இந்த வருஷம் போனஸ் வாங்கிய அதிர்ஷ்டசாலி பேர்வழிகளில் நீங்களும் ஒருவரானால், இதோ உங்களுக்காக அதை எப்படி திறம்பட முதலீடு செய்வது என்பதைப் பற்றிய குறிப்பு. இது உங்கள் கால அவகாசம், தைரியமான அணுகுமுறை (ரிஸ்க் எடுத்தல்) மற்றும் உங்கள் வருமான வரி வரம்பு ஆகியவற்றைப் பொறுத்தது.
நீங்கள் ஒரு மிகப் பெரிய கடனை எடுத்திருந்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
கடன்
1. கிரெடிட் கார்டு நிலுவைகளைச் செலுத்திவிடுங்கள்
2,. தனி நபர் கடன் அல்லது பர்சனல் லோனை செலுத்தி முடித்துவிடுங்கள்
3. வீட்டுக் கடனை முடித்துவிடுங்கள்
கடன் இல்லை என்றால் என்ன செய்யலாம்?
ஒரு வேளை அவ்வாறு எந்தக் கடனும் இல்லையென்றால் நீங்கள் பின்வருமாறு செய்யலாம்:
1-3 வருடம் வரையிலான கால வரம்பு
குறுகியகால கடன் நிதி எனப்படும் டெப்ட் ஃபண்ட், வரையறுக்கப்பட்ட நிதித் திட்டங்கள், நிரந்தர வைப்பு அல்லது முதலீடற்ற நிதித் திட்டங்களில் (ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்ஸ்) முதலீடு செய்யலாம்.
3-5 வருடம் வரையிலான கால வரம்பு
உங்கள் முதலீடுகளைச் சந்தை அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையைக் கருத்தில் கொண்டு திட்டமிடுங்கள்.
மிகக் குறைந்த அபாய நிலை (நஷ்டப்பட விருப்பமில்லை)
உங்கள் வருமானம் வரிக்குட்பட்டதல்ல என்றால், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், நிரந்தர வைப்பு மற்றும் செல்வ மகள் (சுகன்யா) திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
உங்கள் வருமானம் குறைந்தது 5% வரிக்கும் அதிகமாக இருந்தால் வரிசேமிப்பை கருத்தில் கொள்ளவும். 80சி பிரிவின் கீழ் வரும் விலக்குகளை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், குறுகியகால கடன் நிதித் திட்டங்கள் மற்றும் ஆர்பிட்ரேஜ் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம். 80சி பிரிவில் பயன்படுத்த மீதம் சற்று வாய்ப்பிருப்பவர்கள், வரிவிலக்கு தரும் வைப்புகளையும், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் சுகன்ய சம்ரிதி (செல்லமகள்) திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
சராசரி அபாயங்களை தாங்கக் கூடியவர்கள் (5-10% சதவிகித மதிப்பிழப்பு பரவாயில்லை)
உங்கள் வருமானம் வரிக்குட்பட்டதில்லை என்றால், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், மாதாந்திர வருவாய்த் திட்டங்கள், ஹைபிரிட் டெப்ட் ஃபண்ட் எனப்படும் நவீன கடன் அடிப்படை முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
உங்கள் வருமானம் 5% வரிவரம்பிற்கும் அதிகமாக இருந்தால் 80சி பிரிவு சலுகைகளை முடித்துவிட்டவர்கள் மாதாந்திர வருவாய் திட்டம், ஹைபிரிட் ஃபண்ட் ஆகியவற்றிலும் 80சி பிரிவில் மீதம் இருந்தால் பங்குமுதலீடுகள் உள்ளடக்கிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் திறனுள்ளவர்கள் (10-20% மதிப்பிழப்பு கூட பரவாயில்லை)
வரியில்லா வருவாய் உள்ளவர்கள் என்ன செய்யலாம்?
வரியில்லா வருவாய் உள்ளவர்கள் பங்கு நிதிகளிலும் (ஈக்விடி ஃபண்ட்) பாலன்ஸ்ட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்
5% வரி வரம்பிற்கு மேற்பட்டவர்கள், 80சி பிரிவு வரம்பைப் பயன்படுத்தாதவர்களாக இருப்பின் பங்கு நிதிகளிலும் (ஈக்விடி ஃபண்ட்) பாலன்ஸ்ட் ஃபண்டுகளிலும் 80சி பிரிவில் மீதம் இருந்தால் பங்குமுதலீடுகள் உள்ளடக்கிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பங்கு சந்தை முதலீடு
அதிக அபாயம் இருந்தாலும் அதிக வருவாய் வேண்டுமென்றால், பங்குகள், நடுத்தர வரம்பு (மிட் கேப்) நிதித்திட்டங்கள் மற்றும் பல்நோக்கு வரம்புள்ள பங்கு நிதிகளில் முதலீடு செய்யலாம்.
நடுத்தர அபாயம் உள்ள பங்குகள்
உங்களுக்கு நடுத்தர அபாயம் போதும் என்றால், நீண்ட வரம்புடைய (லார்ஜ் கேப்) மற்றும் பல்நோக்கு பங்கு நிதிகள் மற்றும் பங்குகள் உள்ளடக்கிய பாலன்ஸ்ட் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
ஹைபிரிட் ஃப்ண்ட்
பணவீக்கத்தை சரிக்கட்டும் வருவாயை நீங்கள் எதிர்பார்ப்பவரானால், மாதாந்திர வருவாய்த் திட்டம், ஹைபிரிட் ஃப்ண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
பாதுகாப்பாக எங்கு முதலீடு செய்யலாம்?
உங்களுக்கு முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்றால், நிரந்தர வைப்பு, தேசிய சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் சுகன்ய சம்ரிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். அடுத்து நாம் முக்கியாக என்னவெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும் என்பதை இங்குப் பார்ப்போம்.
உங்கள் முதலீட்டுப் பகிர்வு
உங்கள் முதலீட்டு முடிவுகள் முதலீட்டுப் பகிர்வையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும். நீண்டகால முதலீடு என்றால், உங்கள் பகிர்வு ஏற்ற இறக்கங்களுக்கு இடந்தரும் பட்சத்தில் பங்கு முதலீட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
திட்டமிட்ட முதலீடு
சிஸ்டமாடிக் இன்வெஸ்டிங் எனப்படும் இதில் முதலீடு பங்குகளில் அல்லது பங்கு நிதிகளில் பெரும் தொகைகளில் செய்யக்கூடாது. மாறாகக் குறுகியகால கடன் நிதி மற்றும் சிஸ்டமாடிக் டிரான்ஸ்பர் திட்டங்களில் சிறிய அளவுகளில் முதலீடு செய்து (5000-6000 ரூபாய்) அதை மாதாமாதம் பங்கு முதலீட்டுக்கு மாற்றுங்கள்.
வருவாய் மூல வரி (டிடீஎஸ்)
வங்கி வைப்பின் மீதான வட்டி வருடத்திற்கு 10000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் வங்கி அதில் 10.3% வரியைப் பிடித்தம் செய்யும். எனினும் உங்கள் பான் எண்ணைக் குறிப்பிடவில்லையென்றால் அது 20.6% அளவிற்குப் பிடிக்கப்படும். தவறான பான் எண்ணும் அபராதத்திற்கு வழிவகுக்கும்.
வரி பிடித்தம்
உங்கள் வருவாய் வரி வரம்பிற்கு உள்ளாக இருப்பின், நீங்கள் செலுத்திய வரி உங்களுக்கு வரிவிவரத் தாக்கல் செய்தால் திரும்பக் கிடைக்கும். பிடித்தத்தைத் தவிர்க்க படிவம் 15ஜி பூர்த்தி செய்து தரவும். மூத்த குடிமக்கள் 15எச் படிவம் தரவேண்டும்.
வரவில் வரி
நீண்டகால பங்கு மற்றும் பாலன்ஸ்ட் ஃப்ண்ட் முதலீட்டு வரவுகளுக்கு வரிவிலக்கு உள்ளது. கடன் நிதி மற்றும் வரையறுக்கப்பட்ட கால அவகாசம் மூன்று ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கும் திட்டங்களுக்கு பணவீக்க விகிதாச்சார அடிப்படையில் சலுகைகள் உண்டு.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications