பாகுபலி திரைப்படத்தில் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டு வாரங்களுக்குள்ளாகவே உலகளாவிய வசூலில் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே இல்லாத அளவில் பாகுபலி 2 திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

 

எஸ்.எஸ்.ராஜமௌலியால் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் இந்தியாவில் 6,500 திரையரங்குகளிலும், உலகெங்கிலும் 9,000 திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது.

திரைப்படத்துறைக்கு ராஜமௌலி ஆற்றி வரும் கலைப்பணியில் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் குறைந்த காலத்தில் நிறையப் பலன்களைப் பெறுவது குறித்தன பாடங்கள் பாகுபலி படத்தில் நிறைந்திருப்பதாகப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் ஏஞ்செல் ப்ரோகிங் நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

பாகுபலி திரைப்படத்திலிருந்து முதலீட்டாளர்களுக்கான முக்கியமான நிதி மேலாண்மை குறித்த பாடங்கள் இதோ :

காத்திருந்து விளையாடுதல்

காத்திருந்து விளையாடுதல்

பாகுபலி தனது அரசின் மீதான அதிகார உரிமையை இழந்த போதிலும், அரசாங்கத்தை இழக்கவில்லை. இரண்டு தலைமுறைகளுக்குப் பின் மீண்டும் தனது ராஜ்யத்தை வென்றெடுத்தார். அதேபோல முதலீட்டுக் களத்தில் காத்திருத்தல் ஏற்படுத்துகின்ற பலன்கள் மிகுதியாகவே இருக்கும்.

நிறையச் சம்பாதிக்க நிறையச் செலவழிக்கவேண்டும்

நிறையச் சம்பாதிக்க நிறையச் செலவழிக்கவேண்டும்

பாகுபலி தன் வாழ்நாளில் நிறையச் சிரமங்களை அனுபவித்தார். தனது அரசு உரிமையை இழந்தார். சாதாரண வெகுஜன மக்களிடையே வாழ்வதற்காகத் தனது வசதிகள் மிக்க ஆடம்பரமான வாழ்வைத் தியாகம் செய்தார். முதலீடு செய்யும்போதும் இதே கொள்கைகள் நமக்குப் பெருமளவில் உதவும். நம்மில் பலர் உண்மையான மதிப்பையும், சந்தர்ப்பங்களால் ஏற்படக்கூடிய மதிப்பையும் புரிந்துகொள்ளாமல் வர்த்தகம் செய்வதும், முதலீடு செய்வதும் செய்கிறோம். நாம் நீண்ட கால முதலீடுகளைப் பற்றிக்கொண்டு தவறான நேரங்களில் அவற்றிலிருந்து வெளியேறுகிறோம்.

தவறான நேரங்களில் ஏற்படும் பொறாமை நமது செயலிழப்புக்குக் காரணமாகிறது
 

தவறான நேரங்களில் ஏற்படும் பொறாமை நமது செயலிழப்புக்குக் காரணமாகிறது

பாகுபலியின் சகோதரன் பொறாமை கொண்டவனாக இருப்பதாலேயே பல நேரங்களில் செயலிழந்தவனாக, தோல்வியை அடைபவனாக ஆகிறான். அதே நேரத்தில் பாகுபலியின் பொறாமை சரியான நேரங்களில் வெளிப்படுகிறது. இதேபோலத்தான் திறந்தவெளி போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் எப்போது பொறாமைப்படுவது, எப்போது அச்சப்பட்டிருப்பது என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். முதலீட்டுச் சக்கரத்தின் அடித்தட்டில் இருக்கும்போது பொறாமை கொள்வதும், உச்சத்தில் இருக்கும்போது அச்சப்பட்டிருப்பதும் இயல்புதான். இதற்கு மாறாக இருந்தால் பேரிழப்பில்தான் முடியும்.

சூப்பர் ஸ்டார்கள் உங்களுக்குத் தேவையில்லை

சூப்பர் ஸ்டார்கள் உங்களுக்குத் தேவையில்லை

பாகுபலி திரைப்படத்தின் இந்தப் பிரமாண்ட வெற்றி பெரிய நட்சத்திரங்கள் உங்களுக்குத் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. உங்கள் துறையிலும் இதுதான் உண்மை. உங்களுடைய முதலீட்டுத் துறையிலும் உள்ளார்ந்த திறமை கொண்டவர்கள் தேவை. சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை.

உங்களுடைய முடிவுகளை உங்களுடைய உணர்ச்சிகள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்

உங்களுடைய முடிவுகளை உங்களுடைய உணர்ச்சிகள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்

பாகுபலியின் உள்ளே மறைந்திருக்கின்ற அடிக்கருத்தும், அந்தப் பாத்திரமும் இவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. பாகுபலி அவரது தாயாருடனான பாசப்போராட்டங்களின் போதும், அவரது மனைவியுடனான நேசப்போராட்டங்களின் போதும் எதனையும் தீர்மானிக்கத் தனது உணர்ச்சிகளை அனுமதிக்கவில்லை. ஏஞ்செல் ப்ரோகிங் உணர்ச்சிகள் முதலீடுகளின்போது நமது மிகப்பெரிய எதிரிகளாகின்றன என்று கூறுகிறது. நீங்கள் மந்தை குணாதிசயங்களைக் கொண்டு உணர்ச்சி அலைகளால் அடித்துச் செல்லப்படுபவராக இருக்கக்கூடும். பாகுபலியைப்போல உங்கள் முதலீட்டுத் தீர்மானங்கள் எளிமையான மற்றும் அறிவுக் கூர்மையான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அமைந்தால் நீங்கள்தான் வெற்றிகரமான முதலீட்டாளராக இருப்பீர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Financial Lessons From Baahubali's Blockbuster Success

5 Financial Lessons From Baahubali's Blockbuster Success
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X