குழந்தையின் கல்விக்காக முதலீடு செய்ய ஏற்ற 6 சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்..!

குழந்தையின் கல்விக்காக முதலீடு செய்ய ஏற்ற 6 சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்..!

குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு நீண்ட காலத்திற்குப் பெற்றோர்கள் ஒரு முழுமையான தொகுப்பை கட்டமைக்கச் சிறந்த வழிகளில் ஒன்று மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் உங்கள் பதவி காலத்தில் சிறந்த முதலீட்டைச் செய்து வந்தால் நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையில் அது சிறந்த பந்தயமாகக் கருதப்படுகிறது. சிறப்பாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிதிகள் சந்தை நிலவரம் தாழ்ந்திருக்கும் போதும் உங்கள் நிதித் தொகுப்பு தேயாமலும் மற்றும் நீங்கள் ஒரு கண்ணியமான வருமானத்தைத் திரும்பப் பெறுவதையும் உறுதி செய்யும்.

வானத்தைத் தொடும் கல்விக்கான செலவுகள்

வானத்தைத் தொடும் கல்விக்கான செலவுகள்

கல்விக்கான செலவுகள் வானத்தின் உயரத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், உங்கள் குழந்தைக்கான கல்வி செலவுகளையும் இதர செலவுகளையும் சமாளிக்க நிதி திரட்டுவது மிகவும் கடினமானதாக ஆகிவருகிறது. கல்விக்கான செலவுகளையும் பண வீக்கத்தையும் கடக்கப் பெற்றோர்கள் முன்கூடியே திட்டமிட்டு தயாராக இருப்பது சிறந்ததாகும்.

நிலையான முதலீடுகள், பொது வருங்கால வைப்புநிதி, பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றில் முதலீடு செய்வது மட்டுமே பண வீக்கத்தின் உயர்வைச் சமாளிக்க உதவாது. நீண்ட காலத்திற்கு நீங்கள் ஒரு நிதி தொகுப்பை கட்டுமானிக்கக் கருத்தில் கொள்ள வேண்டிய சில நிலையான முதலீட்டுத் திட்டங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

கொடாக் கவனத் தேர்வு நிதி

கொடாக் கவனத் தேர்வு நிதி

கொடாக் கவனத் தேர்வு நிதி ஒரு மாபெரும் பங்கு மூலதனப் பரஸ்பர நிதியாகும். இந்த நிதியானது கிரிசில் - ஆல் முதல் எண் நிதியமைப்பாகத் தரமளிக்கப்பட்டுள்ளது மற்றும் இணையதள மதிப்பீட்டு ஆய்வில் நான்கு நட்சத்திர தரமதிப்பீட்டு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த நிதி நிறுவனம் 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது மற்றும் அது நிறுவப்பட்ட காலம் முதற்கொண்டே14.52 சதவிகிதம் வட்டி வருமானத்தைத் திருப்பியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனத்தின் பின்னணி தோற்றமானது வலிமையாக இருப்பதால், நீண்டகால முதலீட்டு வருவாயைத் தேடுபவர்கள் தாராளமாக இந்த நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

10 ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடைய குழந்தைகளை உடையப் பெற்றோர்கள் இந்த நிதி நிறுவனத்தைக் கருத்தில் கொள்ளலாம். இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் 23.83 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது. அதே சமயம், ஐந்து வருடத்திற்கான முதலீட்டுத் திரும்பப் பெறும் வருவாயானது சுமார் 19.04 சதவிகிதம் ஆகும்.

 

மிரே சொத்து மதிப்புயர்வு வளர்ச்சி ப்ளூசிப்

மிரே சொத்து மதிப்புயர்வு வளர்ச்சி ப்ளூசிப்

மிரே சொத்து மதிப்புயர்வு ப்ளூசிப் நிதி நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தரப் பங்கு முதலீட்டு நிதிகளின் கீழ் முதல் தரமானதாகக் கிரிசல் - ஆல் தர மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் இணைய மதிப்பீட்டு ஆய்வில் ஐந்து - நட்சத்திர தர மதிப்பீட்டு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. தனிநபர்கள் இந்த நிதி நிறுவனத்தில் தொடக்க முதலீடாக ரூபாய். 5000 தொகையுடன் முதலீட்டைத் தொடங்கி அதன்பிறகு மாதந்தோறும் ரூபாய். 1000 தொகையைச் செலுத்தலாம்.

முதலீட்டாளர்கள் முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு 6 முன்கூட்டி தேதியிடப்பட்ட காசோலைகளைக் கொடுக்கலாம். இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் ஒவ்வொரு வருடமும் சராசரியாகச் சுமார் 39.79 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், ஒரு வருடத்திற்கான வருவாய் முனைமம் சுமார் 21.96 சதவிகிதம் ஆகும். இது இதர நிதி நிறுவனங்களோடு ஒப்பிடும்போது மிக நல்ல திட்டம் ஆகும். முதலீடு செய்யப்பட்ட 365 நாட்களுக்குள் மீட்டுக் கொள்ளப்பட்டால் நிதியானது 1 சதவிகித வெளியேறும் வணிகச் செலவு சுமையைக் கவர்கிறது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீட்டு அளவின் வீச்சானது இந்துசிண்ட் பேங்க், எச்பிசிஎல், கொடாக் மகேந்திரா பேங்க் போன்றவற்றின் பங்குகளை உள்ளடக்கியுள்ளது.

 

பிர்லா சன் ஆயுள் காப்பு முன்வரிசை பங்கு நிதி நிறுவனம்

பிர்லா சன் ஆயுள் காப்பு முன்வரிசை பங்கு நிதி நிறுவனம்

இந்த நிதி நிறுவனம் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது மற்றும் இணைய மதிப்பீட்டு ஆய்வில் ஐந்து நட்சத்திர தர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் 6 முன்கூட்டி தேதியிடப்பட்ட காசோலைகளை வழங்க வேண்டும். மேலும் இந்த நிதி நிறுவனத்தில் நீங்கள் இணையத் தளத்திலேயே முதலீடு செய்து கொள்ளலாம், பரஸ்பர நிதி நிறுவன இல்லத்தில் நீங்கள் சோதனையும் செய்து கொள்ளலாம்.

இந்த நிதி நிறுவனம் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட ஆண்டு முதற்கொண்டு, 21.55 சதவிகிதம் முதலீட்டு வருவாயை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் 18.87 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், ஐந்து வருட முதலீட்டு வருவாய் சுமார் 16.82 சதவிகிதமாக உள்ளது.

 

முதன்மை மதிப்புயர்வு வளர்ச்சி ப்ளூசிப்

முதன்மை மதிப்புயர்வு வளர்ச்சி ப்ளூசிப்

நடுத்தர மூலதன பங்கு நிதி நிறுவனங்களின் கீழ் இந்த நிதி நிறுவனத்திற்குக் கிரிசல் - ஆல் முதலாவது தர இடம் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் இணைய மதிப்பீட்டு ஆய்வில் நான்கு நட்சத்திர தர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பெற்றோர்கள் ரூபாய். 5000 தொகை முதலீட்டுடன் இந்த நிறுவனத்தில் முதலீட்டைத் தொடங்கலாம்.

அதன் பிறகு மாதந்தோறும் ரூபாய். 1000 தொகையைச் செலுத்தலாம். முதலீட்டாளர்கள் இந்த முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டத்தில் 6 முன்கூட்டி தேதியிடப்பட்ட காசோலைகளை வழங்க வேண்டும். இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் 34.95 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனம் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட ஆண்டு முதற்கொண்டு, 30.13 சதவிகிதம் முதலீட்டு வருவாயை அளித்துக் கொண்டிருக்கிறது.

 

கனரா ரொபேகா வளர்ச்சியுறும் பங்கு முதலீடுகள்

கனரா ரொபேகா வளர்ச்சியுறும் பங்கு முதலீடுகள்

கனரா ரொபேகா வளர்ச்சியுறும் பங்கு முதலீடுகள் ஒரு சிறிய முதலீட்டு நிதி நிறுவனமாகும் மற்றும் இது கிரிசில் - ஆல் இரண்டாம் இட தர அந்தஸ்தைப் பெற்றுள்ளது மற்றும் இணையத் தர மதிப்பீட்டு ஆய்வில் நான்கு நட்சத்திர தர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டத்தில் செய்யக்கூடிய குறைந்தபட்ச முதலீடு ரூபாய். 1000 ஆகும்.

இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 40 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிதி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் நிறுவப்பட்ட ஆண்டு முதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் சராசரியாக 18.17 சதவிகிதம் முதலீட்டு வருவாயைத் திருப்பி அளித்து வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீட்டு வருவாய் வீச்சளவானது ஃபோர்ஸ் மோட்டார்ஸ், சென்சுரி டெக்ஸ்டைல்ஸ், மற்றும் இன்ஜினியரிஸ் இந்தியா போன்றவற்றின் பங்குகளை உள்ளடக்கியுள்ளது.

 

ஐசிஐசிஐ விவேகமான சமச்சீர் நிதி.

ஐசிஐசிஐ விவேகமான சமச்சீர் நிதி.

ஐசிஐசிஐ விவேகமான சமச்சீர் நிதி நிறுவனம் கிரிசல் - ஆல் மூன்றாம் இட தரத்தை பெற்றுள்ளது மற்றும் இணையத் தர மதிப்பீட்டு ஆய்வில் நான்கு நட்சத்திர தர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. தனிநபர்கள் இந்த நிதி நிறுவனத்தில் ரூபாய். 5000 முதலீட்டுத் தொகையுடன் முதலீட்டைத் தொடங்கலாம். அதன் பிறகு மாதந்தோறும் ரூ. 1000 தொகையைச் செலுத்தலாம்.

இந்த முறைப்படுத்தப்பட்ட நிலையான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் 6 முன்கூட்டி தேதியிடப்பட்ட காசோலைகளை வழங்க வேண்டும். இந்த நிதி நிறுவனத்தின் கடைசி மூன்று வருட முதலீட்டு வருவாய் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 20.47 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு வருட முதலீட்டு வருவாய் சுமார் 13.01 சதவிகிதம் ஆகும். முதலீடு செய்யப்பட்ட 365 நாட்களுக்குள் நிதி திரும்ப மீட்டுக் கொள்ளப்பட்டால் நிதியானது 1 சதவிகித வெளியேறும் வணிகச் செலவு சுமையைக் கவர்கிறது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீட்டு வருவாய் வீச்சளவானது பாரதி ஏர்டெல், எச்டிஎஃப்சி பேங்க் மற்றும் கோல் இந்தியா போன்ற பங்குகளை உள்ளடக்கியுள்ளது.

 

பாத்தியதை மறுப்பு

பாத்தியதை மறுப்பு

இந்தக் கட்டுரை முதலீட்டு முனைமங்கள் அல்லது இதர நிதிக் கருவிகளை வாங்கச் சொல்லியோ, விற்கச் சொல்லியோ செய்யப்படும் பரிந்துரையோ, வேண்டுகோளோ அல்ல கிரேனியம் தகவல் தொழில் நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் கட்டுரை எழுதிய ஆசிரியர் ஆகிய எவரும் இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழும் இழப்புகள் / மற்றும் அல்லது சேதாரங்களுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டால் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+