வருமான வரி இணையதளத்தில் இந்த 8 விஷயங்களைச் செய்யலாம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரியை இணையதளம் மூலம் செலுத்துவதை ஊக்குவிக்க நம் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உங்கள் வருமானம் 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் உங்கள் வருமான வரியை இணையதளம் மூலம் செலுத்த வேண்டி வரும்.

 

உங்கள் வரியை இணையதளத்தில் செலுத்த வேண்டுமானால், இந்தச் சேவையைப் பெற, வருமான வரித் தளத்தில் முதலில் பதிவுசெய்திட வேண்டும்.

வருமான வரி வலைத்தளத்தில் நீங்கள் சரிபார்க்க வேண்டிய 8 விஷயங்கள் இதோ!

வருமான வரி தாக்கல் செய்த வரலாறை சரிபார்ப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் செய்த வரலாறை சரிபார்ப்பது எப்படி?

உங்களுக்கான கணக்கில் லாக்இன் செய்த பிறகு, "மை அக்கவுண்ட்"-ன் கீழ் "ஈ-ஃபைல்ட் ரிடர்ன்ஸ்"-க்கு செல்லவும். கடைசியாகச் சமர்ப்பித்த அனைத்து படிவங்களையும், அதனுடன் அவைகளின் நிலை மற்றும் ஒப்புகை எண்ணையும் இங்கே காணலாம்.

குறிப்பிட்ட ஒப்புகை எண்ணை அழுத்துகையில் முழுமையான விவரங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

டிமாண்ட்/ ரீஃபண்ட் நிலைகளைப் பார்ப்பது எப்படி?

டிமாண்ட்/ ரீஃபண்ட் நிலைகளைப் பார்ப்பது எப்படி?

டிமாண்ட் மற்றும் ரீஃபண்ட் ஏதேனும் இருந்தால், அவற்றைச் சரிபார்ப்பதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு வேளை ரீபண்ட் ஏதும் இல்லையென்றால், "நோ டிமாண்ட் நோ ரீஃபண்ட்" என்ற நிலையைக் காணலாம்.

ரீஃபண்ட் வழங்கப்படாத வழக்குகளுக்கு மட்டும் காரணம் காண்பிக்கப்படும்.

ரீஃபண்ட்டை ரீ-இஷ்யு கோரிக்கையைச் சரிபார்ப்பது எப்படி?
 

ரீஃபண்ட்டை ரீ-இஷ்யு கோரிக்கையைச் சரிபார்ப்பது எப்படி?

புகுபதிகை (login) செய்த பிறகு, ரீஃபண்ட்டை ரீ-இஷ்யு கோரிக்கைக்குச் செல்லவும். வரிவிதிப்பு ஆண்டை தேர்வு செய்து, சி.பி.சி. உத்தரவின் படி, சான்றாதாரம் தொடர்பு எண் மற்றும் ரீஃபண்ட் வரிசை எண்ணையும் அளிக்கவும். ரீஃபண்ட் இஷ்யு நிலை கோரிக்கையையும் நீங்கள் பின்பற்றலாம்.

ரெக்டிஃபிகேஷன் கோரிக்கை:

ரெக்டிஃபிகேஷன் கோரிக்கை:

"மை அக்கவுண்ட்ஸ்"-க்கு கீழ் "ரெக்டிஃபிகேஷன் ரெக்வெஸ்ட்"-க்கு செல்லவும். வரிவிதிப்பு ஆண்டை தேர்வு செய்து, சமீபத்திய தொடர்பு எண்ணை வழங்கவும். வரிவிதிப்பு ஆண்டை தேர்வு செய்தும் கூட ஒருவர் ரெக்டிஃபிகேஷன் நிலையை அறிந்து கொள்ளலாம்.

அறிவிப்புக்கான கோரிக்கை:

அறிவிப்புக்கான கோரிக்கை:

அறிவிப்புக்கான கோரிக்கையை - 143(1)/154 ஒருவர் கோரலாம். அதே போல் அறிவிப்பை மீண்டும் அனுப்புவதற்கும் அல்லது மின்னஞ்சல் வாயிலாகச் சமீபத்திய அறிவிப்பை அனுப்பவும் கோரலாம்.

சட்டப்படியான வாரிசாகப் பதியலாம்:

சட்டப்படியான வாரிசாகப் பதியலாம்:

உங்கள் வரி மற்றும் வரிப் பயன்களை, கட்டவும் பெறவும் பொறுப்பைக் கொண்டவர், வருமான வரித் தளத்தில் சட்டப்படியான வாரிசாகப் பதிந்து கொள்ளலாம்.

படிவம் 26-ஐ காணுதல்:

படிவம் 26-ஐ காணுதல்:

படிவம் 26 ஏ.எஸ்.-ஐ காண்கையில், டி.டி.எஸ்.-சி.பி.சி. வலைத்தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். டி.டி.எஸ். போன்ற பல்வேறு மூலங்களில் இருந்து கழிக்கப்பட்ட வரியின் முழு விவரத்தையும் படிவம் 26 ஏ.எஸ். கொண்டிருக்கும்.

குறைகளைக் கேட்டறிதல்:

குறைகளைக் கேட்டறிதல்:

மெயின் மெனுவில் உள்ள ஹெல்ப்டெஸ்க்கிற்குச் சென்று, ஐ.டி.ஆர்.-வி-செயலாக்கம், ரெக்டிஃபிகேஷன் மற்றும் தொடர்பு சம்பந்தப்பட்ட குறைகளைச் சமர்ப்பிக்கலாம்.

முடிவுரை:

முடிவுரை:

வலைத்தளம் மூலமாக வருமானை வரி சமர்ப்பித்தல் சம்பந்தமாக எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். உங்கள் வருமான வரியைச் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் தினம் ஆகஸ்ட் 31, 2015 என்பதை மறந்து விடாதீர்கள். ஜூலை 31, 2015 ஆக இருந்த கடைசி நாள் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Online: 8 Things You Can Check Through The IT Website

The government is taking many measures to encourage payment of tax returns online. Of course, if your income is more than Rs 5 lakhs, you in any case need to compulsorily file returns online.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X