ஏடிஎம் பயன்படுத்துபவரா நீங்கள்..? கண்டிப்பாகப் படிக்க வேண்டும்..!

By Justinsahayaraj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு காலத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்குச் சென்று காசோலையை நிரப்பிக் கொடுப்பதன் மூலமாகவோ அல்லது வங்கி அளிக்கும் பணம் எடுப்பதற்கான விண்ணப்பச் சீட்டை நிரப்பிக் கொடுப்பதன் மூலமாகத் தான் பணத்தை எடுக்க முடியும்.

 

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அருகில் உள்ள ஏடிஎம் மையங்களுக்குச் சென்று ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி மிக எளிதாக நொடிகளில் பணத்தை எடுக்க முடியும். தற்போது பணம் எடுப்பதற்கு இந்த முறையைப் பயன்படுத்தித்தான் அதிகமான மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை எடுக்கின்றனர்.

ஆபத்துகள்

ஆபத்துகள்

ஏடிஎம் கார்டு மற்றும் ஏடிஎம் இயந்திர பயன்பாட்டில் பல ஆபத்துகள் உள்ளது. இதனை முழுமையாகத் தெரிந்துக்கொண்டு முறையான மற்றும் பாதுகாப்பான வழியில் பயன்படுத்த வேண்டும். முதலில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் போது ஏடிஎம் அட்டை மற்றும் அதன் இரகசிய எண்களை மிகவும் இரகசியமாகக் கையாள வேண்டும்.

நீங்கள் மட்டும் தான்..

நீங்கள் மட்டும் தான்..

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது நம்மைத் தவிர வேறு எவரும் நமது அருகில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இரகசிய எண்கள்

இரகசிய எண்கள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது ஏடிஎம் அட்டை மற்றும் அதன் இரகசிய எண்கள் ஆகியவற்றை எவ்வாறு இரகசியமாகக் கையாளுவது என்பதைக் கீழே காணலாம்.

ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்கள் பாதுகாப்பு
 

ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்கள் பாதுகாப்பு

1. ஏடிஎம் அட்டையின் உாிமையாளர் தனது அட்டையை வேறு எவருக்கும் கொடுக்கக்கூடாது.

2. ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்களை அட்டையில் எழுதி வைக்கக்கூடாது.

3. ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்களை எவருக்கும் பகிரக்கூடாது அல்லது ஏடிஎம் இயந்திரத்தில் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த பிறரின் உதவியை நாடும் போது அவரிடம் இரகசிய எண்களைக் கூறாமல், உரிமையாளரே எண்களை அழுத்த வேண்டும்.

4. இரகசிய எண்களை ஏடிஎம் இயந்திரத்தில் அழுத்தும் போது எவரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. மிகவும் எளிதாக யூகித்தறியும் வகையில் அதாவது உரிமையாளரின் பிறந்த தேதி, வாழ்க்கைத் துணைவரின் பிறந்த தேதி அல்லது அவரது தொலைப்பேசி எண்கள் போன்றவற்றை ஏடிஎம் அட்டையின் இரகசிய எண்களாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

ஏடிஎம் அட்டைப் பாதுகாப்பு

ஏடிஎம் அட்டைப் பாதுகாப்பு

1. தவறுதலாக ஏடிஎம் அட்டையை ஏடிஎம் இயந்திரத்திலோ அல்லது ஏடிஎம் மையத்திலோ விட்டுச் செல்லக்கூடாது.

2. ஏடிஎம் அட்டையை வழங்கிய வங்கியில் உங்களுடைய மொபைல் எண்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்திப் பணம் எடுக்கும் போது, உங்கள் மொபைல் எண்ணிற்குக் குறுந்தகவல் வந்துவிடும்.

3. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி யாராவது பணம் எடுத்திருப்பதை நீங்கள் அறிந்தால் உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

சந்தேகத்திற்கு இடமான காரணிகள்

சந்தேகத்திற்கு இடமான காரணிகள்

1. ஏடிஎம் இயந்திரங்களில் தேவையில்லாத கருவிகள் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் இரகசியத் தகவல்களைத் திருடுவதற்காக இரகசியக் கருவிகள் வைக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகும் வகையில் கருவிகள் ஏதாவது வைக்கப்பட்டிருந்தால் உடனே ஏடிஎம் மையத்தின் காவலரிடமோ அல்லது உரிய வங்கியிடமோ அல்லது அந்த மையத்தை நிர்வாகம் செய்பவர்களிடமோ தெரிவிக்க வேண்டும்.

2. ஏடிஎம் மையத்தைச் சுற்றி இருப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்டால் அதைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3. நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் போது புதியவர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்ய வந்தாலோ அல்லது உங்களிடம் பேச்சுக் கொடுக்க வந்தாலோ நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தகவல் பரிமாற்றம்

தகவல் பரிமாற்றம்

வங்கி பணியாளர்கள் ஒருபோதும் உங்கள் ஏடிஎம் அட்டையைப் பற்றிய தகவல்களைத் தொலைப்பேசி மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ கேட்கமாட்டார்கள்.

எனவே தொலைப்பேசி மூலமாக அல்லது இமெயில் மூலமாக உங்கள் ஏடிஎம் அட்டையைப் பற்றிய தகவல்களைக் கேட்டால் அவர்களுக்கு நீங்கள் பதில் கொடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We do lot of transactions at at an ATM apart from the usual cash withdrawals. Make sure only one card holder is present at one kiosk at a time.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X