இது எல்லாம் இல்லைன்னா 'ஹெல்த் இன்சூரன்ஸ்' வாங்கவே வாங்காதீர்கள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பணியாளர்களின் நலன் கருதி அமல்படுத்தி வருகின்றனர். அனைத்துப் பணியாளரும் அவரவருக்கென்று ஒரு தனியான மருத்துவக் காப்பீடு செய்வது மிகவும் அவசியமானது. பாலிசியில் உள்ள குழப்பம் தரும் அனைத்து நிபந்தனைகளையும் படித்துச் செயல்படுவது நடைமுறையில் சாத்தியம் இல்லாததால் உங்கள் பாலிசியின் முக்கிய அம்சங்கள் பற்றியும், பயன்களைப் பற்றியும் சற்று விரிவாக இங்கே காண்போம்.

மருத்துவக் காப்பீடு பாலிசியில் முதலீடு செய்யும் முன் உங்கள் பாலிசிக்கு அவசியமான 5 முக்கிய அம்சங்கள் பற்றிய சரிபார்ப்புப் பட்டியலினை இங்குப் பார்க்கலாம்.

பிரிமியம் செலுத்துவதின் கால இடைவெளி

நீங்கள் ஒரு பாலிசி வாங்கும் முன் நீங்கள் பிரிமியம் எவ்வெப்போது செலுத்த வேண்டும் என்பதை உங்கள் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஒரே பிரிமியம்

முழுத் தொகையையும் ஒரே தவணையாகச் செலுத்துதல்.

குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தும் பிரிமியம்

உங்கள் பிரிமியத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குச் செலுத்துதல்.

எது அதிகச் செலவு?

ஒரே பிரிமியம் என்பதுதான் செலவு குறைந்த பொருளாதாரத்திற்கு ஏற்றத் திட்டம். முழுத் தொகையையும் ஒரே தவணையில் செலுத்துவது சற்றுச் சிரமமாக இருந்தாலும் உங்கள் செலவைக் குறைக்க உதவும்.

தினசரி பணப் பயன்

நீங்கள் ஒரு அரசு மருத்துவமனையிலோ அல்லது ஒரு தனியார் மருத்துவமனையிலோ ஏதாவதொரு காயம், உடல்நலக்குறைவு, வியாதிகள், ஆகியவற்றுக்காகச் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டால் அது உங்களுக்கு மிகப் பெரிய ஒரு நிதிச் சுமையைத் தரக்கூடும். இதற்காகவே சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு இத்தகைய செலவுகளைச் சமாளிக்கத் தக்க நேரங்களில் உதவி அந்தக் கட்டணங்களைச் செலுத்தி வருகின்றன.

இக்கட்டான உடல்நலக் குறைவுகளுக்கான காப்பீட்டுப் பலன்கள்

இப்போதெல்லாம் இந்தியர்கள் திடீரென்று ஏற்படும் உடல்நலக்குறைவுகளால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு வரும் நிலை பரவலாகக் காணப்படுகிறது. இதற்கெனப் பிரத்தியேக பாலிசி திட்டங்களை வாங்கிப் பயனடைவது புத்திசாலித்தனமானது.

உங்கள் பாலிசி விவரங்களை எந்தெந்த சிகிச்சைகளுக்குப் பலனளிக்கும் என்பதை முழுதும் அறிந்து கொண்டு அதற்கேற்ற திட்டங்களை வாங்க வேண்டும்.

 

அறுவை சிகிச்சைக்கான காப்பீட்டுப் பலன்கள்

சில பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு நீங்கள் செலவிடும் போது உங்கள் பொருளாதாரம் மிகுந்த பின்னடைவை அடையக்கூடிய நிலை ஏற்படுகிறது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.20 லட்சம், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை ரூ.18 லட்சம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ரூ.4 லட்சம் எனச் செலவிட நேரும்போது உங்களுக்கு ஒரு மருத்துவக் காப்பீட்டு பாலிசி இருந்தால் அவர்கள் உங்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பார்கள்.

இத்தகைய அறுவை சிகிச்சைகளுக்காக ஒரு பெரும் தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டி ஏற்படும்போது உங்களிடம் ஒரு மருத்துவக் காப்பீடு பாலிசி இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. காப்பீட்டு நிறுவனம் உங்களுக்குக் கை கொடுக்கக் காத்திருக்கிறது.

 

பணத்தின் மதிப்பு

உங்கள் மருத்துவக் காப்பீடு பாலிசிகள் வருமானவரிச் சட்டம் 1961 பிரிவு 80 D ன் கீழ் வரிச் சலுகைகளை உங்களுக்கு வழங்குகின்றன. ஒரு தனி நபர் பாலிசிக்கு அதிகபட்சமாக ரூ.55,000 வரையிலும், மூத்த குடிமக்களாகிய பெற்றோர் இருந்தால் அவர்களுக்குக் கூடுதலாக ரூ.30,000 வரையிலும் வரிச்சலுகை கிடைக்கும்.

உங்கள் திடீர் செலவினங்களுக்கு உதவும் அதே நேரத்தில் உங்களுக்கு வரிச் சலுகையையும் வழங்கும் இந்த அவசியமான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அவசியம் நீங்களும் சேர்ந்து பயனடைய விரும்புகிறீர்கள்தானே?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Don’t buy your health insurance if it doesn’t have these features

Don’t buy your health insurance if it doesn’t have these features
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns