கருப்பு பணத்தை ‘பிரதான மந்திரி கரிப் யோஜனா’ திட்டத்தின் கீழ் சமர்ப்பித்தால் ‘வரி’ எப்படி கணக்கிடப்பட

கருப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சியில் 2017 மார்ச் மாதத்திற்குள் கணக்கை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு வெள்ளிக்கிழமை கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை வருமானத்தில் கணக்கு காண்பித்து வரி செலுத்த புதிய திட்டம் ஒன்றைத் துவங்கி அதற்குப் பிரதான மந்திரி கரிப் யோஜானா என்று பெயரையும் வைத்துள்ளனர்.

 

கருப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சியில் 2017 மார்ச் மாதத்திற்குள் கணக்கை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்படுகின்றது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பு செப்டம்பர் 30-ம் தேதி வரை இருந்த வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தில் 65,000 கோடி வரை கணக்கில் கொண்டு வரப்பட்டது.

இந்த புதிய திட்டத்தை அறிவிக்கும் போது மக்கள் கருப்பப் பணத்தை பற்றி தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலுக்குத் தகவல் அளித்து கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்கான கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதான மந்திரி கரிப் யோஜனா என்றால் என்ன?

பிரதான மந்திரி கரிப் யோஜனா என்றால் என்ன?

பிரதான மந்திரி கரிப் யோஜனா திட்டம் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானத்தை 50 சதவீதம் வரி செலுத்தி மார்ச் 31-ம் தேதிக்குள் கணக்கில் கொண்டு வரலாம். இதில் 30 சதவீதம் வரியும், 33 சதவீதம் செஸ் வரியாகவும், 10 சடஹ்வீதம் கணக்கில் காட்டப்படாத பணத்திற்கான அபராதமாகவும் கருதப்படும்.

மக்கள் யாரெல்லாம் தாங்கலாகவே முன்வந்து கருப்பு பண விவரங்களை அளிக்கிறார்களோ அவர்களிடம் இந்த வருமான எந்த முறையில் வந்தது என்ற கேள்விகள் ஏதும் கேட்கப்படாது.

 

வருமானத்தைக் கணக்கில் கொண்டு வந்த உடன் மீதம் உள்ள பணம் என்னவாகும்?

வருமானத்தைக் கணக்கில் கொண்டு வந்த உடன் மீதம் உள்ள பணம் என்னவாகும்?

50 சதவீதம் வரியாகச் செலுத்திய பின்னர், வருவாயில் உள்ள கால் பங்கு பணம் வட்டி இல்லா முதலீடாக 4 வருடத்திற்குக் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள பணத்தை வரி செலுத்திய பின்னர் பயன்படுத்த இயலும்.

வரி செலுத்தாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருந்தால் என்னவாகும்?
 

வரி செலுத்தாமல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி இருந்தால் என்னவாகும்?

கருப்புப் பணத்திற்கு வரி செலுத்தாமல் புதிய ரூபாய் நோட்டுகளாகவோ அல்லது வங்கி கணக்கில் வைத்திருந்தால் 60 சதவீதம் வரை வரியாகச் செலுத்த வேண்டும். 10 சதவீதம் அபராதம் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணத்தில் இருந்து 25 சதவீதம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். தானாகவே முன்வந்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் அதிகமாக இருக்கும்.

கணக்கில் காட்டப்படாத பணம் பரிமுதல் செய்யும் போது கண்டறியப்பட்டால் என்னவாகும்?

கணக்கில் காட்டப்படாத பணம் பரிமுதல் செய்யும் போது கண்டறியப்பட்டால் என்னவாகும்?

இது போன்ற சூழலில் 30 சதவீத அபராதம் 60 சதவீதம் வரை செலுத்த வேண்டி வரும். கணக்கில் காட்டப்படாத வருமான எப்படி வந்தது, அதற்கான ஆதாரம் மற்றும் விளக்கம் போன்றவை அளிக்க வேண்டி வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Planning to declare black money? Here’s how you will be taxed

Planning to declare black money? Here’s how you will be taxed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X