கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

கயல்விழி கல்லுரி படிப்பை முடித்த பின் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்காக சேர்ந்தால். வேலை சேர்ந்த சில நாட்களிலேயே அவளுக்காக வங்கியில் ஒரு சம்பள கணக்கைத் திறந்தாள், அப்பொழுது வங்கியில் ஒரு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை வழங்கினர். அதை பெற்றுக்கொள்ள அவளுக்கு சிறிது தயக்கம்.

கிரெடிட் கார்ட், பெறப்பட்ட கடனுடன் வட்டியையும் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிலையில் மட்டும், வங்கியில் இருந்து பணத்தை கடன் வாங்க அனுமதிக்கின்றது. மறுபுறம் பார்த்தால் டெபிட் கார்டுகள் எளிமையானவை. நம் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் பணத்தை உடனடியாக உபயோகிக்க உதவும்.

அவளது குழப்பம் என்னவென்றால், கடைக்கு செல்லும்போது தனது கிரெடிட் கார்டை உப்யோகிக்க வேண்டுமா அல்லது டெபிட் கார்ட்டையா..? இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளதா? ஓன்று மற்றொன்றை விட சிறந்ததா என்பது தான். இத்தகைய கேள்வி பலருக்கும் உண்டு.

கிரெடிட் கார்ட்

கிரெடிட் கார்ட் என்பது ஒரு கடன் வடிவமாகத்தான் கருதப்பட வேண்டும். கிரெடிட் கார்டு பயன்பாடு என்பது நம்மிடம் இல்லாத பணத்தை திரும்ப செலுத்துவோம் என்ற வாக்குறிதியுடன் செலவு செய்வது.

அதே சமயம் அந்தத் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்ட் விஷயத்தில் மனதில் வைக்க வேண்டிய முக்கிய விஷயம், சரியான நேரத்தில் கடன்களை திரும்பச் செலுத்துவது ஒரு நல்ல கடன் வரலாற்றை உருவாக்க உதவுகிறது, அது நீங்கள் மேலும் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது உதவும்

 

நன்மை தீமையாகும்

இருப்பினும், திருப்பிச் செலுத்துவதற்கான நேரத்தை தவற விட்டால் , அதே நன்மை தீமை ஆகும் வாய்ப்பு உள்ளது. . இதன் காரணமாகத்தான் ஒருவேளை கிரெடிட் கார்டுகள் வழக்கமாகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் வெகுமதி புள்ளிகள், இலவசங்கள் மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றுடன் வருகின்றன போலும்.

மேலும், மோசடி, திருட்டு அல்லது டியூப்ளிகேட் கட்டணம் ஆகியவற்றில் கிரெடிட் கார்டுகளின் பாதுகாப்பு அளவு அதிகமாக உள்ளது.

 

டெபிட் கார்ட்

ஒரு டெபிட் கார்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எந்தவொரு பொருளுக்கும் அதன் மதிப்பை விட ஒரு ரூபாய் கூட கயல்விழி செலுத்தத் தேவையில்லை.

மேலும் வட்டி இல்லை என்பதால். அவளது செலவினங்களை திட்டமிடுவது மிகவும் எளிதாகிவிடும். எனினும், டெபிட் கார்டு திருட்டு போய்விட்டால், விரைவில் அறிவிக்கப்படாவிடில், அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள பணம் விரைவாக அழித்துவிடும்.

 

மாத பட்ஜெட்

பட்ஜெட்டில் பற்றாக்குறை, வட்டி செலுத்துதல் மற்றும் அதிக செலவு போன்ற பலவிதமான குறைபாடுகள் கிரெடிட் கார்டில் உள்ளன.

கயல்விழி

எனவே கயல்விழி போன்ற பலர் புதிதாக வேலைக்கு சேருவோர் பொறுப்புடன் கடன் பெற கற்றுக்கொள்ள வேண்டும். கிரெடிட் கார்டுகள் அதிக வரையறைகள் உள்ளதால், அவளுக்கு பணக்குழப்பம் ஏற்பட வாய்ப்பு குறைவு.

குழப்பம்

கிரெடிட் கார்ட் இவ்விஷயத்தில் அதிகமாக குழம்பும் வாய்ப்பை வழங்குகிறது, ஆனால் அவர் அதை நன்றாக கையாள முடியும். டெபிட் கார்டுகள், பணத்தை கையில் வைத்திராமல் அதே சமயம் கிரெடிட் கார்டின் எந்த வித வரையறையும் இல்லாமல், பணத்தை செலவு செய்ய உதவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

credit card or debit card: Which one is best..?

credit card or debit card: Which one is best..?
Story first published: Wednesday, July 12, 2017, 12:27 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns