‘ரஜினி’யிடம் இருந்தும் ‘இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி’யிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..!

By: V N Janakiraman
Subscribe to GoodReturns Tamil

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் சிலர் பில்லியன் கணக்கில் பணம் சேர்த்த பின்னரும் செலவழிப்பதில் எச்சரிக்கையுடன் சிக்கனமாகவும் இருந்து வருகிறார்கள்.

ரஜினி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, வாரன் பப்பெட், அசிம் பேரேம்ஜி, ஷிவ் நாடார் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் அவர்களுடைய சிக்கனப் பழக்க வழக்கங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் நாம் இங்குப் பார்ப்போம்.

செலவழிக்கும் முன் சேமிப்பு, முதலீடும்

பப்பெட் கூறுகிறார், " நீங்கள் உங்களுக்குத் தேவையில்லாதவற்றை வாங்கினால், சீக்கிரமே உங்களுக்குத் தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும்." பெரும்பான்மையான செல்வந்தர்கள் தங்களுடைய வருமானத்தில் 2௦% வரை முதலில் சேமிப்புகளிலும், முதலீடுகளுக்காகவும் செலவு செய்து பிறகுதான் மற்ற செலவுகளை மேற்கொள்வார்கள்.

நீங்கள் குறைவாகச் சம்பாதித்தாலும், சேமிக்கும் பழக்கத்தால் நீங்கள் உங்கள் ஓய்வு காலம் நெருங்கும்போது போராட வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு குறிப்பிட்ட தொகையைத் திடீரென்று ஏற்படும் அவசர செலவுகளுக்காகச் சேமித்துத் தனியாக வைக்கப் பழக வேண்டும்.

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

உங்கள் முதலீடுகள் ஒரு தன்நிகழ்வாக, தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அத்தியாவசிய செலவினங்களை மாதத்தின் முதல் வாரத்திலேயே முடித்து விட வேண்டும். ஆறு மாதங்களுக்கான மாதாந்திரச் செலவுத் தொகை அளவிற்கு அவசரக் காலங்களுக்காகச் சேமித்து வைக்க வேண்டும்.

அவர்கள் துணிமணிகள், காலணிகள் மற்றும் உணவிற்காகக் குறைவாகச் செலவு செய்வார்கள்

கெட்டிக்கார செல்வந்தர்கள் ஆடம்பர துணி வகைகளிலோ, வணிகப் பெயருள்ள காலணிகளையோ அல்லது உப பொருள்களையோ தங்களுக்காகவும், தங்கள் குழந்தைகளுக்காகவும் வாங்க மாட்டார்கள். நிகழ் காலத்தில் மற்றவர்களுக்கு எதிரே பணக்காரர்களாகக் காட்டிக்கொள்ளத்தக்க பொருள்களை விட நீண்ட காலம் வைத்திருக்கக்கூடிய பொருள்கள், எதிர்காலத்திற்குக் கண்டிப்பாகத் தேவையான பொருள்கள் ஆகியவற்றிற்காகத்தான் செலவிடுவார்கள்.

நாராயண மூர்த்தியும் ரஜினியும்

இந்தக் காரணங்களினால்தான் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியும், திரைப்பட நட்சத்திரம் ரஜினிகாந்த்தும் எளிமையான ஆடைகளையே அணிகிறார்கள்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

3 முதல் 5 % க்கு மேல் ஆடைகளுக்காகவும், 5% க்கு மேல் விடுமுறைகளுக்காகவும் மற்றும் 15% க்கு மேல் உணவிற்காகவும் செலவு செய்யாதீர்கள். இருப்பு உடைமைகளான சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். துணிகளிலோ, மதிப்பு குறைந்து கொண்டே வரும் பொருள்களின் மீதோ முதலீடு செய்யாதீர்கள்.

செலவழிப்பார்கள் ஆணால் வீணடிப்பதில்லை

பெரும் பணக்காரர்களுக்கு ஒரு தனித்திறமை இருக்கும். அவர்கள் செலவழிப்பார்கள் வீணடிப்பதில்லை. இதன் பொருள், அவர்கள் எளிமையான வீடுகளில்தான் வசிப்பார்கள், சாதாரணக் கார்களையே ஓட்டிச் செல்வார்கள். விமானத்தில் பொருளாதார வகுப்பிலேயே பறப்பார்கள். பேர்க்க்ஷயர் ஹதாவே நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலரான வாரேன் பப்பெட் மற்றும் மெக்சிகன் டைகூன் நிறுவன முதன்மை நிர்வாக அலுவலர் கார்லோஸ் ஸ்லிம் ஆகியோர் உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும், ஆரம்பக்கால வீடுகளிலேயே பல ஆண்டுக்காலம் வாழ்ந்து வந்தனர்.

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி போர்ட் எஸ்கார்ட் மற்றும் டோயோடோ கோரோல்லா போன்ற சாதாரணக் கார்களையே ஓட்டிச் செல்வார்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

தவணையைச் சரியாகச் செலுத்த முடியாதபோது கடனில் வீடு வாங்காதீர்கள். கடனோ, வாடகையோ வீட்டின் மீது உங்கள் வருமானத்தில் 40% க்கு மேல் செலவழிக்காதீர்கள். உங்கள் வருமானத்தில் 5% க்கு மேல் கார் கடனுக்குச் செலவழிக்காதீர்கள். நிதிச்சுமையைக் கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்.

ரொக்க பணம், கிரெடிட் கார்டு பயன்படுத்துவது

அவர்கள் அதிகமாக ரொக்கம் எடுத்துச் செல்ல மாட்டார்கள். கிரெடிட் கார்டு பயன்படுத்துவார்கள்.

அமெரிக்க எண்ணெய் சக்கரவர்த்தித் தி பூனே பிக்கென்ஸ் நீங்கள் வாங்க வேண்டிய பொருளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு ரொக்கம் எடுத்துச் சென்றால் போதுமானது, என்று கூறுகிறார். பெரும்பான்மையான வசதி படைத்தவர்கள் அதிக ரொக்கம் எடுத்துச் செல்வதில்லை. கிரெடிட் கார்டுகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் அட்டை அதிகம் செலவழிக்கச் செய்யுமா என்ன? ஒழுக்கத்துடன், தேவைக்கு வாங்கி, முறையாகத் திருப்பிச் செலுத்தினால் அதைவிடப் பயன் தருவது வேறொன்றுமில்லை.

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

உங்கள் செலவுகளை நல்ல முறையில் கண்காணிக்க உதவும் கிரெடிட் கார்டுகளையே பயன்படுத்துங்கள். அவை பரிசுகள், பயன்களை விடக் கூடுதல் பணத்தைச் சில நேரங்களில் நமக்கு வழங்கும்.திருட்டிலிருந்து நமக்கு மிகப் பெரிய பாதுகாப்பை அவை நமக்குத் தரும்.

விலையை விடத் தரத்திற்கு மதிப்பளிப்பார்கள்.

இப்பழக்கம் சிக்கனத்திற்கு எதிரானதாகக் கருதப்பட்டாலும், உங்கள் பணத்தைச் சேமிப்பது இதுதான். அவர்கள் நிறையக் கிடைக்கிறதென்று தரம் குறைந்தவற்றை வாங்க மாட்டார்கள். அதனால் நஷ்டம்தான் ஏற்படும். விலை குறைவான வீட்டு உபயோக பொருள்களை நீங்கள் வாங்கினால், அவற்றைப் பராமரிக்கவும், பழுது பார்க்கவும் நிறையச் செலவு செய்வதோடு, சீக்கிரத்திலேயே அந்தப் பொருளையே புதிதாக வாங்கவும் செலவு செய்ய வேண்டி வரும்.

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

ஒரு பொருளை வாங்கும் முன் விலை மற்றும் மதிப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். துணிகள், விலை உயர்ந்த பொம்மைகள் போன்ற ஒன்று அல்லது இரண்டு முறைகளுக்கு மேல் பயன்படுத்தாத சில பொருள்களை வாங்காதீர்கள்.

தள்ளுபடிகள், அடையாளச் சீட்டுகள் போன்ற விலை குறைப்புகளை நாடுவார்கள்

செலவழிப்பதிலும் சில நன்மைகள் உண்டு. வசதி படைத்தவர்கள் தள்ளுபடிகள், கூப்பன்கள், பரிசுகள், லோயல்ட்டி பயிண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் செலவுகளைக் குறைப்பார்கள். சிறு தள்ளுபடிகளும் சேர்த்துப் பார்க்கும்போது பெரும் தொகையாகலாம்.

அமெரிக்க நட்சத்திரம் க்ரிச்சென் பெல் லும் சரி, நமது இந்திய விப்ரோ பிரேம்ஜியும் சரி, அவசியமில்லாத மின் விளக்குகளை அணைக்கப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவார்கள்.

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

பணத்தைத் திரும்பப் பெறும் வசதி மற்றும் தள்ளுபடிகள் உடைய PAYTM போன்ற மொபைல் செயலிகளைப் பயன்படுத்துங்கள்.
பயணங்களின்போது உள்ளூர் தள்ளுபடி வழங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து செலவிட Nearbuy.com என்ற இணையவெளியை தொடர்ந்து பாருங்கள்.

தர்ம காரியங்களுக்குக் குறைவாகச் செலவிடுவார்கள்

பிரேம்ஜி, HCL சேர்மன் ஷிவ் நாதர் மைக்ரோசாப்ட் டின் பில் கேட்ஸ் ஆகியோர் பெரும் தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தருவதைப் பார்த்து, நடுத்தர வர்க்கத்தினரும் அதிகமாகத் தொண்டு நிறுவனங்களுக்குத் தானம் தருகின்றனர்.

இதிலிருந்து தெரிவது பணக்காரர்கள் அவர்கள் வருமானத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் தானம் தருகின்றனர். நம்மைப் போன்றோர்தான் நமது வருமானத்தை விட அதிகம் தானம் தருகின்றனர்.

 

கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

உங்கள் எதிர்காலத்திற்குச் சேமிக்கவும், முதலீடும் செய்து விட்டு பிறகு தானம் செய்யுங்கள். தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை தரும்போது வருமான வரிச் சட்டம் 80 G படி வரிச் சலுகைக் கோரிப் பெறுங்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும் என்ற பழமொழி நினைவிலிருந்தால் சரி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Seven frugal habits of the rich you can adopt

Seven frugal habits of the rich you can adopt
Story first published: Sunday, May 21, 2017, 17:13 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns