ஆன்லைனில் உங்கள் உயிலை உருவாக்குவது எப்படி?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஓர் உயில் என்பது ஒரு நபரால் எழுதப்படும் சாசனம் ஆகும். உயிலானது ஒருவரின் மரண சாசனம் என்றும் அழைக்கப்படுகின்றது. அந்த சாசனத்தில் ஒருவர் அவரது இறப்புக்கு பிறகு, அவரது விருப்பத்தின் படி அவரது சொத்துக்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை அறிவிக்கின்றார்.

 

ஒரு உயிலை எழுதுவது மிகவும் எளிதாக தோன்றலாம். ஆனால் அந்த மரண சாசனத்தில் ஒருவரின் உண்மையான நோக்கம் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஒருவரின் உயில் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும். ஆகவே உங்களுக்கு உதவும் பொருட்டு நீங்கள் எவ்வாறு ஆன்லைன் சேவை மையங்களை பயன்படுத்தி, ஆன்லைன்னில் உயிலை உருவாக்குவதற்கான திட்டக்குறிப்புகளை நாங்கள் இங்கு விவரித்துள்ளோம்.

போர்டலில் பதிவு செய்தல்

போர்டலில் பதிவு செய்தல்

முதலில், நாம் ஒரு சேவை வழங்குனர்களின் வலைத்தளத்தில் நம்முடைய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். உறுப்பினர்களுக்கு ஒரு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி சேவை மையத்தின் சேவைகளை அணுபவிக்கலாம்.

விவரங்களை பதிவிடல்

விவரங்களை பதிவிடல்

மரண சாசனத்தை உருவாக்கும் முன் ஒருவர் தனது சொத்துக்கள், பயனாளிகளின் விபரங்கள் மற்றும் தன்னுடைய பிற தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதைப் பயன் படுத்தி ஒருவரின் உயில் உருவாக்கப்படும்.

இந்த விவரங்கள், ஒரு கேள்வித்தாள் வடிவில் நிரப்பப்படும் அல்லது போர்டலின் விண்ணப்படுவங்களை நிரப்புவதன் மூலம் விபரங்கள் அந்த வலைத்தளத்தில் பதிவேற்றப்படும். நீங்கள் உங்களின் விபரங்களை பூர்த்தி செய்த பின் மீண்டும் ஒரு முறை, அந்த விபரங்களை ஆய்வு செய்து ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைத் திருத்தி சமர்ப்பிக்கலாம். அதைத் தவிர்த்து இங்கே பயனாளர் அவருடைய உயிலை நிறைவேற்றுபவராக யார் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

 

கட்டணங்கள்
 

கட்டணங்கள்

பயனாளரின் அனைத்து விபரங்களும் ஆன்லைனில் சமரப்பிக்கப்பட்ட பின்னர், அந்தப் பயனாளர் சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை செழுத்த வேண்டும். சேவை மையத்தின் கட்டண விபரம் ஒவ்வொரு மையத்திற்கும் மாறுபடும். அந்த சேவை மையத்தின் கட்டண விபரத்தின் படி, ஒரு பயனாளர் தன்னுடைய கட்டணத்தை செழுத்த வேண்டும். அந்த சேவை மையத்திற்கு உரிய கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ செழுத்தலாம்.

முதல் வரைவு, மற்றும் இறுதி வடிவம்

முதல் வரைவு, மற்றும் இறுதி வடிவம்

ஒரு வழக்கறிஞர்கள் குழு, பயனாளரினால் வழங்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி அவரின் உயிலுக்கான முதல் வரைவு அறிக்கையை உருவாக்கும். அதன் பின்னர் அந்த வரைவு அறிக்கை பயனாளரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.

பயனாளர் வரைவு அறிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கலாம். வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட பின் உயிலின் இறுதி வடிவம் பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயனாளர் செயல்படுத்த வேண்டும்.

 

சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இடுதல்

சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இடுதல்

இறுதி வரைவு பயனாளருக்கு கிடைத்த பின்னர், அதை அவர் சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட வேண்டும்.

உயில் பதிவு

உயில் பதிவு

உயிலை பதிவு செய்வது கட்டாயம் இல்லை என்றாலும், உயிலை துணை பதிவாளர் முன் பதிவு செய்வது மிகவும் நல்லது. அது அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றது.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

சேவை வழங்கும் மையங்களின் பின்னணி மற்றும் நிபுணத்துவம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அதைத் தவிர்த்து சேவை வழங்குநரின் முழு விபரம் மற்றும் அவர்கள் வழங்கும் சேவைகளை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

ஆன்லைன் சேவை வழங்கும் மையங்கள் பொதுவாக ஒரு கூட்டு உயிலை எழுதுவதில்லை. சேவை மையங்கள் வசூலிக்கும் உயில் கட்டணங்கள் பொதுவாக ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் உயிலை திருத்துவதற்கு அனுமதிக்கும். அதற்கு மேல் நீங்கள் உங்களின் உயிலை திருத்த வேண்டும் எனில் அதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to create a online will..?

How to create a online will..? - Tamil Goodreturns
Story first published: Saturday, October 15, 2016, 18:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X