தீபாவளி போனஸ் பணத்தை இப்படியும் செலவு செய்யலாம்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தீபாவளி பண்டிகையின் வருகையையொட்டி, தீபாவளி போனஸ் தொகையை எப்படிச் செலவழிப்பது எனப் பலரும் பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பார்கள்.

 

நீங்கள் எப்போது வாங்கும் சம்பளம் போக, கூடுதலாக அளிக்கப்படும் தொகையே போனஸ். அதனைப் புத்திசாலித்தனமாகச் செலவழித்தால், அதன் பயன்பாடு சிறப்பாக அமையும்.

கடனை அடைத்தல்

கடனை அடைத்தல்

பெர்சனல் கடன் அல்லது வாகன கடன் போன்ற கடன்களை அடைப்பது எப்போதும் சிறந்த யோசனையாகும். இப்படிச் செய்வதால் அவர்களின் வங்கி கணக்கில் இருந்து சுலபத்தவணைக்கான (EMI) பிடித்தம் குறையும், வங்கிக்கணக்கில் சிறிதளவு பணம் சேமிப்பில் இருக்கும்.

காலப்போக்கில் சொத்தாக மாறக்கூடிய, காலத்தால் மதிப்புக் குறையாத பொருட்களை வாங்கவே கடனை நாடிச் செல்ல வேண்டும். உதாரணமாகக் கல்விக்கடன், வீட்டுக்கடன்.

விருப்பப்படி செலவு செய்தல்

விருப்பப்படி செலவு செய்தல்

உங்கள் விருப்பப்படி போனஸ் தொகையைச் செலவழிப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அதில் சிறிது தொகையைச் சேமிக்கவும் செய்யலாம். தேவையற்ற ஆசைகளுக்கு ஒட்டுமொத்த பணத்தைச் செலவழிப்பது நல்ல பழக்கமல்ல. ஒரு பட்ஜெட் மற்றும் விருப்பப்பட்டியலை போட்டுக்கொண்டு, அதற்கேற்ப அந்தத் தொகையைச் செலவிடுங்கள்.

செலவழித்த பணம் சில லாபத்தை அளித்தால், போனஸ் தொகையின் பயன்பாடு சிறப்பாக அமையும்.

அவரசகால நிதி
 

அவரசகால நிதி

இப்படிக் கொஞ்சம் நிதியை ஒதுக்கி வைப்பதால், அவசரமாகத் தேவைப்படும் போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் இதற்கு முன்பு செய்து வைத்த நீண்டால் கால முதலீடுகளைத் தொட வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் அவசரக் கால நிதியாக எவ்வளவு தேவைப்படும் என்பதை ஒருவர் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதனால் இப்படி ஒதுக்கி வைத்த தொகை கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல் தற்போதைய தேவைகளைப் பூர்த்திச் செய்யும் நிதியை அளிக்கும்.

வரியை மிச்சப்படுத்துதல்

வரியை மிச்சப்படுத்துதல்

தீபாவளிக்குப் பிறகு, வரும் மாதங்களில், சம்பளம் வாங்கும் நபர்கள், தங்களின் முதலாளியிடம் வரி சேமிப்பிற்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனால் தங்களின் போனஸ் தொகையைச் சில வரிச் சேமிப்பு முதலீட்டிற்குப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் சான்று சமர்ப்பிக்கும் கடைசி நேரத்தில் தவறான முடிவு எடுக்காமல் சரியான முதலீட்டில் ஈடுபடலாம்.

தீபாவளி போனஸ் தொகையை வரிச் சேமிப்பு முதலீட்டில் பயன்படுத்துவது சிறந்த வழி பயன்பாடுகளில் ஒன்றாகும்.

ஓய்வூதிய நிதி

ஓய்வூதிய நிதி

கூடுதல் தொகையை நீண்ட கால முதலீட்டிற்காக ஒருவர் பயன்படுத்தலாம். இதனால் தங்கள் வாழ்க்கை காலத்திற்குத் தேவையான பயனை ஒருவர் பெறலாம்.

நீண்ட கால முதலீட்டிற்காக ஒதுக்கப்படும் தொகையின் ஒரு பகுதியை வீடு வாங்க, குழந்தைகளின் கல்வி மற்றும் இதர தேவைபாடுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தீபாவளி கொண்டாட்டங்கள்

தீபாவளி கொண்டாட்டங்கள்

உங்களுக்காகவும் நீங்கள் விரும்புபவர்களுக்காகவும் தீபாவளி ஷாப்பிங் செய்வதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் என்ற மாய வலையில் இரையாகி விடாதீர்கள். பட்ஜெட் ஒன்றைப் போட்டு வைத்துக் கொண்டு, ஷாப்பிங் செய்வதற்கு முன்பு உங்களின் உண்மையான தேவைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Smart Ideas To Make Best Use Of Diwali Bonus

With the advent of Diwali, many individuals have already made a list of plans on how to spend their Diwali Bonus. As bonus received is an extra amount from your regular pay one can make the best use of it when spent wisely.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X