கிரேடிட் கார்டு ஈஎம்ஐ பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கிரேடிட் கார்டு இன்றளவில் ஒரு உபயோகமான மற்றும் சக்தி வாய்ந்த கருவியாக விளங்குகின்றது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால், அது அலிபாபாவின் குகையையும் உங்களுக்குத் திறந்து விடும்.

நீங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க விரும்பி, அது முடியாமல் எத்தனை முறை எமாந்த்திருப்பீர்கள். கிரேடிட் கார்டை பயன்படுத்தித் தவணை முறையில் விலையுயர்ந்த பொருட்களை மிக எளிதாக வாங்கலாம். ஆனால் அதில் பல கட்டுப்பாடுகளும், ஆபத்துகளும் உள்ளது.

45 நாட்கள்

45 நாட்கள்

நீங்கள் கடன் அட்டையை (கிரேடிட் கார்டு) உபயோகித்துப் பொருட்கள் வாங்கும் பொழுது, பொருளுக்கு உரிய பணத்தை அதிகப் பட்சமாக 45 நாட்களுக்குள் திருப்பிச் செழுத்தும் வசதி உங்களுக்குக் கிடைக்கின்றது. அந்தக் காலத்தில் நீங்கள் பணத்தைச் செலுத்தவில்லை எனில் வட்டி அல்லது தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும்.

சரி கடன் அட்டையைக் கொண்டு ஈஎம்ஐ வசதியுடன் விலை உயர்ந்த பொருட்களை எளிதாக வாங்கிவிடலாம் ஆனால் அதற்கான கட்டணங்கள், வட்டி மற்றும் ஈஎம்ஐ-யை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

 

கால அவகாசம்

கால அவகாசம்

கடன் அட்டைகள், ஈஎம்ஐ திட்டம் மூலம் 3 மாதங்கள், 6 மாதங்கள், மற்றும் 24 மாதங்கள் போன்ற குறிப்பிட்ட கால அவகாசத்தில் வட்டியுடன் சேர்த்துத் தவணை தொகையைச் செலுத்த உங்களை அனுமதிக்கிறது.

0% ஆஃபர்

0% ஆஃபர்

நீங்கள் பூஜ்யம் ஈஎம்ஐ திட்டத்தில் பொருட்களை வாங்கினால் உங்களுக்கு வட்டி விதிக்கப்படமாட்டாது. இது போன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் வட்டி இல்லாமல் வெறும் மாதத் தவணையை மட்டும் செலுத்தினால் போதும்.

உதாரணம்

உதாரணம்

நாம் ஈஎம்ஐ திட்டத்தை ஒரு உதாரணம் மூலம் மிக விரிவாகப் பார்க்கலாம். ராகுல், மற்றும் ரோகன் ஆப்பிள் 6 எஸ் தொலைப்பேசியை வாங்குகின்றார்கள் என வைத்துக் கொள்வோம்.

இதில் ராகுல் முழுத் தொகையான ரூ.50,000 த்தை செலுத்துகின்றார். ஆனால் ரோஹன் ஈஎம்ஐ விருப்பத்தைத் தேர்வு செய்கின்றார்.

 

கேஷ்பேக்

கேஷ்பேக்

ராகுலுக்கு 5 சதவீதம் பணத் திரும்பக் கிடைத்து விடுகின்றது. அதனால் இப்போது தொலைப்பேசி நிகரத் தொகை ரூ 47,500 ஆகும்.

24 மாத தவணை திட்டம்

24 மாத தவணை திட்டம்

ரோஹனால் முழுத் தொகையையும் செலுத்த முடியாத நிலையில், அவர் 24 மாத ஈஎம்ஐ திட்டத்தைத் தேர்வு செய்கிறார். அவருக்கு மாதம் 1.5 சதவீத வட்டி விதிக்கப்படுகின்றது எனில் அவருடைய மாதத்தவணை என்பது 24 மாதங்களுக்கு ரூ 2,456 ஆக இருக்கும்.

இப்போது ரோஹன் தொலைப்பேசிக்காகச் செய்த மொத்த செலவு ரூ 58.944 ஆகும்.

 

செயலாக்கக் கட்டணம்

செயலாக்கக் கட்டணம்

சில விற்பனையாளர்கள் ஈஎம்ஐ விருப்பத்தைத் தேர்வு செய்யும் பொழுது செயலாக்கக் கட்டணமாக மொத்த கடன் அளவில் 0.5 சதவீதத்தை வசூலிக்கின்றனர்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

நீங்கள் ஈஎம்ஐ திட்டத்தைப் பயன்படுத்தி, 3 மாதங்கள், 6 மாதங்கள், 9 மாதங்கள், 12 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் கால அவகாசத்தில் உங்களுடைய தவணையைச் செலுத்தலாம். கடன் அட்டையின் ஈஎம்ஐ திட்ட வட்டி விகிதமானது திட்டத்தைப் பொறுத்தது மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை மாறுபடுகிறது.

இனி கடன் அட்டையைப் பயன்படுத்தி ஈஎம்ஐ தேர்வு செய்யும் பொழுது விதிக்கப்படும் பல்வேறு கட்டணங்களைப் பார்க்கலாம்.

 

செயலாக்கக் கட்டணம்

செயலாக்கக் கட்டணம்

ஒரு சில வங்கிகள் ஈஎம்ஐ திட்டத்தின் மீது செயலாக்க கட்டணத்தை விதிக்கின்றன. இந்தக் கட்டணம் வழக்கமாக 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மாறுபடுகின்றது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

வங்கிகளின் வட்டி விகிதம் 1.25 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை வேறுபடும். இதனுடைய உண்மையான பொருள் என்ன? பொருளின் இறுதி மதிப்பு அதன் உண்மையான தயாரிப்பு விலையை விட அதிகமாக உள்ளது.

முன்கூடியே செலுத்தும் கட்டணம்

முன்கூடியே செலுத்தும் கட்டணம்

சில வங்கிகள் ஈஎம்ஐ திட்டத்தை முன்கூ ட்டியே முடிப்பதை ஏற்பதில்லை. உங்களுடைய கடன் அட்டையைப் பொறுத்து முன்கூடியே செலுத்தும் கட்டணம் 1 முதல் 2 சதவீதம் வரை மாறுபடும். எனவே விதிமுறைகளைக் கவனமாக வாசித்துத் தெரிந்து கொள்வது நலம்.

இறுதியாக

இறுதியாக

நீங்கள் ஈஎம்ஐ விருப்பத்தைத் தேர்வு செய்யும் முன் கணக்கீடு செய்வது நல்லது. உங்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட 45 நாள் சலுகை காலத்திற்குள் பொருளுக்கு உரிய பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாது எனில் நீங்கள் ஈஎம்ஐ விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்கும்.

தீர்வு

தீர்வு

பணத்தையும் சேமிக்க வேண்டும் விரும்பிய பொருட்களையும் வாங்க வேண்டும் என்றால், சில காலம் பொறுத்துப் பொருட்களுக்கான பணத்தை வங்கியில் சேமித்து எவ்விதமான கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வாங்கலாம். ஆனால் அதற்குப் பொறுமை மிகவும் அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit cards are the best way to make payments when you are looking to purchase any expensive items which you are unable to pay at a single shot.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X