வேகமா ஒரு கோடி சம்பாதிக்க வேண்டுமா..? இதை படிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எப்படி ஒருவர் கோடீசுவரர் ஆகிறார்? பல பேருக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

 

நம்மில் பலர் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தவே படாத படு படும் நிலையில் எப்படியாவது கோடீசுவரர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருப்பர்.

அப்படி இல்லை என்றாலும் சொந்தமாக வீடு, ஒரு கார் மற்றும் ஓய்வூதிய காலத்திற்கான சேமிப்பு போன்ற கனவுகள் பலருக்கு இருக்கும்.

அவர்களுக்கான பதில் ஈக்விட்டி பங்குச் சந்தையில் உள்ளது. அதுவும் குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகளின் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP)-இல் உள்ளது.

ஏன் எஸ்ஐபி?

ஏன் எஸ்ஐபி?

எஸ்ஐபி - சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மெண்ட் பிளான் என்பது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களால் குறைந்த பணத்தை முதலீடு செய்து தொடர்ந்து வருமானம் ஈட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிதி திட்டமிடும் கருவியாகும்.

இது பலருக்கு இரட்டிப்பு லாபத்தை அளிக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

மாதந்தோரும் சம்பளம் பெறும் பல மிடில் கிளாஸ் குடும்பத்தினர் இத்திட்டத்தில் முதலீடு செய்து தங்களது ஓய்வு காலத்தை திட்டமிடலாம்.

விரைவாகத் துவங்குதல்

விரைவாகத் துவங்குதல்

எவ்வளவு விரைவாக எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு வேகமாக நீங்கள் கோடீசுவரர் ஆகலாம்.

எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்ய நீங்கள் எவ்வளவு தாமதம் செய்கிறீர்களோ அவ்வளவு பின்னடைவை சந்திப்பீர்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

உங்கள் எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்யும் முன்
 

உங்கள் எஸ்ஐபி திட்டத்தை தேர்வு செய்யும் முன்

முதலில் சரியான நிதி நிறுவனம் மற்றும் நிதி மேலாளர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இவர்கள் தான் உங்கள் முதலீடுகளை சரியாகத் தேர்வு எய்ய உங்களுக்கு உதவுவர், இவர்களை நீங்கள் தேர்வு செய்யும் போது உங்கள் முதலீட்டுக்கான சரியான பயிற்சியை இவர்கள் அளிப்பதைப் பொறுத்தே உங்களால் வாழ்க்கைக்கான பெரும் லாபத்தைப் பெற இயலும்.

கலவையான முதலீடு செய்யுங்கள்

கலவையான முதலீடு செய்யுங்கள்

இந்தியர்கள் எப்போதும் ரிஸ்க் இல்லாத முதளிடையே விரும்புவர், ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளை பொருத்த வரை ஹை ரிஸ்க், லோவ் ரிஸ்க் இரண்டிலும் முதலீடு செய்வதே அதிக லாபத்தை அளிக்கும்.

தோட்டக்காரர் போல செயல்பட வேண்டும்

தோட்டக்காரர் போல செயல்பட வேண்டும்

தோட்டக்காரர் எப்படி ஒரு செடியை நட்ட பிறகு அதற்குத் தினம் தண்ணீர் ஊற்றிக் கவனித்து கொள்வாரோ அவ்வாறு நீங்களும் முதலீடு செய்த திட்டங்களில் உள்ள ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க வேண்டும்.

கோடியை பெறுவீற்கள்

கோடியை பெறுவீற்கள்

இந்தக் குறிப்பு வரை நீங்கள் சரியாக பின்பற்றி முதலீடு செய்து வந்தால் மட்டும் போதாது. தேவையான போது பணத்தை மீட்டெடுத்து உங்கள் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முறையான திரும்பப் பெறும் திட்டங்கள்(SWA) உங்களுக்கு உதவும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can you make Rs 1 crore in the quickest time

How can you make Rs 1 crore in the quickest time
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X