முத்திரைத் தாள் கட்டணம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் நீங்கள் எந்த சொத்துக்களை வாங்கினாலும் அதனை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பல இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

ஒரு சொத்தை பதிவு செய்யும் போது இதன் மதிப்புக்கு ஏற்ப பல கட்டணங்களை நாம் மத்திய மற்றும் மாநில அரசுக்கு செலுத்த வேண்டும். இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் பிரிவு 3, 1899 கீழ் நீங்கள் வாங்கும் சொத்துக்கு ஒரு முறை பதிவு கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் ஆகியவையும் அடங்கும்.

சொத்துக்களை வாங்கும்போதோ அல்லது விற்பனை செய்யும்போதோ முத்திரைத் தாள் கட்டணங்கள் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதைப்பற்றியே நாம் இப்போது பார்க்கபோகிறோம்.
முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் குறைந்தபட்சம் 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் ஒரு முறை பதிவு கட்டணமாக ஒரு சதவீதம் செலுத்த வேண்டும்.

செலுத்த தவரினால் அபராதம் எவ்வளவு

செலுத்த தவரினால் அபராதம் எவ்வளவு

சொத்து வங்கும் போது இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் பிரிவு 3, 1899 கீழ் நீங்கள் முத்திரைத் தாள் கட்டணத்தைச் செலுத்த தவறினால் மொத்த தொகையுடன் 2 சதவீத தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இந்த அபராத கட்டணம் அதிகபட்சமாக அசல் கட்டணத்துடன் 200 சதவீதம் வரை செலுத்த வேண்டி வரலாம்.

 

பெண்களுக்குக் குறைந்த விகிதம்

பெண்களுக்குக் குறைந்த விகிதம்

முத்திரைத் தாள் கட்டணமாக 7 சதவீத வரையைக் கட்டணமாக தமிழகத்தில் செலுத்த வேண்டும். ஆனால் சில மாநிலங்களில் பெண்கள் மீது பத்திரம் பதிவு செய்யும் போது முத்திரைத் தாள் வரி குறைய வாய்ப்புள்ளது.

உதாரணத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 5%, 4% என மாறுபடுகிறது

 

அடுக்கு மாடி குடியிருப்புகள்
 

அடுக்கு மாடி குடியிருப்புகள்

அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் முத்திரைத் தாள் கட்டணம் செலுத்தும் போது உங்களுடைய தனிப்பட்ட பங்கிற்கு மட்டும் செலுத்தினால் மட்டும் போதும். அதாவது நீங்கள் வங்க இருக்க இடத்தின் மதிப்பு 50,000 சதுர அடியாக இருக்கும் எனில் 10 நபர்களுக்கு அதைப் பிரித்து வழங்கும் போது ஒவ்வொருவரும் 5,000 சதுர அடிக்கு மட்டும் செலுத்தினால் போதும்.

ஆவண ஆதாரம்

ஆவண ஆதாரம்

வழக்கு சர்ச்சையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் முத்திரைத் தாள் கட்டணமாகச் செலுத்திய இந்த ஆவணங்களை உங்களுக்கான உரிமையாளர் ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம். சொத்து பதிவு செய்த ஆவணங்கள் ஆதாரமாக ஏற்கப்படாது.

மாநிலங்களுக்கு ஏற்ற மாற்றம்

மாநிலங்களுக்கு ஏற்ற மாற்றம்

நடுவண் அரசுச் சட்டம் இருப்பினும், இந்திய முத்திரைத் தாள் சட்டத்தின் பிரிவு 3, 1899 கீழ் மாநில அரசுகளே இதை வசூலிக்கின்றன மற்றும் இதுவே மாநில அரசுகளின் முக்கிய வருவாயாகவும் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இச்சட்டத்தில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொல்லலாம். இது போல மாகாரஷ்ட்ராவில் பாம்பே முத்திரைத் தாள் சட்டப் பிரிவு, 1958 மட்டும் இல்லாமல் தமிழகம், குஜராத், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தானிலும் சொந்த முத்திரைத் தீர்வை சட்டங்கள் உள்ளன.

 

 விலை அதிகம்

விலை அதிகம்

அதிக முத்திரைத் தாள் பதிவு கட்டணம் என்பதால் இந்தியாவில் சில நேரங்களில் பாதி விலை காட்டப்படிகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் அறிக்கையின் படி பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கின்றனர்.

ஆன்லைன் முத்திரைத் தீர்வை செலுத்துதல்

ஆன்லைன் முத்திரைத் தீர்வை செலுத்துதல்

முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துதல் மற்றும் சொத்து பதிதல் போன்றவற்றை எளிமையாக்க கர்நாடகா, மகாராஷ்ட்ரா பொன்ற சில மாநிலங்கள் இணைய வாயிலாக முத்திரைத் தீர்வை செலுத்துதல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு

முன்பெல்லாம் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு வங்கிகள் பொறுப்பேற்காது. வீடு வாங்குபவர்கள் அவர்களுடைய கையில் இருந்தே கட்டணமாக செலுத்த வேண்டும்.

2015-க்குப் பிறகு இந்த முறையில் மாற்றம் கொண்டு வந்த ஆர்பிஐ வங்கும் சொத்தின் மதிப்பு 10 லட்சத்திற்கும் உட்பட்டு இருக்கும் பொது வங்கி பத்திர செலவையும் ஏற்றுக் கடன் அளிக்கும் என்று அறிவித்தது.

 

வீட்டுக் கடன் மீதான முத்திரைத் தீர்வு

வீட்டுக் கடன் மீதான முத்திரைத் தீர்வு

சொத்து வாங்க வீட்டுக் கடன் உங்களுக்கு இருக்கிறது என்றால் அப்போதும் நீங்கள் முத்திரைத் தீர்வைச் செலுத்த வேண்டும்.
0.1 முதல் 0.2 சதவீதம் வரை வீட்டுக் கடன் மீது முத்திரைத் தீர்வு கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Things You Should Know About Stamp Duty On Property Purchase

10 Things You Should Know About Stamp Duty On Property Purchase
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X