பேடிஎம், ஃப்ரிரீசார்ஜ் போன்றவற்றை ஏன் பயன்படுத்த வேண்டும்..? ஏன் பயன்படுத்த கூடாது..?

இணையதள பண பரிவர்த்தனை போன்றவை நன்மைகளை அளிக்கின்றனவா அல்லது வெறும் மன அழுத்தம் மற்றும் கூடுதல் கட்டணத்தைச் சேர்க்கிறதா என்று பார்ப்போம்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை அடுத்து நாடு முழுவதும் பணமில்லா சூழலை உருவாக்குவோன் என்ற கோஷமும் ஒரு பக்கம் வலுத்துவருகிறது.

இணையதள பண பரிவர்த்தனை போன்றவை நன்மைகளை அளிக்கின்றனவா அல்லது வெறும் மன அழுத்தம் மற்றும் கூடுதல் கட்டணத்தைச் சேர்க்கிறதா என்று பார்ப்போம்.

டிஜிட்டல் பரிவத்தனை மூலம் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்க இலவசம், சலுகைகள் எனப் பலவற்றை அளித்துவருகிறது மத்திய அரசு.

நிதிகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவதினால் என்ன பயன் மற்றும் என்ன சிக்கல்கள் உள்ளன என்று இங்குப் பார்ப்போம்.

எளிதாகப் பயன்படுத்தலாம்

எளிதாகப் பயன்படுத்தலாம்

டிஜிட்டல் முறையில் பணத்தை எடுத்துச் செல்வதினால் பணம், கார்டுகள் போன்றவற்றை எடுத்துச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. பயணங்களின் போது பாதுகாப்பானது மற்றும் எளிமையானது.

சலுகைகளைப் பயன்படுத்தலாம்

சலுகைகளைப் பயன்படுத்தலாம்

அன்மையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 2,000 ரூபாய்க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு.

அது மட்டும் இல்லாமல் 0.75 சதவீதம் பெட்ரோல், டீசல் வாங்கும் போது சலுகை, இன்சூரன்ஸ் கட்டணத்தில் சலுகைகள் போன்றவையும் உள்ளன.

இதேப் போன்று ரயில் டிக்கெட் சலுகை, டோல் கட்டண சலுகை போன்றவையும் உள்ளன.

 

செலவுகளைக் கண்காணிக்கலாம்
 

செலவுகளைக் கண்காணிக்கலாம்

எல்லாப் பரிவர்த்தனைகளும் பதிவு செய்யப்படும் போது தேவைப்படும் போது எளிதாகச் சரிபார்க்க இயலும்.

வருமான வரி போன்றவற்றை செலுத்தும் போதும் வரி தாக்கல் செய்யும் போது உதவும்.

 

பட்ஜெட் போட உதவும்

பட்ஜெட் போட உதவும்

நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், அதில் எவற்றைக் குறைக்க வேண்டும் என்று அனைத்தையும் ஆய்வு செய்யலாம் அதை வைத்து உங்கள் பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்யலாம்.

சாக்லேட் போன்றவற்றுக்கு நீங்கள் செலவு செய்யும் 1 ரூபாய் முதல் அனைத்தையும் எழுதி வைப்பதன் மூலம் உங்கள் பட்ஜெட்டிற்குள் செலவு செய்து வாழலாம்.

 

சில்லைரை பிரச்சனை இல்லை

சில்லைரை பிரச்சனை இல்லை

கடைக்காரர்களிடம் இருந்து ஒரு பொருளை பெற்றுக்கொண்டு சில்லைரை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படாது. எளிதாகத் தேவையான பணத்தை அனுப்ப இயலும்.

அடையாள திருட்டின் உயரிய ஆபத்து

அடையாள திருட்டின் உயரிய ஆபத்து

பெறும் பிரச்சனை என்றால் அது அடையாள திருட்டாகும். நாம் இன்னும் முழுவதுமாக டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்ய மாறாத நிலையில் நன்கு படித்த பலரே ஃபிஷிங் எனப்படும் அடையாள திருட்டில் சிக்கிக்கொண்டு தங்கள் பணத்தை இழந்துவிட்டுத் தவிக்கின்றனர்.

மேலும் 2,000 ரூபாய் வரை செய்யும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு முறை கடவுச்சொல் தேவையில்லை என்று கூறியுள்ளதும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

 

பலவீனமான நிவர்த்தி அமைப்பு

பலவீனமான நிவர்த்தி அமைப்பு

டிஜிட்டல் முறையில் பணத்தை இழந்தால் அதில் முறைகேடுகள் நடந்தால் எப்படி தங்களுடைய பணம் திரும்ப கிடைக்கும் என்ற விவரங்கள் ஏதும் இல்லை.

இப்போது வெளிநாட்டிற்கு எங்கேயாவது செல்கிறோம் அல்லது ஏதேனும் கிராமங்களுக்கு செல்கின்றோம் என்றால் அங்கு இன்று வரை மின்சாரம், சாலைப் பொன்ற அத்தியாவசிய தேவைகளைக் கூட சரியாக அளிக்க முடியாமல் இருக்கும் நிலையில் எப்படி பரிவத்தனை செய்வது.

போன் தொலைந்து போனால் அதனில் உள்ள வாலெட்டுகளில் உள்ள பணத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டால் என்ன ஆகும்?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 reasons to use and not to use Paytm, Freecharge and others

10 reasons to use and not to use Paytm, Freecharge and others
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X