ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நீங்கள் ரிஸ்க் குறைவா எடுக்க நினைக்கும் முதலீட்டாளரா?. கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததில் மியூச்சுவல் ஃபண்டில் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால். உங்களுக்கான சிறந்த தேர்வு பேலன்ஸ்ட் ஃபண்ட்.

 

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மிகவும் ஆபத்து உடையதாக இருக்கும்பட்சத்தில், இதில் இருக்கும் அபாயங்களைக் குறைத்து வருமானத்தை உறுதி செய்யும் திட்டம் தான் இந்த ஹைபிரிட் அல்லது பேலன்ஸ்ட் (சமநிலை) ஃபண்ட் திட்டங்கள்.

ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..!

இந்த வகைப் பண்டுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவிலான ஞானம் இல்லாத புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. ஏனெனில் இவர்களுக்குப் பங்குச்சந்தையில் எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது என்பதால் இவர்கள் தைரியமாகக் குறைந்த அபாயங்களோடு மற்றும் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வருமானம் ஈட்ட இயலும். இந்த வகைப் பண்டுகளின் இயல்பு என்னவென்றால் இவை நேரடி பங்கு முதலீட்டு முறைகளை ஒப்பிடும்போது முதலீட்டாளர்களைக் கடும் சூழல்களில் அவ்வளவாக இட்டுச் செல்வதில்லை.

அதற்கேற்றார் போல இதில் வரும் வருமானமும் சற்று குறைவாகத் தான் இருக்கும். எனவே இந்த வகை முதலீடுகளில் லாபத்தை உறுதி செய்யும் காரணிகள் என்ன என்பதை இங்கே காணலாம்.

குறைந்த ஏற்ற-இறக்கங்கள் மற்றும் குறைந்த அபாயங்கள்

நாம் ஏற்கனவே கூறியதைப் போல இந்தச் சமநிலை முதலீடுகள் (பேலன்ஸ்ட் ஃபண்ட்) குறைந்த ஏற்ற-இறக்கங்களைக் கொண்டிருப்பதால் இதில் முதலீட்டாளர்களுக்கு அபாயங்களும் குறைவே. அதற்காக அபாயமே இல்லை என்று கூற முடியாவிட்டாலும், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு லாபம் நிச்சயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..!

சொத்து மறு ஒதுக்கீடு அல்லது சொத்து மறு ஒதுக்கீட்டில் நெகிழ்வு (flexibility)

தொடர்ச்சியான சொத்து சமநிலை அல்லது மறு ஒதுக்கீட்டு முறையால் நிதிச் சொத்துச் சுழற்சி செய்து கொள்ளுவது சற்று சாதகமான ஒன்று. அதாவது அதிகம் லாபம் தருகிற நிதிச் சொத்திலிருந்து முதலீட்டை இந்தச் சமநிலை முதலீடுகளுக்கு மாற்றிக்கொள்வது. இந்த வகைச் சமநிலை முதலீடுகளின் வருமான உச்சவரம்புகளுக்கு மேல் கிடைக்கும் தொகை பிற முதலீடுகளுக்கு மாற்றம் செய்யப்படும்.

 

ஒதுக்கீட்டால் வரிச் சலுகை

இந்த வகைச் சமநிலை ஃபண்டுகளில் நிரந்தர வருமானம் தரும் நிதிச் சொத்து மற்றும் பங்கு முதலீடுகளில் செய்ய வேண்டிய விகிதம் பற்றிய வரையறை இல்லை என்றாலும் பொதுவாக 65 முதல் 75 சதவீதம் வரை பங்கு முதலீடு செய்யப்பட்டு மீதம் நிரந்தர வருவாய் முதலீடுகளில் வைக்கப்படுகின்றன.

ஒருவேளை இதில் பங்கு முதலீடு 65 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் அது பங்கு முதலீடாகக் கருதப்பட்டு அது வரிச்சலுகையைப் பெரும். ஏனெனில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் ஒரு ஆண்டிற்கு மேலானதாக இருப்பின் அவற்றிற்கு முதலீட்டு வருவாய் வரியிலிருந்து விலக்கு உண்டு.

ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..!

கடந்த ஓராண்டில் இவ்வகை ஃபண்டுகள் ஈட்டிய வருவாய் என்ன?

கடந்த ஓராண்டாகக் கடன் மற்றும் பங்கு முதலீட்டுச் சந்தைகள் கணிக்க முடியாத வகையில் இருப்பதால் இவற்றின் வருவாயும் குழப்பமான தோற்றத்தையே தருகிறது. கிரிஸில் (CRISIL) சமநிலை அட்டவணையில் கூறப்பட்டுள்ள அளவிற்கு அதிகமாக வருவாயை ஈட்ட முடியாத ஃபண்டுகளின் நிலை இன்னும் கவலைக்குரியது.

ஆனாலும் கடந்த ஆண்டுகளில் இந்தச் சமநிலை ஃபண்டுகளின் வருவாய் பெரிய, நடுத்தர, மற்றும் சிறிய நீட்சி கொண்ட ஃபண்டுகளைக் காட்டிலும் அதிகமாக இருந்ததுண்டு. ஏனெனில் பொருளாதார வீழ்ச்சி நிலை மற்றும் பங்குச் சந்தைகளின் மந்த நிலை ஆகியவற்றின் போதும் இவை ஒரு நிரந்தர வருவாயை ஈட்டித் தந்தன எனவே நேரடி பங்கு முதலீடுகளைக் காட்டிலும் நல்ல வருவாயை அளித்தன.

ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..!

எப்போது மற்றும் எப்படி இவற்றில் முதலீடு செய்வது ?

இந்தச் சமநிலை முதலீடுகளைச் சிப் எனப்படும் பண்படுத்தப்பட்ட முதலீட்டு வாயிலாகத் தேர்ந்தெடுத்து சந்தை நிலவரங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள் இருக்கும்போது முதலீட்டாளர் இதில் ஒரு குறைந்த முதலீட்டைச் செய்து சிறிய லாபங்களைச் சந்தை வளர்ச்சியின் போது ஈட்டலாம். இவை வரிச் சலுகை போன்ற கூடுதல் லாபங்களைப் பெற முதலீடுகளைக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நிலையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

மேலும் சந்தை உந்துதல்கள் (புல் மார்க்கெட்) அதிகக் காலங்களுக்கு நீடித்தால் முதலீட்டாளர்கள் அதிகம் லாபம் ஈட்ட முடியாது என்பதால், அவ்வாறான காலகட்டங்களில் இதைப் போன்ற ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடுகளைச் சந்தை ஒரு வரையறைக்குள் இருக்கும்போது செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How equity-oriented hybrid funds or balanced funds work to offer high risk-adjusted returns?

Investors with low-risk appetite but yet wishing to partake some of their hard-earned money in equities through the mutual fund route can bet on the investment strategy followed in case of balanced funds or equity-oriented hybrid funds.
Story first published: Saturday, December 5, 2015, 14:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X