சொத்தை விற்கும் போது வரி செலுத்துவது கட்டாயம்... எப்படி வரி செலுத்துவது? என்னென்ன சலுகைகள் உள்ளன?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அசையா சொத்து வாங்குபவர்கள் விற்பவர்களுக்குச் செலுத்தவேண்டிய தொகையில் வரிப் பிடித்தத்தைக் கழிக்க வேண்டியது கட்டாயமாகும். சொத்து வாங்குபவர்கள் கருதப்பட்ட மொத்த பணத்தில் 1% ஆதாரப் பணத்திற்கான வரிப்பிடித்தத்தைக் கழித்து மற்றும் அதே தொகையைப் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வருமானவரி அதிகாரிகளின் கணக்கில் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதற்கான வழிமுறைகளை இங்கே கீழே காணலாம்.

படிவம்

சொத்து வாங்குபவர்கள் ஆதாரப் பணத்திலிருந்து பெறும் வரிப்பிடித்தத்தை வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்த 26QB படிவத்தை இணையத்திலோ அல்லது இணையத்திற்கு வெளியிலோ பெற்று நிரப்ப வேண்டியது அவசியமாகும். இணையத்தில் அந்தப் படிவத்தைப் பெறுவதற்கு ஒருவர் பின்வரும் இணைய இணைப்பைச் சொடுக்கலாம். https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp

படிவத்தை நிரப்பத் தவணை நாட்கள்

சொத்து வாங்குபவரால் ஆதாரப் பணத்திலிருந்து செய்யப்பட்ட வரிப்பிடித்தம் கழிக்கப்பட்ட மாதத்தின் 7 நாட்களுக்குள் படிவம் 26 QB நிரப்பப்பட வேண்டும்.

 

விவரங்கள்

சொத்தை வாங்குபவர் மற்றும் விற்பவர் தொடர்பான தகவல்கள் (பெயர், முகவரி, நிரந்தர வங்கி கணக்கு எண், வாழ்க்கை தகுதி போன்றவை) சொத்து பற்றிய விவரங்கள், சலுகை மற்றும் செலுத்தப்பட வேண்டிய ஆதாரப் பணத்தில் வரிப்பிடித்தம் ஆகியவை கண்டிப்பாகப் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.

பணம் செலுத்துதல்

ஒருவர் இணைய வங்கி கணக்கு அல்லது வங்கியின் கிளைகளில் ஒன்றின் வழியாகப் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை வரி செலுத்துபவர் ஈ-டாக்ஸ் பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்தால் அடுத்தடுத்த தேதிகளில் வங்கிக் கிளையில் ஒரு ஒப்புக சீட்டு எண் உருவாக்கப்படும். அந்த எண் வரி செலுத்துபவரால் வங்கியில் பணம் செலுத்தும்போது வழங்குவதற்காகத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.

செயல்முறை

படிவம் தாக்கல் செய்யப்பட்டு மற்றும் வருமானவரி அதிகாரிகளுக்குப் பணம் செலுத்தப்பட்ட பிறகு, ஒப்புதலுக்கான படிவம் 26QB அல்லது படிவம் 16B ஆகியன வரி செலுத்துபவரின் இணையத் தளங்களில் உட்சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதார பணத்திலிருந்து வரிப்பிடித்தம் செய்த தொகையை வைப்பு நிதியில் செலுத்தியதற்கான சான்றாகச் சொத்து வாங்கியவரால் சொத்து விற்றவருக்குப் படிவம் 16B கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

விவசாய நிலங்களுக்கு விலக்கு

விவசாய நிலங்களை வாங்கும் இந்த விதிமுறைகளின் தேவைகள் விலக்கப்படுகிறது.

தவனை முறை வரி செலுத்துதல்

கருதப்பட்ட தொகை தவணை முறையில் செலுத்தப்பட்டால் ஆதாரப் பணத்திலிருந்து வரிப்பிடித்தமும் ஒவ்வொரு தவணையிலும் கழிக்கப்படும்.

பான் இல்லை என்றால் கூடுதல் வரி

ஒரு வேளை சொத்து விற்றவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தமானது 20% கழிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paperwork required to handle TDS on sale of property

Paperwork required to handle TDS on sale of property
Story first published: Saturday, May 6, 2017, 14:49 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns