'முதலாளி' ஆகும் கனவு உடையவரா நீங்கள்..? உங்களுக்கு 'முகேஷ் அம்பானி' கூறும் 5 அறிவுறைகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் பணக்கார மனிதர் தனது வியாபார ரகசியங்களைத் தினமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அவர் அப்படிச் செய்யும்போது அனைவரும் அவர் மீது கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

நாஸ்காம் அமைப்பின் வருடாந்திர முதலாளிகள் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்ற போது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியிடம் வளரும் தொழிலதிபர்களுக்கு அவர் தரும் அறிவுரைகளைப் பற்றிக் கேட்கப்பட்டது.

முகேஷ் அம்பானி, அவர்களுக்கு அறிவுரைத் தருவதைவிடத் தான் கற்றுக் கொண்ட பாடங்களைப் பகிர்ந்து கொள்வதையே விரும்புவதாகக் கூறினார். இவர் பகிர்ந்து கொண்டு பாடங்கள் இன்றைய தொழிலதிபர்களுக்கும் சரி, நாளைய தொழிலதிபர்களுக்கும் சரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்

பாடம் 1:

பாடம் 1:

முகேஷ் அம்பானியின் முதல் பாடம் அவரது தந்தையும் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவியவருமான திரு. திருபாய் அம்பானியிடமிருந்து வந்தது.

ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துத் திரும்பி வந்த மிக இளவயது அம்பானி அவரது தந்தையிடம் "எனது உத்தியோகம் என்னவாக இருக்கப் போகிறது? நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று கேட்டார். அதற்குத் திருபாய் அம்பானியின் பதில் என்னவென்றால், நீ ஒரு வேலையை, பணிகள் மற்றும் பொறுப்புகளைத் தேடுவதாக இருந்தால், நீ ஒரு மேலாளராக இருக்க வேண்டும்.

"நீ ஒரு தொழிலதிபராக ஆவதாக இருந்தால் உனக்கு என்ன தேவை என்பதை நீயே கண்டுபிடி" என்று கூறிய திருபாய் அம்பானி, "எனவே நான் உனக்கு எதையும் சொல்லப் போவதில்லை நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை நீயே கண்டறி" என்று தனது கருத்தை விவரித்தார்.

 

பாடம் 2:
 

பாடம் 2:

ஒரு தொழிலதிபராக இத்தனை வருடங்களில் அம்பானி கற்றுக் கொண்ட இரண்டாவது விஷயம் என்னவென்றால் ஒருவர் தானான பிரச்சனையைக் கண்டறிந்து, அதனை முறையாகத் தீர்க்க வேண்டும். அதுமட்டும் அல்லாமல் தொடர்ந்து பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வல்லவராக இருக்க வேண்டும்.

UDCTயில் ஒரு ஆசிரியரிடமிருந்து இதை அவர் கற்றதாக முகேஷ் அம்பானி கூறினார். "அவர் கிடைத்தற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்." என்று அம்பானி கூறுகிறார். எனது ஆசிரியர் எப்போதும் சொல்வார், "நீ தீர்க்கக் கூடிய பிரச்சனைகளின் பட்டியலை உனக்குத் தரமாட்டேன். நீயே பிரச்சனைகளைக் கண்டறி நீ கண்டறியும் பிரச்சனைகளின் தரம் மற்றும் அதற்கு உண்மையில் நீ தரும் தீர்வுகளின் தரத்தைப் பொறுத்து நான் உனக்குத் தரமதிப்பீடு தருவேன்" என்று கூறினார்.

அம்பானியைப் பொறுத்த வரை இந்த விதிமுறை தொழிலதிபர்களுக்கும் பொருந்தும். "இது வெறுமனே பிரச்சனைகளைக் கண்டறிவது பற்றியது மட்டும் அல்ல, முதலில் பிரச்சனைகளைக் கண்டறிவது ஒரு முறை நீங்கள் கண்டறிந்து விட்டால் அதற்குத் தீர்வு காணுங்கள்" என்று அம்பானி கூறுகிறார்.

 

பயணம் மற்றும் வாழ்க்கை

பயணம் மற்றும் வாழ்க்கை

அம்பானியைப் பொறுத்தவரை சமூக விழிப்புணர்வு என்பது, ஒரு தொழிலதிபரின் பயணம் மற்றும் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். "உண்மையில் சமுதாயத்திற்கு உதவக் கூடிய ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். மற்றும் அதுவே உங்கள் வியாபாரத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்." என்று கூறுகிறார்.

கூடுதல் நிதி வருமானங்கள் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும் என்கிறார். "நீங்கள் வருமானத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினால் உண்மையில் நீங்கள் சிறந்த மனிதராவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று கூறினார்.

 

பாடம் 3:

பாடம் 3:

இந்தக் கற்றலின் அடுத்தப் பகுதி வெற்றியைச் சுவைத்த பிறகு பாராட்டுதல்களைப் பெறுகிறோம் இருந்தபோதிலும் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், "தோல்விகள் சாதாரணமானவை எனது சொந்த வாழ்க்கையில் கூட வெற்றிப் பெறுவதற்கு முன்பு நான் பலமுறை தோல்வியடைந்திருக்கிறேன். தோல்விகள் உங்கள் வெற்றிக்கு முன்பனா படிக் கற்களேயாகும்.

தோல்விகளால் மனம் துவண்டு விடாதீர்கள். தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள் ஆனால் முயற்சிகளை விட்டுக் கொடுக்காதீர்கள்" என்கிறார் அம்பானி.

 

பாடம் 4:

பாடம் 4:

ஒவ்வொரு தொழிலதிபருக்கும் சமரசம் செய்து கொள்ள முடியாத சில விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும். அம்பானி அப்படிக் கருதும் விஷயங்கள்: முதலீட்டாளர்களின் பணத்தைத் தனது சொந்த பணத்தை விடவும் கூட அதிகக் கவனத்துடன் கையாள வேண்டும்.

சரியான அணி

சரியான அணி

மேலும் நிர்வாகத்தில் ஒரு அணி மிகவும் முக்கியமாகும் "ஒரு சரியான அணி இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது. அந்த அணியை உங்கள் சொந்ந உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகரமாகச் சீரமைப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறுகிறார்.

பாடம் 5:

பாடம் 5:

இறுதியாக நேர்மறை எண்ணங்களுடன் இருப்பதன் முக்கியத்துவம்.

"தொழிலதிபர் என்பவர் ஒரு நன்னம்பிக்கையாளர். இங்கே நிறைய இழிவான மற்றும் எதிர்மறையாகச் சிந்திக்கக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு தொழிலதிபர் நேர்மறையான ஆற்றலைப் பரப்புகிறார், ஒரு கண்ணாடிக் குடுவை பாதி நிறைந்துள்ளது, ஒருபோதும் பாதிக் காலியாக இல்லை" என்கிறார் அம்பானி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here are Mukesh Ambani's 5 career lessons

Here are Mukesh Ambani's 5 career lessons
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X