கடன் வாங்கவில்லை என்றாலும் கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆர்பிஐ அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து கிரெடிட் நிறுவனங்கள் ஜனவரி2017 முதல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வருடத்திற்கு ஒரு முறை இலவசமாக கிரெடிட் ஸ்கோர் பார்க்கும் வசதியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

 

நீங்கள் கடன் வாங்கவில்லை என்றாலும் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம் என்று கூறப்படுகிறது. எனவே நாம் இங்கு கிரெடிட் ஸ்கோர் எதற்கெல்லாம் நமக்குத் தேவைப்படுகிறது என்று இங்குப் பார்ப்போம்.

துல்லியம் உறுதிசெய்தல்

துல்லியம் உறுதிசெய்தல்

கிரெடிட் தகவல் அறிக்கையில் நீங்கள் வாங்கிய கடனிற்கான வரலாறு மற்றும் கடன் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் நீங்கள் சரியான முறையில் அதைச் செலுத்தி உள்ளீர்களா என்று அனைத்தையும் அதில் சரிபார்க்க இயலும்.

வருடத்திற்கு ஒரு முறை அதை நீங்கள் சரிபார்ப்பதன் மூலம் உங்களது கடன் அறிக்கை சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள இயலும்.

மேலும் ஏதேனும் தவறு நடந்து இருந்தால் இணைய வழியாக விவாதம் செய்து அதைச் சரி செய்யலாம்.

மோசடிக்கான சாத்திய கூறுகள்

மோசடிக்கான சாத்திய கூறுகள்

தனி நபர் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் அவ்வளவு எளிதாக மோசடிகளைச் சந்திக்க கூடியது அல்ல. ஆனால் சில நேரங்களில் தவறான தகவல்கள் அல்லது ஏதேனும் பிழைகள் நேர்வதை வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பதன் மூலம் திருத்திக் கொள்ளலாம்.

கடன் கணக்கை கண்காணித்தல்
 

கடன் கணக்கை கண்காணித்தல்

கிரெடிட் அறிக்கையில் நீங்கள் வாங்கியதற்கான கடன் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதைப் பயன்படுத்தி உங்கள் கடன் கணக்கை எளிதாகக் கண்காணிக்க இயலும்.

இதில் நீங்கல் வைத்துள்ள கிரெடிட் கார்டு, உங்கள் மனைவி அல்லது குழந்தைகள் வைத்துள்ள கார்டுகளின் விவரங்களையும் பார்க்க இயலும்.

பிழை நேர வாய்ப்பு

பிழை நேர வாய்ப்பு

நீங்கள் கடன் ஏதும் பெறவில்லை, ஆனால் உங்கள் பெயரில் கடன் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இவ்வாறு ஏதேனும் பிழை நேர்ந்திருந்தால் உடனடியாக இதன் மேல் நடவடிக்கை எடுத்துச் சரி செய்ய முயலவும்.

கிரெடிட் ஹெல்த்தை பாராமரிப்பது எப்படி?

கிரெடிட் ஹெல்த்தை பாராமரிப்பது எப்படி?

உங்கள் கிரெடிட் அறிக்கையை ஆராய்வதன் மூலம் உங்களுடைய நிதி ஆரோக்கியம் எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பார்க்க இயலும்.

மேலும் அதில் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கி உள்ளீர்கள் இன்னும் அதைச் சரியாக திருப்பிச் செலுத்தி வருகிறீர்களா எவ்வளவு தவனை இன்னும் உள்ளது என்று அனைத்தையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

கிரெடிட் வரலாற்றை எப்படி உருவாக்குவது?

கிரெடிட் வரலாற்றை எப்படி உருவாக்குவது?

நீங்கள் புதிய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் புதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பித்து அதைப் பெற்றவுடன் அதில் நீங்கள் ஏதேனும் கடன் பெற்று அதைச் சரியான முறையில் திருப்பி செலுத்தி உங்களது கிரெடிட் வரலாற்றை உருவாக்கலாம்.

இந்தக் கடன் வரலாற்றை உருவாக்க நீங்கள் புதிய வாடிக்கையாளராக இருக்கும் போது குறைந்தது 6 மாத காலம் தேவைப்படும்.

தனி நபர்கள் தங்களது கிரெடிட் ஸ்கோரை அவ்வப்போது கண்காணித்து வருவது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை எப்படி நீங்கள் சரிபார்த்துக் கொள்கிறீர்களோ அவ்வாறு நிதி ஆரோக்கியத்தையும் சரிபார்க்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் அட்டவணை

கிரெடிட் ஸ்கோர் அட்டவணை

கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 500 வரை உள்ள போது மிக அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் அதாவது முக்கியமாக சில கடன் தவணைகளை உடனே நீங்கள் செலுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

500 - 650க்கு இடையில் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் அதிக ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

650 -750க்கு இடையில் உங்களது கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் மிதமான ரிஸ்க்கில் உள்ளீர்கள் என்பதாகும்.

750-850க்கு இடையில் உங்களது கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது என்றால் குறைவான ரிஸ்க் ஸ்கோர் அளவு ஆகும்.

850க்கும் கூடுதலாக இருந்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைவான ரிஸ்க் நிலையில் உள்ளது என்பதைக் குறிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why you should get that credit score?

Why you should get that credit score?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X