றும் நிலையானதல்ல, வேகமாக மாறக்கூடியது. முதலீடுகள் ஆபத்தில் இருப்பதாக தெரியலாம். ஆனால் முதலீட்டில் பொறுமை காத்தலே வெற்றிகரமான முதலீட்டாளர்களின் தாரக மந்திரம்.. நீண்ட கால முதலீட்டில் சந்தை ஊசலின் தாக்கம் குறைவே.

புத்திசாலித்தனமான முதலீடு

புத்திசாலித்தனமான முதலீடு

ஒற்றை திட்டத்தில் பணம் முழுவதையும் அர்ப்பணிப்பது பெரிய ஆபத்து. இத்தகைய முதலீட்டில் பணத்தை இலக்கும் ஆபத்து அதிகம். பல்வேறு விதமான பங்குகளில் முதலீடு செய்வது நன்று.

மற்றவர்களை பின்பற்ற வேண்டாம்

மற்றவர்களை பின்பற்ற வேண்டாம்

மற்றவர்ளை பின்பற்றும் பழக்கத்தை கைவிடுவது சற்று கடினமே. ஆனால் இப்பழக்கத்தை கைவிடாவிடில் நிதித்திட்டத்தில் வெற்றிக் காண்பது பகல் கனவே. ஒரு திட்டம் நண்பருக்கு வெற்றியை கொடுத்தால் அது நமக்கும் வெற்றி அளிக்கும் என்று பொருள் இல்லை. மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவதை கைவிடுங்கள். முதலீட்டு உலகத்தில் அறிவார்ந்த அணுகுமுறையை கொள்ளுங்கள்.

விடாமுயற்சி

விடாமுயற்சி

நம் கனவை நினைவாக்க பொறுமை எவ்வளவு அவசியமோ, விடாமுயற்சியும் அவ்வளவு அவசியமே. முதலீடுகளில் ஈடுபாட்டுடன் இருப்பது மட்டுமே நிதியை அதிகாரிக்காது. பேராசை மற்றும் ஆபத்து காரணமாக முதலீட்டாளர்கள் வெளியேறி விடுவர். முதலீட்டை சுற்றுகளில் பல்லாண்டுகளுக்கு பெருக வைக்க வேண்டும்.

எதிர்பாரா தருணங்கள்

எதிர்பாரா தருணங்கள்

துரதிர்ஷ்டம் ஒருவரிடமே தங்கியிருப்பதில்லை, எதிர்பாராத சரிவு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இறக்கி விடும். எனவே, இந்த அவசரத் தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பானது மற்றும் புத்திசாலித் தனமானது. அவசரத் தேவைகளுக்காக பணத்தை எப்போதும் எளிதாக எடுக்கத் தகுந்தவாறு பிரித்து வைக்கவும்.

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகள்

வரிச் சலுகைகளை உங்கள் நிதித் திட்டத்தில் அடக்கிக் கொள்ளுங்கள். வரிக் கொள்கைகளை பொறுத்து மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். சிறந்த முறையை கண்டறிந்து அதில் முதலீடுசெய்து அதிகபட்ச வரி நன்மைகளை அடையுங்கள், வரிப் பணத்தை சேமியுங்கள். பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் அதிக வரி நன்மைகளை கொடுக்க வல்லவை.

ஓய்வூதிய திட்டமிடல்

ஓய்வூதிய திட்டமிடல்

ஓய்வூதிய திட்டமிடுதலில் முக்கியமானது வசதியான வாழ்க்கை மற்றும் அதை அடைவதற்கு இன்றைய வாழ்கை முறையில் பணத்தின் தேவை அதிகம். நிதித் திட்டமிடுதலில் ஓய்வூதிய திட்டமிடல் ஒரு முக்கியமான அம்சம் ஆகும் .

ஓய்வூதியம் திட்டமிடுதலின் மூலம் குடும்பத்தின் எதிர்காலத்தை புத்திசாலித்தனமாக பாதுகாக்க முடியும். நாம் நீண்ட நாள் வாழ்வது போல நம் பணமும் நீண்ட நாள் வாழ வேண்டும்.

காப்பீட்டுத் திட்டம்

காப்பீட்டுத் திட்டம்

காப்பீட்டுத் திட்டம் நிதித் திட்டம் மட்டும் அல்லாமல் நம் வாழ்கைக்கு மிகவும் முக்கியமானது. இக்காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் காப்பீடு கிடைக்கின்றது. குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானது. அவ்வாறான முதலீடுகள் அவசர காலத்தில் உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Improve Your Fiscal Planning With These 10 Tips

Understanding how to deal with money forms an important aspect while financial planning. These days a majority of people don’t draft for a secure financial future. Achieving fiscal security is equally important.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X