மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தை எப்படி பாதியாக குறைப்பது.. பெங்களூரு தம்பதிகள் கூறும் ரகசியம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவரும் நிலையில் நீர் மேலாண்மை குறித்தும், நமது வீடு மற்றும் அலுவகங்களில் தேவையற்ற வகையில் வீணாக்கப்படும் நீரை எவ்வாறு மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது என்பது குறித்தும் தொடர்ந்து காண்போம்.

பெங்களுரு கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் சக்சேனா, 'தண்ணீர் பற்றாக்குறை குறித்து நான் விழிப்போடு இருந்து வருகிறேன்' என்று கூறுகிறார். இவர் புனேவில் பிறந்து வளர்ந்து 25 ஆண்டுகளுக்கு முன் பெங்களுருக்கு இடம்பெயர்ந்த ஒரு ஏற்றுமதி, இறக்குமதி ஆலோசகர். அவரது மனைவி ஆர்த்தியும் 70 ம் ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே கார்டன்சிட்டியின் போக்கில் ஏற்படும் கடுமையான தீவிரமான மாற்றங்களைச் சாட்சியாக இருந்து பார்த்து வருகின்றனர். நம்மைத் தாங்கும் இயற்கைக்கு ஆதாரமாயிருக்க அவர்களின் வீட்டையே பசுமை நிறைந்த சூழ்நிலைக்கு மாற்றி வருகின்றனர்.

 

வினோத்குமார் செய்த மிகப்பெரிய சாதனை அவரது குடியிருப்பிலிருந்து வீணாகும் கழிவுநீரினை மேம்படுத்தி மறு பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் ஒரு அமைப்பை ஏற்படுத்தியதுதான்.

சுற்றுச் சூழலுக்குக்கந்த வகையில் மாற்றி அமைக்கப்பட்ட வீடு

சுற்றுச் சூழலுக்குக்கந்த வகையில் மாற்றி அமைக்கப்பட்ட வீடு

2006 ல் அவர்களுடைய வீட்டைக் கட்டியிருந்த போதிலும் இருவரும் இணைந்து அவர்களது வீட்டை சுற்றுச் சூழலுக்குக்கந்த வகையில் முடிந்த வரையில் மாற்றி உள்ளனர். பெங்களுரு மாநகராட்சி சொல்வதற்கு முன்னாடியே நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் அனைத்துக் குப்பைகளையும் தனியே பிரித்து வைத்தோம்' என்று கூறுகிறார் ஆர்த்தி.. வினோத்குமார் அவரது வீட்டிலிருந்து வெளியாகும் மாசடைந்த நீரை மறுசுழற்சி செய்வதற்குரிய ஒரு மாற்றுவழியைக் கண்டறிந்தார்

எளிய வழிமுறை கண்டறிய ஆலோசனை

எளிய வழிமுறை கண்டறிய ஆலோசனை

அவர் நீர் வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைகளைக் கேட்டதோடு மட்டுமல்லாமல் இது சம்பந்தமாகச் செய்தித்தாள்களில் வரும் செய்திகளையும் ஆராய்ந்த பின்னரும் இதற்கு ஒரு சரியான தீர்வு காண முடியாதிருந்தார். அவர்கள் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளைக் கூறாததுடன் அதிக இடத்தைப் பயன்படுத்தக்கூடிய வகையிலான வழிகளைக் கூறினார்கள் என்கிறார். தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர் எளிய வழிமுறைகளை விநோத்குமாரே கண்டறிந்தார்.

மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறை நீர்
 

மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிவறை நீர்

வீட்டிலிருந்து வெளியாகும் பழுப்புநிற நீரை விடக் கழிவறைகளிலிருந்து வெளிவரும் கருப்பு நீர் மீண்டும் பயன்படுத்த இயலாததாகவே உள்ளது. கழிவறை நீர்க்குழாய்கள் பிரதான வெளியேறும் குழாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

சோப்பு வண்டல்கள், சிறு மாசுகள் மற்றும் துர்நாற்றத்தை அகற்றி தண்ணீரை தூய்மையாக்கச் சிறு அளவில் படிகாரம் மற்றும் குளோரின் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பழுப்பு நீரினை கழிவறைகளுக்குப் பயன்படுத்தும்போது அழுக்கோ அல்லது நாற்றமோ இல்லை என்பதை உறுதி செய்தனர்.

தொழில்நுட்ப ஆலோசனைகள் இல்லாமல் கண்டு பிடிப்பு

தொழில்நுட்ப ஆலோசனைகள் இல்லாமல் கண்டு பிடிப்பு

திறமையான தொழில்நுட்ப ஆலோசனைகள் ஏதுமின்றி மனதில் தோன்றிய கருத்துகளை வைத்து எளிமையான ப்ளம்பிங் பணிகளைக் கொண்டே அனைவரும் செய்யத்தக்க வகையில் சாதித்துக் காட்டினார்.

நான் ஒரு என்ஜினியர் அல்ல

நான் ஒரு என்ஜினியர் அல்ல

" நான் ஒரு என்ஜினியர் அல்ல. என்னிடம் இதற்கான எந்த வரைபடமும் இல்லை. ஆனாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் சொன்னபோது இது செயல்படுத்தக்க கூடியதுதான் என்று அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்."

ஒரு சாதாரண மனிதன் ஒரு நாளில் சாதாரணமாக 10 முறைகளில் 100 லிட்டர் தண்ணீரை கழிவறைகளுக்குப் பயன்படுத்துகிறான். இவ்வாறு அதிக அளவில் வீணாக்கப்படும் நீரைப் பிற வீட்டு வேலைகளுக்கு உபயோகமான வகையில் பயன்படுத்தலாம்.

மறு சுழற்சி

மறு சுழற்சி

ஒரு நாளில் 300 லிட்டர் நீர் வரை கழிவறைகளில் இருந்து கருப்பு நீராக வெளியேற்றப்படுகிறது. மறு சுழற்சி செய்ததனால் இந்த நீர்வீணாவதை பெருமளவில் கட்டுப்படுத்தினார் சக்சேனா. தண்ணீருக்கான கட்டணமும் மிகவும் குறைந்து வந்தது.

மழைநீர் சேகரிப்பு முறை நிலத்தடி நீருக்கு வலு சேர்த்தது. வீட்டு மாடிகளிலிருந்து வெளியேறும் மழை நீரினை குழாய்கள் வழியாகத் தனியான ஒரு நிலத்தடி தொட்டியில் கொண்டு சேர்த்தார். அந்தத் தொட்டிக்குக் கான்க்ரீட் அடித்தளம் இல்லை. இதனால் நிலத்தடி நீர் சேகரிப்பும் வலுப்பெற்றது.

மழை நீர் சேமிப்பால் கிடைத்த நன்மை

மழை நீர் சேமிப்பால் கிடைத்த நன்மை

மழைநீரும் நிலத்தடியில் வெற்றிகரமாகச் சேமிக்கப்பட்டது. எனது அண்டை வீட்டார் 750 அடி வரை போர் போட்டுள்ளனர். சார்ஜாபூர் சுற்றிப் பல இடங்களில் 1500 அடி வரை போர் போட்டுள்ள நிலையில் என்வீட்டில் நான் போட்டுள்ள வெறும் 145 அடிப் போரில் தண்ணீர் மிதமிஞ்சி வருகிறது என்று கூறுகிறார் வினோத்குமார்.

வீட்டுத் தோட்டத்திற்கு நீர்

வீட்டுத் தோட்டத்திற்கு நீர்

சமையலறையிலிருந்து வெளியேறும் நீர் மற்றும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் கழிவுகளை வீட்டுத் தோட்டத்திற்குப் பாய்ச்சிப் பயன்படுத்துகிறார் ஆர்த்தி.

செலவு

செலவு

அந்தக் குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு கார் இல்லை. இருந்திருந்தால் அதற்கும் இந்த மறு சுழற்சி பழுப்பு நீரைப் பயன்படுத்தியிருக்கலாம். எளிமையாகச் செயல்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்திற்குக் குழாய்கள் அமைத்திட ரூ.20,000 வரை செலவாகக்கூடும் என்கிறார் வினோத்குமார். செலவு மெல்லக்கூடினாலும் வீடு கட்டி அதை அழகுப்படுத்த ஆகும் செலவை பார்க்கும்போது இந்தச் செலவு எற்றுக்கொள்ளகூடியதாகவே உள்ளது. இது மட்டுமின்றி, தண்ணீர் கட்டணம், மின்கட்டணம் ஆகியவற்றிலும் நல்ல ஒரு சேமிப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

மின்கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்

மின்கட்டணத்தைக் குறைக்கும் வழிகள்

தண்ணீர் பற்றாக்குறையைத் திறம்படச் சமாளித்த இந்த ஜோடி இப்போது மின்கட்டணத்தைக் குறைக்கும் வழிகள் குறித்துத் தங்கள் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர் 2010களில் சிஎப்எல் பல்புகளுக்கு மாறிய இவர்கள் இப்போது எல்ஈடி பல்புகளுக்கு மாறி வருகின்றனர். குறைந்த மின் சக்தி பயன்படுத்தும் மின்விசிறிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மின்சாரத் தண்ணீர் சூடேற்றிகளுக்குப் பதிலாகச் சூரிய சக்தி தண்ணீர் சூடேற்றிய பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரை

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரை

இந்த ஜோடி பல தடுமாறச் செய்யும் கேள்விகளை எல்லாம் சமாளித்து வெற்றி கண்ட இவர்கள் இப்போது அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசனை கூறி வருகின்றனர். மக்களை அவரது வீட்டிற்கு வந்து இந்தச் செய்முறையைப் பார்வையிட்டு மேலும் இதனைச் சீர்ப்படுத்திட ஆலோசனைகளைக் கூறுமாறு அழைக்கிறார் வினோத்குமார்.

இயற்கையுடன் செயல்பட்டு ஒற்றுமை

இயற்கையுடன் செயல்பட்டு ஒற்றுமை

புகையைக் கட்டுப்படுத்தல், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான புதிய வழிமுறைகளைச் சிந்தித்து வரும் இவர்கள் நாங்கள் சுயமாகத் தற்சார்பு பெற்று இயற்கையுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம் என்று கூறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Simple Plumbing Hacks Helped This Bengaluru Family Cut Its Water Bills by More Than Half

How Simple Plumbing Hacks Helped This Bengaluru Family Cut Its Water Bills by More Than Half
Story first published: Saturday, May 13, 2017, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more