ஓய்வூதியம் பெறுவோருக்கு 'சிறப்பு' சலுகை.. ஓரே நாளில் 10000 ரூபாய்க்கும் அதிகமாக பணத்தை எடுக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்கள் அனைவரும் பணத்தில் வங்கி மற்றும் ஏடிஎம் வாசலில் காத்துக்கிடக்கும் சூழ்நிலையில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

 

இப்புதிய திட்டத்தின் படி ஓய்வூதியதாரர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து 10,000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

34 லட்சம் நபர்கள்

34 லட்சம் நபர்கள்

இந்தியாவில் மொத்தம் 34 லட்சம் நபர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் போது சிறப்பு சலுகையை ஆர்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்து புவனேஸ்வர் இந்திய ரிசர்வ் வங்கி பொது மேலாளர் எஸ்.பி.மொகந்தி கூறுகையில் ஓய்வூதியம் பெறுவோர் இந்தச் சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி ஒரே நாளில் 10,000 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள இயலும் என்று கூறியுள்ளார்.

கிராமப்புறங்கள்

கிராமப்புறங்கள்

கிராமப்புறங்களிலும் எளிதாக 2000 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்கான முயற்சிகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து வருவதாகவும் இதற்காக மொபைல் வங்கி சேவையை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

முதியோர் பென்ஷன்

முதியோர் பென்ஷன்

அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் போன்றவற்றை பெறுவோர் சிறிது அச்சப்படவேண்டிய நிலையே உள்ளது.

மாநில அரசு
 

மாநில அரசு

300 ரூபாய் இவர்கள் ஓய்வூதியமாகப் பெறும் போது மாநில அரசுகள் இவர்களுக்காக 135 கோடி ரூபாயை எப்படி ஏற்பாடு செய்யும் என்று தெரியவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அவதி

மக்கள் அவதி

கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்காத நிலையில் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு பெறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த பண மாற்றக் கொள்கையினால் முக்கியமாகச் சுற்றுலா பயணிகள், வெளிநாட்டுப் பயணிகள் பெறும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pensioners Can Withdraw More Than Rs 10000, Says RBI Bhubaneswar

Pensioners Can Withdraw More Than Rs 10000, Says RBI Bhubaneswar
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X