வங்கி விஷயங்களில் 'உஷாரா இருக்கனும்' பாஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக வங்கிப் பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்ட நிலையில் நம் கவனமான முன்னெச்சரிக்கைகள் குறைந்து விட்டது என்று தான் கூறவேண்டியிருக்கிறது.

ஏனென்றால், நாம் அனைத்திற்கும் தொழில்நுட்பத்தையே நம்பி இருக்கிறோம். நம் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வங்கிகளே அதிகம் விரும்பத்தக்க எளிதான வழியாக உள்ளது. எனவே வங்கிப் பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையுடன் இருக்கப் பின்வரும் தகவல்களை மனதில் கொள்ளுங்கள்:

பணம் எடுத்த பின் ஏடிஎம் ரசீதில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்

பணம் எடுத்த பின் ஏடிஎம் ரசீதில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்

பல நேரங்களில், நாம் இந்த ரசீதுகளைக் கவனிக்காமல், மாத கடைசியில் அதனை உணருவோம். சில நேரங்களில் பணம் எடுத்ததற்கும் ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் வித்தியாசம் இருக்கும்.

அவ்வாறு தவறுகள் காணப்பட்டால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறுங்கள்.

 

வங்கி கட்டணங்கள் மீது ஒரு கண் வேண்டும்..

வங்கி கட்டணங்கள் மீது ஒரு கண் வேண்டும்..

உங்களுக்குப் பயன் தராத சேவைக்காக வங்கி உங்களிடம் கட்டணம் வசூலிக்கின்றதா என்பதைக் கவனியுங்கள். சில நேரங்களில், வங்கி அச்சிடப்பட்ட கணக்கு அறிக்கையை அனுப்பி அதற்காக ஒரு கட்டணத்தையும் வசூலிக்கும்.

இண்டர்நெட் பாங்கிங் (இணையச் சேவை)
 

இண்டர்நெட் பாங்கிங் (இணையச் சேவை)

நீங்கள் அடிக்கடி இந்தச் சேவையைப் பயன்படுத்துபவரானால், உங்கள் உபயோக நேரத்தைக் கவனித்துக்கொள்வது அவசியம் (லாகின் டைம்). இதில் உங்களுக்குச் சந்தேகங்கள் ஏதெனுமிருப்பின் உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டு உங்கள் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பில்களை நேரடியாகச் செலுத்துகிறீர்களா?

உங்கள் பில்களை நேரடியாகச் செலுத்துகிறீர்களா?

பெரும்பாலான வங்கிகள் பல்வேறு பயன்பாட்டுக் கட்டணங்களை இணையம் மூலமாகச் செலுத்தும் வசதியை அளிக்கின்றன. இதற்காக நீங்கள் ஒருமுறை மட்டும் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

இதன் மூலம் உங்கள் நேரம் சேமிக்கப்படுவதுடன், உங்கள் கட்டண விவரங்களையும் எளிதாகப் பராமரிக்க முடியும். உங்கள் இன்ஷியூரன்ஸ் பிரிமியம் போன்றவற்றைத் தாமாகவே செலுத்தும் வசதியையும் நீங்கள் வங்கிகளில் செய்துகொள்ளலாம். இதன் மூலம் அந்தந்த கெடுத் தேதிகளுக்குள் உங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்டுவிடுவதால் நீங்கள் அதைக் குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை.

 

ஒரே பாஸ்வேர்டு

ஒரே பாஸ்வேர்டு

உங்களுக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருப்பின் அவற்றிற்கு ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தாமல் வெவ்வேறு பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துங்கள்.

இதன் மூலம் ஹாக்கிங் எனப்படும் தகவல் திருட்டைத் தவிர்க்கமுடியும். ஒரு கடினமான பாஸ்வேர்டை உபயோகிப்பதோடு உங்கள் வங்கிக்கணக்குத் தொடர்பான விவரங்களைச் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துகொள்வதை அறவே தவிர்த்து உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

உங்களுடைய செக் மற்றும் பாஸ்புக்கை மறந்துவிடாதீர்கள்

உங்களுடைய செக் மற்றும் பாஸ்புக்கை மறந்துவிடாதீர்கள்

இணைய வங்கிச் சேவை அனைத்து வசதிகளையும் தந்த போதிலும், உங்கள் செக் மற்றும் பாஸ்புக் ஆகியவை உங்கள் கணக்கைக் குறித்த முக்கியத் தகவல்களைக் கொண்டுள்ளதால் அவற்றைத் தொலைத்துவிடாமல் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும். ஒருவேளை தொலைத்துவிட்டால், உடனடியாக வங்கிக்கு அதனைத் தெரிவித்து அவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 Banking Mistakes to Avoid

With advancement in technology, we tend to notice less on our transaction as we rely more on technology. Banks are the easiest and the most sought after avenues for placing money.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X