வாழ்வில் வெற்றி பெற்ற துடிப்பவர்கள் இதை கண்டிப்பாகச் செய்யமாட்டார்கள்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: பல்வேறு ரகசியங்கள் நிறைந்ததுதான் இந்த வாழ்க்கை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் தமக்குள் பல்வேறு ஆச்சரியத்தைப் புதைத்து வைத்துள்ளது. அவை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது மிகச் சிலரால் மட்டுமே முடிகின்றது. அவ்வாறு வெற்றி பெற்ற சில மனிதர்களில், பெரும்பாலானவர்கள், அந்த வெற்றியைத் தக்க வைக்கத் தினமும் போராடுகின்றனர்.

போராட்டம் நிறைந்ததே இந்த வாழ்க்கை. அத்தகைய மிகப் பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கையானது நமக்குப் பல்வேறு படிப்பினைகளை வழங்குகின்றது.

இதுவும் ஒரு காரணம்

வெற்றி பெற்று வாழ்வின் உச்சத்தில் உள்ள சில மனிதர்கள், சில பழக்கங்கள் மற்றும் கொள்கைகளை விடாமுயற்சியுடன் எப்பொழுதுமே பின்பற்றி வருகின்றார்கள்.

அவர்களின் இந்தக் கொள்கைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மட்டுமா அவர்களின் வெற்றிக்கும் காரணம் என்று கேட்டால், இதுவும் ஒரு காரணம் .

 

வெற்றிப்பாதை

இதைத் தவிர்த்து பல்வேறு விஷயங்களை அவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். எனவே வாழ்வில் வெற்றி பெற்று அதிகப் பணத்திற்கு அதிபதியாக ஆசைப்படும் நாமும், நமக்கெனச் சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை ஒரு பொழுதும் கைவிடாமல் பின்பற்ற வேண்டும்.

ஏனெனில் வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் ஒரு பொழுதும் தங்களுடைய குறிக்கோளில் இருந்து விலகுவதில்லை.

 

சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை

ஒரு சிலர் வெற்றி பெற்ற மனிதர்களுக்கு வாய்த்த சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை, எனக்கும் கிடைத்திருந்தால், நானும் எப்பொழுதோ வெற்றிப் பெற்றிருப்பேன் எனக் கருதலாம்.

அத்தகைய எண்ணம் உங்களுக்கும் இருக்குமானால், நீங்கள் ஒன்றை நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். வெற்றி பெற்ற மனிதர்களிடம் தரமான கல்வி, வியாபார யுக்தி, பணம் மற்றும் நேரம் மேலாண்மை திறன் போன்ற சிறந்த குணங்கள் இருந்த போதிலும், இவற்றைத் தவிர்த்து, வெற்றி பெற்றவர்களிடம் அவர்களுக்கே உரித்தான உள்ள சில பிரத்தியேகமான குணங்கள் உள்ளன.

அவர்கள் தகுந்த நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. அவர்களே அவர்களுக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கின்றார்கள். இத்தகைய பண்பானது அவர்களிடம் நேர்மறையான எண்ணங்களை விதித்து, அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து அவர்களை ஒரு வெற்றி பெற்ற நல்ல மனிதர்களாக ன் மற்றும் நல்ல தலைவராக மாற்றுகின்றது.

 

காலம் பொன் போன்றது..

வெற்றி பெற்ற தலைவர்கள் எப்பொழுதும் நேர்மறையான எண்ணத்துடன் விளங்குவதுடன், அவர்கள் ஒருபொழுதும் எதிர்மறையான விஷயங்களைப் பேச மாட்டார்கள். மேலும் அவர்களிடம் உள்ள ஒரு உன்னதமான அம்சம், அவர்கள் ஒருபொழுதும் தங்களுடைய நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

இதுவும் ஒரு கலை..

இங்கே குறிப்பிடத்தக்க அம்சம் என்னெவெனில், வாழ்வில் வெற்றி பெற தேவையானவற்றை எப்பாடு பட்டாலும் அடைவதை விட, தேவையற்றவற்றைக் கண்டிப்பாக ஒதுக்க அல்லது மறுக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தக் கலையை நன்கு கற்றுள்ளனர்.

அவர்களைப் போல் நீங்களும் உங்களுடைய கனவுகளை அடைய வேண்டும் என்றால், நீங்கள் ஒரு பொழுதும் உங்களுடைய நேரத்தை வீணடிக்கக்கூடாது. ஏனெனில் காலம் பொன் போன்றது.

 

 

10 முக்கியமான விஷயங்கள்

இங்கே நாங்கள் வாழ்வில் வெற்றிகரமாகத் திகழும் மக்கள் ஒருபோதும் செய்ய விரும்பாத அல்லது அவர்கள் ஒதுக்க அல்லது மறுக்கும் 10 மிக முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் உங்களுடைய வாழ்வில் வெற்றி பெற விரும்பினால், இந்த விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள்.

அவர்கள் ஒருபோதும் விஷயத்தைக் கருதிக்கொல்வதில்லை:

மிகவும் வெற்றிகரமான மக்கள் ஒரு பொழுதும் விஷயங்களை அவர்களாகவே கருதிக்கொல்வதில்லை. இது இப்படி இருக்குமோ அல்லது அப்படி இருக்குமோ என்கிற யூகத்திற்கு இவர்கள் உட்படுவதில்லை. அவர்கள் எப்பொழுதும் யதார்த்தமாக இருக்கின்றார்கள். அவர்கள் உண்மைகள் மற்றும் தரவுகளை நம்பி யதார்த்தமான இலக்குகளை நோக்கி முன்னேறுகின்றார்கள். அவர்கள் விஷயங்கள் தாமாகவே நடக்கும் எனக் காத்திருப்பதில்லை. அவர்கள் அதை நோக்கி கடினமாக உழைக்கத் தயங்குவதில்லை.

அவர்கள் உடனடி வெற்றிகளின் நம்பிக்கை வைப்பதில்லை:

வெற்றிக்கு எந்தவிதமான குறுக்குவழியும் கிடையாது. பணம் மற்றும் புகழை அடைவதற்கு நீடித்த விடாமுயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் வெற்றியை நோக்கி அதே திசையில் பயணிக்க வேண்டும்.

அவர்கள் நேரத்தை ஒரு பொழுதும் வீணடிப்பதில்லை:

இந்தப் பழக்கம் மிகவும் முக்கியமானது மற்றும் எவ்விளவு விரைவாக இதைக் கைக்கொள்கின்றீர்களோ, அவ்வளவு சீக்கிரம் வெற்றி உங்களை வந்தடையும். காலம் பொன் போன்றது. எனவே ஒரு பொழுதும் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுடைய எண்ணங்களை மிகப் பெரிய குறிக்கோளில் நிலை நிறுத்தி, அதை நோக்கி ஒரு பொழுதும் கண் அயராமல் உழைத்திடுங்கள்.

அவர்கள் ஒரு பொழுதும் எதிர்மறையான கருத்துக்களுக்குச் செவிமெடுப்பதில்லை:

உங்களிடம் யாராவது "உங்களால் இதைச் செய்ய இயலாது" எனச் சொன்னால், அவர்களைப் புறந்தள்ளுங்கள். உங்களின் மீது நம்பிக்கை வைத்து உங்களை வழிகாட்டத் தயாராக இருப்பவரிடம் நட்புடன் பழகுங்கள்.

அவர்கள் ஒரு பொழுதும் சூழ்நிலை கைதியாக மாறுவதில்லை:

சில நேரங்களில் நீங்கள் சோர்வாக, வெறுப்புற்று, தாக்கப்பட்டு, தோல்வி அடையலாம். அப்பொழுது நீங்கள் உங்களின் சுற்றத்தார் மற்றும் சூழ்நிலை மீது பழி சுமத்தலாம். ஆனால் வெற்றி பெற்றவர்கள் ஒரு பொழுதும் இவ்வாறு செய்வதில்லை. அவர்கள் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதமாக மாற்றிக் கொள்கின்றனர்.

அவர்கள் தங்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை:

மிகவும் வெற்றிகரமானவர்கள் தங்களை ஒரு பொழுதும் மறப்பதில்லை. அவர்கள் தங்களுடைய சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். அவர்கள் தங்களை மிகவும் ஆழமாக நேசிக்கின்றனர்.

அவர்கள் தங்காளாகவே எல்லாவற்றையும் செய்வதில்லை:

நீங்கள் ஒரு வணிக நிறுவனத்தைக் கட்டி எழுப்புவதாக இருந்தால், உங்களுக்கு ஒரு குழு தேவைப்படும். ஒரு வெற்றிகரமான வணிக நிறுவனத்தைக் கட்டி நிர்வகிக்க, நீங்கள் அந்தக் குழுவிடம் அதிகாரம் மற்றும் வேலைகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும். தனி ஒருவனாக உங்களால் அனைத்து வேலைகளையும் செய்ய இயலாது.

அவர்கள் பரிசோதனைகளை ஒரு பொழுதும் நிறுத்துவதில்லை:

தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே நீங்கள் தோல்வியடைந்தால், உங்களுடைய முயற்சிகளை நிறுத்த வேண்டியதில்லை. பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு புதிய தவறுகளைச் செய்திடுங்கள். ஒரு பொழுதும் பழைய தவறுகளைத் திரும்பச் செய்யாதீர்கள்.

அவர்கள் ஒரு பொழுதும் கூட்டத்தைப் பின்பற்றுவதில்லை:

ஒரு பொழுதும் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்காதீர்கள். மிகவும் வெற்றிகரமான மக்கள் விஷயங்களை வித்தியாசமாகச் செய்கின்றனர். ஏற்கனவே பல பேர் முயற்சி செய்து பார்த்த விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்து தங்களுடைய நேரத்தை ஒரு பொழுதும் வீணடிப்பதில்லை.

அவர்கள் எப்பொழுதும் தோல்வியை ஒப்புக் கொள்வதில்லை:

நீங்கள் முற்றிலும் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் இது. நீங்கள் உங்களுடைய கனவுகளின் நம்பிக்கை வைத்திருந்தால், ஒரு பொழுதும் அதனுடைய பாதையில் இருந்து விலகாதீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

10 things highly successful people never do

10 things highly successful people never do - Tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns