ரிடையர் ஆகப் போறீங்களா... இதையெல்லாம் செஞ்சிடுங்களேன்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பணி ஓய்வுக்குப் பின்னர் எத்தகைய வாழ்க்கை வாழ விழைகிறோம் என்பதுதான் ஓய்வூதியத் திட்டம். பகட்டான வாழ்க்கை முறை வேண்டும் என்றால், அதற்கு சேமித்தலும், முதலீடும் அதிகளவில் செய்வது கட்டாயமாகிறது.

 

ஒவ்வொருவரும் பணியில் இருந்து ஓய்வு பெறும் முன் வளமான நிதி நிலையை அடைய சில முக்கிய ஆயத்த பணிகளைச் செய்தல் வேண்டும். குறிப்பாக முதலீட்டு போர்ட்போலியோக்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் இதர நிதி திட்டங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

பணி ஓய்வுக்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள் இங்கே...

கடன்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்

கடன்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள்

பணி ஓய்வுக் காலம் என்பது வாழ்க்கையை அனுபவிக்கும் காலம், கடன்களைப் பற்றியும் இதர பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றியும் வருத்தப்படும் காலம் இல்லை. இதற்காகப் பணிகாலங்களிலேயே ஆயத்தங்கள் செய்தல் வேண்டும்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு உபயோகிப்பதைத் தவிர்த்தல் நலம். அது கடன்கள் அதிகரிக்க வழி வகுக்கும்.

பணி ஒய்வு காலத்திற்குள் நுழையும் போது எவ்விதக் கடன்களும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளல் வேண்டும். அதனால், நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.

காப்பீட்டுத் தேவைகள்

காப்பீட்டுத் தேவைகள்

கால மற்றும் வாழ்நாள் காப்பீட்டுத் திட்டங்கள் வயதைப் பொறுத்து விலை அதிகரிக்கும். வயதை கணக்கில் கொண்டு நீண்ட காலக் காப்பீட்டுத் திட்டம் வாங்குவது நல்லது.

ஏற்கனவே காப்பீட்டுத் திட்டம் இருப்பின், அதை மறுபரிசீலனை செய்து பணிஓய்வு வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யவும்.

வீட்டில் பழுது
 

வீட்டில் பழுது

அவசரமாகவோ அல்லது குறுகிய காலகட்டத்தில் வீட்டில் சரி செய்ய வேண்டிய பழுதுகள் உள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நிதிவிலை பாதிக்காதவாறு அதற்கென நிதியை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

நிதித்திட்டம் தயாரித்தல்

நிதித்திட்டம் தயாரித்தல்

செலவுகளுக்கு ஏற்றவாறு பணத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்பார்த்த பணப் புழக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

கல்லூரி செலவுகள்

கல்லூரி செலவுகள்

கல்லூரி செல்லும் பிள்ளைகள் இருப்பின் அதற்கென்று தனிக் கணக்குத் தொடங்கிப் பணத்தை ஒதுக்கி வையுங்கள்.

அவசரக்கால நிதி

அவசரக்கால நிதி

அவசர காலத் தேவைகளுக்குப் பணத்தை ஒதுக்கி வைப்பது, நீண்ட கால முதலீடுகளைக் களைப்பதை தவிர்க்கும்.

சொத்து திட்டமிடல்

சொத்து திட்டமிடல்

உயில் எழுதாத ஒருவரின் இறப்பிற்குப் பின் சொத்துகளைக் குடும்பத்தார்க்குப் பிரித்துக் கொடுப்பதில் குடும்பத்தில் சிக்கல்கள் வருகின்றன. தீர்க்கப்படாத நீதிமன்ற வழக்குகள், சச்சரவுகள் அதிகமாக உள்ளன.

எனவே, சொத்து திட்டமிடுதலும் அதைத் தேவைப்படும் பொழுது பரிசீலனை செய்வதும் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Must Do Things Before You Retire

Before entering retirement phase, one needs to be prepared to lead a financial healthy life. It is better to concentrate on portfolio, insurance and other financial products before you retire.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X