English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

துபாயில் உங்களுக்கு ஏற்ற கிரெடிட் கார்டினை தேர்வு செய்வது எப்படி..?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சரியான கிரெடிட் கார்ட் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மன அழுத்தம் தரக்கூடியது என்பதை அனைவரும் அறிவோம். நீங்கள் பயன்படுத்தினாலும் இல்லை எனினும் கட்டணம் சேர்ந்துகொண்டே இருந்தாலோ அல்லது உங்கள் செலவினங்களுக்குப் பயன் தருவதாக இல்லை என்றாலோ சரிவராதல்லவா !

எனவே இங்குத் துபாயில் உங்களுக்கான சிறந்த கிரெடிட் கார்டைத் தேர்வுசெய்வது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் செலவு பழக்கத்தைக் குறிப்பெடுக்கவும்

எந்தக் கிரெடிட் கார்ட் வாங்க வேண்டும் எனப் பரிசீலிப்பதற்கு முன்னர், உங்கள் செலவு பழக்கங்கள் பற்றி நீங்கள் யோசனை செய்ய வேண்டும். சாப்பாடு அல்லது பொழுதுபோக்குகளில் நிறையச் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் செலவினங்களில் கொள்முதல் சாமான்கள் மற்றும் பயன்பாடுகளிலா ? வீட்டிலிருந்து பயணிக்கும் போது விமான டிக்கெட்டுகள் அல்லது பர்சேஸ் செய்வதில் செலவழிக்கிறீர்களா? ஒருவேளை உங்கள் பிள்ளைகளின் பள்ளி கட்டணம் செலுத்துவது உங்கள் மிகப்பெரிய தொடர்ச்சியான செலவா என யோசிக்க வேண்டும்.

உங்களுக்கு உண்மையில் கிரெடிட் கார்டு தேவைப்படுமா, கட்டாயம் தேவையெனில் என்ன வகையான அட்டை உங்களுக்கு வேண்டும் என ஆய்வு செய்யத்தான் இந்தக் குறிப்பு . நிச்சயமாக அனைவருக்கும் கிரெடிட் கார்ட் தேவை இல்லை

 

கட்டணம் உண்டா அல்லது இல்லையா

கிட்டத்தட்ட எல்லா வங்கிகளும் ஃப்ரீ ஃபார் லைஃப் கிரெடிட் கார்ட் கொடுக்கின்றனர். ஆனால் அவற்றை வெளிப்படை காரணங்களுக்காக நீங்கள் பெறவதை அவர்கள் விரும்புவதில்லை. எனவே ஒரு வங்கி ஒரு கார்டை விளம்பரப்படுத்த அழைக்கும்போது, வருடாந்திர கட்டணங்கள் இருக்கிறதா என்பது தான் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி. சில கார்டுகள் Dh2,000 வருடாந்திர கட்டணங்கள் வசூலிக்கின்றனர். இருப்பினும், இந்தக் கார்டுகளும் சில நபர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் சில நன்மைகளை வழங்குகின்றன.

எடுத்துக்காட்டாக, தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் சில நபர்கள், பயணக் கட்டண புள்ளிகளைச் சேர்த்து டிக்கெட் விலைகள் மற்றும் விமான நிலைய ஓட்டல்களில் கவர்ச்சிகரமான சலுகைகளைக் கிரெடிட் கார்ட் மூலம் பெற்றுப் பயனடைவார்கள்.

 

ஒற்றை இலக்க வட்டி விகிதங்கள்?

உங்களுடைய நிலுவையிலுள்ள கிரெடிட் கார்ட் தொகையின் ஒற்றை இலக்க வட்டி விகிதங்கள் மிகவும் நிம்மதியைத் தரும்; இது மாத வட்டி விகிதங்களே மற்றும் வருடாந்திர இலாப விகிதம் (APR) சில வங்கிகளுக்கு 48 சதவிகிதமாக வரக்கூடும் என்பதை நீங்கள் அறியவேண்டும்.

இஸ்லாமிய வங்கிகள் ஷரியா-இணக்கமானவை, எனவே வட்டி அல்லது லாபம் நிலுவையில் உள்ள தொகைக்கு விதிக்கப்பதடுவதில்லை. உங்கள் கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது இதையும் நீங்கள் நினைவில் கொள்ளலாம்.

 

பயன்கள் மற்றும் வெகுமதிகள்

ரொக்கம், வெகுமதி, ஏர் மைல்கள், போனஸ் புள்ளிகள் - இவையெல்லாம் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பெறுமக்கூடிய பல விஷயங்கள்., நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன நன்மைகள் வேண்டும் என்பது தான் முதல் படி.

இந்தப் பயன்களில் சில குறைந்தபட்ச செலவு செய்பவர் அல்லது குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வருகின்றன; நீங்கள் முடிவெடுப்பதற்கு முன்னரே இவற்றைச் சரிபார்க்கவும். மேலும், நீங்கள் பதிவு செய்யும் போது, பெரும்பாலான வங்கிகள் இன்ட்ரோடக்டரி ஆஃபர்கள் தருகின்றன. குறைந்த செலவிற்கான சிறந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஒரு சில வங்கிகளை அழைத்துக்கேட்கலாம்

 

ஒன்றா அல்லது மூன்றா

பெரும்பாலான வங்கிகள் மெயின் கார்ட்டுகளுடன் ஒரு கூடுதல் கார்ட் அல்லது ஒரு ஆன்லைன் கொள்முதல் கார்ட் போன்ற பல கார்டுகளை வழங்குகின்றன. இதைப் பெறலாமா இல்லையா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

உங்களுக்கு எதற்குக் கார்ட் தேவைப்படுமோ அதற்கு மட்டும் செலவிடுங்கள். உங்களிடம் ஏற்கனவே இருந்தால் தேவையானதை மட்டும் செயல்படுத்தவும்; பெரும்பாலான கார்டுகள் ஒரு எளியச் செயல்படுத்தும் முறையைக் கொண்டுள்ளன. உங்களுடன் மற்ற கார்டுகளை எடுத்துச் செல்லாதீர்கள்.

 

வெளிநாட்டுச் செலவுகள்

வெளிநாட்டிலும் உங்கள் கார்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வங்கியில் வெளிநாட்டுப் பயன்பாட்டு விகிதங்களைப் பற்றி விசாரிக்கவும். ஒவ்வொரு முறை அட்டை உபயோகிக்கப்படும் போதும் செயலாக்கக் கட்டணமாகச் சிலர் உங்கள் செலவில் 2 அல்லது 3 சதவீதம் வரை வசூலிக்கலாம்.

கிரெடிட் ஷீல்ட்

உங்கள் கிரெடிட் ஷீல்ட் தேர்வை நீங்கள் செயல்படுத்தினால், இறப்பு, காயம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எந்தத் துரதிர்ஷ்டமான சூழ்நிலைகளிலும் பெறுவதற்கு ஒரு சிறிய தொகை தொடர்ச்சியாக வசூலிக்கப்படும். சில சூழலில் இதனை நீங்கள் செலுத்த முடியாமல் போகலாம். இது உங்கள் கிரெடிட்கார்டுக்கு ஒரு காப்பீடாகும். கிரெடிட் கார்டை பெரிய செலவுகளுக்குப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அந்தத் தேர்வை நீங்கள் செயல்படுத்த வேண்டாம்.

தவணை ஆஃபர்கள்

பெரும்பாலான முன்னணி வங்கிகள் மூன்று மாதங்கள் வரை கொள்முதல்களுக்கு வட்டி இல்லாத இலவச தவணைத் திட்டங்களை வழங்குகின்றன. சிறந்த தவணை விருப்பங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு கார்டுகளையும் சரிபார்க்க சில விண்டோ ஷாப்பிங் செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் கார்டைப் பெற்றுக்கொண்ட பிறகு தங்கத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என நீங்கள் நினைத்தால், பெரும்பாலான விற்பனையாளர்களால் காட்டப்படும் பட்டியலை மிகவும் பொதுவான கார்டுகளையும் அவற்றின் திட்டங்களையும் பார்க்கவும்.

சின்னச் சின்னக் குறிப்புகள்

நாம் எப்பொழுதும், சிறிய குறிப்புகள் மற்றும் நிபந்தனைகளைப் புறக்கணிக்கிறோம், நாம் அனைவரும் 'ஒப்புக்கொள்கிறோம்' பகுதியைப் பார்க்காமலே விதிகளை ஒப்புக்கொள்கிறோம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய கடைகளில் செலவு செய்யும் விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா எனச் சரிபார்க்கவும். எந்தவொரு காலத்திற்கும் அட்டை உபயோகிக்காமல் இருந்தால் கட்டணம் இருக்கிறதா எனச் சரிபார்க்கவும். ஏதேனும் சலுகையை அல்லது ஊக்குவிப்புக்காகக் கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதல் செலவுகள் உள்ளனவா எனப் பார்க்கவும்?

இது முடிந்தபிறகு, உங்கள் அட்டையைப் பெறுவதற்குப் புள்ளியிடப்பட்ட வரிகளில் கையொப்பமிடலாம். கிரெடிட் கார்ட் வைத்திருப்பது வசதி தான், ஆனால் பெருகும் கடன் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையிலுள்ள அளவு மிக அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் கிரெடிட் கார்டை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு நியாயமான தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும் வரை உபயோகிக்காதீர்கள். .

இவற்றில் சில தகவல்கள் யூஏஇ யின் இஸ்லாமிய வங்கி பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

UAE: 9 tips to choose the best credit card for you

UAE: 9 tips to choose the best credit card for you
Story first published: Saturday, June 10, 2017, 12:35 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC