வெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய நாணய பரிமாற்ற முறைகள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உங்கள் படிப்புக்கு நீங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் வெளிநாட்டு நாணய பரிமாற்றங்களைச் செய்ய பல்வேறு வழிமுறைகளை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அவற்றை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ப்ரீபெய்டு ஃபாரெக்ஸ் கார்டுகள்

ப்ரீபெய்டு அட்டைகள் வெளிநாடுகளுக்கு பணத்தை கொண்டுபோவதற்கு ஒரு வசதியான மற்றும் பாதுகாப்பான வழி ஆகும்.ப்ரீபெய்டு அட்டைகள் அனைத்து முன்னணி வங்கிகள் மற்றும் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன.

"அந்நிய செலாவணி வெளிநாட்டுக்கு செல்லும் மிகச் சிறந்த மற்றும் பாதுகாப்பான வழி. சிப் மற்றும் பின் ஆகியவை இதில் உள்ளதால் பிற உபகரணங்களை விட பாதுகாப்பானவை,

 

கட்டணம்

ப்ரீபெய்டு அட்டைகளை சில நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன இருப்பினும் சில நிறுவனங்கள் அட்டை வழங்குவதற்காக ரூபாய் 100-250 என்று கட்டணத்தை வசூலிக்கின்றன. தினசரி வாழ்க்கை செலவுகள், ஷாப்பிங், முன்பதிவு விமான டிக்கெட் போன்றவற்றிற்காக ப்ரீபெய்டு கார்டுகள் பயனுள்ளதாக இருக்கும்.

சில கல்லூரிகளும் இந்த அட்டைகள் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்க்கு அனுமதிக்கின்றன. விற்பனை முனையத்தில் ப்ரீபெய்ட் கார்டுகளை ஸ்வைப் செய்வது கட்டணத்தை ஈர்க்காது.

 

டாப் அப்

மேலும், நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன் பரிமாற்ற விகிதத்தை லாக் செய்ய முடியும். "முன்கூட்டியே செலுத்தப்பட்ட அட்டையை கொள்முதல் நாளில் பொருந்தக்கூடிய அந்நிய செலாவணி விகிதம் ஒன்றாகும். தேவைக்கு ஏற்ப, பெற்றோர் ப்ரீபெய்ட் கார்டுகளில் பணத்தை டாப் அப் செய்யலாம்.
 
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏடிஎம்களில் இருந்து சுமார் 20-40,000 ரூபாய் வரையிலான பணத்தை திரும்பப் பெற அனுமதிக்கின்றன. சில வங்கிகள் திரும்பப் பெற கட்டணம் வசூலிக்கக்கூடும்.

ஃபாரின் கரென்சி டிமாண்ட் டிராப்ட் (FCDD) 

அந்நிய செலாவணி டிமாண்ட் டிராஃப்ட் (எஃப்சிடிடி)வுக்கு ரூ 300-500 செலவாகும், எஃப்‌சி‌டி‌டி அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மிகவும் திறமையான வழிகளில் ஒன்றாகும். இது இடைத்தரகர் வங்கி கட்டணங்களை சேமிக்கிறது, மற்றும் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தபடுகிறது.FCDD ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் அதற்க்குள் பயனாளியின் வங்கியில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இரண்டு வாரங்கள்

FCDD ஆனது பல்கலைக்கழக மற்றும் விடுதி கட்டணம் செலுத்துவதற்க்கு சிறந்தது. இருப்பினும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது என்னவென்றால், FCDD வழியாக பணம் செலுத்துபவரின் கணக்கில் பணம் செலுத்துவதற்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகும். எனவே, உடனடியாக பணம் செலுத்தப்பட வேண்டிய இடத்தில் இதை பயன்படுத்த முடியாது.
 
FCDD மூலம் கட்டணம் செலுத்துவது அதிக நேரத்தை வீணடிப்பதால் பல பல்கலைக்கழகங்கள் இப்போது கட்டணம் செலுத்துவதற்கான வேறு மாற்று முறைகளை பரிந்துரை செய்கின்றன. மேலும், கருவி (டிமாண்ட் டிராஃப்ட் DD) சேதமடைந்தால், பணத்தை திருப்பிச் செலுத்துவது நீண்ட காலமாகவும் சிக்கலாகவும் இருக்கும்.

வைர் டிரான்ஸ்பர்

வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்க்கு இது ஒரு விரைவான வழி ஆகும், வைர் டிரான்ஸ்பர்கள் பலவிதமான கட்டணங்கள் செலுத்துவதற்க்கு பயன்படுத்தப்படுகின்றன, உதாரணமாக- கல்லூரி விண்ணப்ப கட்டணம், கல்வி, விடுதி கட்டணம் போன்றவை. "பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு சுமார் 24-48 மணி நேரம் ஆகும். இந்த பரிவர்த்தனை கண்காணிக்க ஒரு குறிப்பு எண் உடனடியாக வழங்கபடும்". என்கிறார் செண்ட்ரம் டைரக்ட் தலைவர் மற்றும் பொருளாளர், எம்.பீ. ஹரிபிரசாத்,.
 
அனுப்புநர் மற்றும் பெறுநர் ஆகியோரிடமிருந்து வங்கிகள் கமிஷன் கட்டணங்களை வசூலிக்கபடலாம்.

பயணியின் காசோலை (Travellers cheque)

பழமையான விருப்பங்கள் மத்தியில், பயணிகள் செக் (டிசி) அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் நடத்த ஒரு பாதுகாப்பான வழி ஆகும். அனைத்து பெரிய நாணயங்களிலும் (currencies) TCகள் கிடைக்கின்றன. "திருட்டு அல்லது இழப்பு நேரிட்டால் மற்றவர்கள் இதனை பயன்படுத்த முடியாது. அவை ரொக்கத்தை விட சிறந்த மாற்று விகிதங்களை வழங்குகின்றன, "என்கிறார் QuickForex தலைமை நிர்வாக அதிகாரி, யஷ் சர்மா.

டிசி-களுக்கு காலாவதி தேதி இல்லை. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் மட்டுமே பணத்தை பெற்றுக்கொள்ளமுடியும். "மேலும், கையொப்பம் பொருந்தாவிட்டால், பயணிகளின் காசோலைகள் செல்லாததாகிவிடும்" என்கிறார் மோத்வானி.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

4 ways students can carry money abroad

4 ways students can carry money abroad - Tamil Goodreturns | வெளிநாட்டுக்கு செல்லும் மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய நாணய பரிமாற்ற முறைகள்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, July 14, 2017, 19:18 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns