ஆட்-ஆன் கிரெடிட் கார்டு என்றால்..? அதன் பயன்கள் யாவை..?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆட்-ஆன் கிரெடிட் கார்டு என்பது முதன்மை கிரெடிட் கார்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அல்லது துணை கிரெடிட் கார்டு ஆகும். நிதித்துறை சார்ந்த தனி நபர்கள் இவ்வகையான கார்டுகளை நன்றாகப் பயன்படுத்தலாம். அதற்குக் காரணம் நீங்கள் விரும்பியவர்கள் எந்த ஒரு நிதி சார்ந்த பரிவர்த்தனைக்கும் உங்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

 

பெற்றோர், கணவன், மனைவி, 18 வயது மேற்பட்ட குழந்தைகள் என எந்த ஒரு குடும்ப உறுப்பினருக்கும் ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும்.

கட்டணங்கள்

கட்டணங்கள்

சில வங்கிகள் இலவச ஆட்-ஆன் கார்டு வழங்குகையில், சிலர் ரூ.125 முதல் ரூ.1000 வரை, கார்ட்டை பொருத்தும் நிறுவனத்தைப் பொருத்தும் வசூல் செய்யும்.

அனைத்து வசதிகளும் உண்டு

அனைத்து வசதிகளும் உண்டு

முதன்மை கிரெடிட் கார்டு போலவே ஆட்-ஆன் கார்ட்டும் சமமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம், பிரதான கிரெடிட் கார்ட்டில் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இந்தக் கார்ட்டிலும் செய்யலாம்.

கடன் வரம்பு

கடன் வரம்பு

முதன்மை கிரெடிட் கார்ட்டிற்கு அளிக்கப்பட்டுள்ள கடன் வரம்பு இதற்கும் பொருந்தும். ஆட்-ஆன் கார்டு மீது ஒருவர் வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதே போல் அதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எஸ்.எம்.எஸ். அறிவிப்பு வருவதற்குப் பதியவும் செய்யலாம்.

கணக்காளர்
 

கணக்காளர்

துணை கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை பிராதன கணக்கு உடைமையாளரின் கீழ் தான் பதியப்படும். அதற்கான பில்லும் அவருக்கே செல்லும்.

அபராத கட்டணம்

அபராத கட்டணம்

ஒட்டுமொத்த கடன் பரிவர்த்தனைகளுக்கு, முதன்மை கணக்கு உடைமையாளரே பொறுப்பாகும். நிலுவை தொகையைச் செலுத்துவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், தாமதமாகச் செலுத்தியதற்கான கட்டணத்தையும் பிரதான உடைமையாளரே செலுத்த வேண்டும்.

தேவைக்கான பணம்

தேவைக்கான பணம்

தேவைப்படும் போது ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பிரதான கணக்கு உடைமையாளருக்கு அளிக்கப்பட்டுள்ள பணத்தை எடுக்கும் வரம்பே ஆட்-ஆன் கார்டு உடைமையாளருக்கும் பொருந்தும்.

கிரேடிட் பாயின்ட்ஸ்

கிரேடிட் பாயின்ட்ஸ்

உங்கள் கார்ட்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கும். இது ஆட்-ஆன் கார்டுகளுக்கும் பொருந்தும். உங்கள் கணக்கில் போதிய வெகுமதி புள்ளிகள் சேர்ந்தவுடன், அதனைப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

கிரெடிட் கார்டு எங்கே எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என உடனடி தகவல் கிடைத்து விடுவதால், கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளைச் சுலபமாகக் கண்காணிக்கலாம். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கார்டு வழங்கப்பட்டிருக்கும் போது.

நிதி சுதந்திரம்

நிதி சுதந்திரம்

இந்தக் கார்டு நீங்கள் விரும்பியவர்களுக்கு நிதி சார்ந்த சுதந்திரத்தை அளிக்கும். இதனால் அவர்களுக்குத் தேவைப்படும் போது பணம் வாங்குவதற்கு அவர்கள் உங்கள் பின்னால் அலையத் தேவையில்லை.

ஆவணங்கள்

ஆவணங்கள்

இந்தக் கார்ட்டை வாங்குவதற்கு, ஆட்-ஆன் கார்டு உடைமையாளர்கள் தொடர்பான ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கவனம்

கவனம்

ஆட்-ஆன் கார்டு வழங்கப்பட்டவுடன் பிரதான கார்டு உடைமையாளர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் தவறு நடந்தால், உங்களுக்குத் தெரியாமலேயே அது உங்களின் கடன் புள்ளிகளைப் பாதித்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Add-On Credit Card: 5 Must Know Points for Primary Card Holder

Add-on credit card is an additional or supplementary credit card issued on the primary credit card. Individuals who have financial dependents can make best use of these cards, as loved ones need not depend on them for any financial transaction.
Story first published: Saturday, November 28, 2015, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X