உங்களுடைய வீட்டு பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

முறையான வீட்டு பட்ஜெட் குழந்தைகள் கல்வி, அவர்களின் திருமண திட்டம் மற்றும் நம் ஓய்வுக்கான திட்டமிடல் போன்ற இலக்குகளுக்கு பணம் சேமிக்க உதவுகிறது.

நம்முடைய பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட முடிந்தால், அத்தகைய சூழ்நிலையில், நம் சிறு சேமிப்பு கூட பெரிய நிதியியல் இலக்குகளை அடைவதற்கு உதவும்.

அதைச் செய்வதற்கு, ஒரு சேமிப்புத் தொகையினைத் தொடங்க வேண்டும். அனைத்து செலவினங்களையும் சந்தித்தபின், அவர்களது வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை சேமிப்பிற்கென ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வீட்டு பட்ஜெட்டை சிறப்பான முறையில் திட்டமிட சில குறிப்புகள் இங்கே உள்ளன.

உங்கள் செலவினங்களை எழுதுங்கள்

உங்கள் செலவினங்களில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். உங்கள் மாதாந்திர செலவுகளைக் கண்காணியுங்கள். ஒவ்வொரு சிறிய செலவையும் எழுத சாத்தியமில்லை எனில் ஒரு தோராயமான தொகையில் அந்த சிறிய செலவினங்களைச் சேர்த்து எழுதலாம்.

துல்லியமாக கூற வேண்டுமெனில், உங்கள் நிலையான மற்றும் அவ்வப்போது மாறும் அனைத்து செலவினங்களும், சரியான செலவினை கணக்கிட உதவும்.

தேவைகள் மற்றும் ஆடம்பரங்களுக்கு செலவினங்களை வேறுபடுத்துதல் முக்கியம். உதாரணமாக, மருத்துவக் காப்பீடு ஒரு தேவையான செலவு ஆகும்

 

உங்கள் இலக்குகளை பட்டியலிடுங்கள்

நீங்கள் உங்கள் பொறுப்பு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். பொதுவாக இவை ஓய்வூதியத் திட்டம், குழந்தைக் கல்வி திட்டமிடல், திருமண திட்டமிடல் மற்றும் வீடு வாங்கல் ஆகிய நான்கு பிரிவுகளில் இலக்குகளை நிர்ணயிக்கலாம்.

நீங்கள் இந்த முன்னுரிமைகள் மீது மாதாந்திர அடிப்படையில் எவ்வளவு சேமிக்க வேண்டும் என முடிவு செய்து , அதன்படி, உங்கள் ஒட்டுமொத்த செலவினங்களை செய்ய வேண்டும்,

உங்கள் குறிக்கோள் நீண்ட கால குறிக்கோள் என்றால், மாதந்தொறும் நீங்கள் சேமிக்க வேண்டிய குறைந்த அளவு தான். ஆனால், இதை நிறைவேற்றுவதற்கு மிக அதிக காலமாகும். மேலும், உங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மறையான பணப்புழக்கத்தை பராமரிக்க, நீங்கள் சரியான திசையில் உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

 

அவசரகால நிதி உருவாக்கவும்

உங்கள் வங்கி அல்லது உங்கள் பணத்தை ஒரு நாளுக்குள் எளிதில் திரும்பப் பெறக்கூடிய எந்தவொரு திரவ நிதிகளிலும் குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்கான உங்கள் செலவை பராமரிக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

கடன்களை கட்டுப்படுத்தவும்

EMI இன் மீது சரியான கட்டுப்பாடு வைக்கவும். கிரெடிட் கார்டில் வாங்கிய பல விஷயங்கள் உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை கடுமையாக பாதிக்கலாம். நீங்கள் உங்கள் வீட்டு கடனுக்கான EMI யையும்வைத்திருக்கலாம். மொத்த ஈ.எம்.ஐ தொகையை உங்கள் செலவில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக விடக் கூடாது.

அவ்வப்போது மீளமைக்கவும்

அவசியமான செலவுகள் தான் உங்கள் முன்னுரிமையாக இருக்கவேண்டும். எப்பொழுதும் உங்கள் பட்ஜெட்டிற்குள் செலவு செய்ய முயற்சிக்கவும், உங்கள் இலக்குகளை நிறைவேற்றிய பிறகு அல்லது உங்கள் வருமானம் அதிகரிகும்போது உங்கள் வரவு செலவுத் திட்டத்தை மறுசீரமைக்கவும், அவ்வப்போது ஒரு புதிய வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்கவும் முயற்சிக்கவும்.

சரியான நேரத்தில் மதிப்பாய்வு

ஒரே ஒரு முறை செய்த எந்தவொரு திட்டமிடலும் வெற்றிகரமாக இருக்காது, அத்திட்டம் காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். மீளாய்வு செயல்முறை உங்கள் இலக்குகளை நோக்கி உறுதியாக இருக்க உதவுகிறது.

மேலும் உங்கள் அன்றாட நடவடிக்கை திட்டமும் உங்கள் தினசரி ரொக்க வரம்பைத் தாண்டாமல் இருக்கும். எனவே, உங்கள் குடும்ப வரவுசெலவுத்திட்டத்தை இன்று வரை வரையவும் பின்பற்றவும் ஒரு வடிவத்தை அமைக்க முடியுமானால், ஒரு நல்ல எதிர்காலத்தை திட்டமிடலாம்.

 

வரவு செலவு திட்டம் / பட்ஜெட்

உங்கள் வரவு செலவு திட்டம் சிறப்பாக இருந்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நிதி நிலைமை நன்றாக இருக்கும். நன்கு திட்டமிடப்பட்ட வரவுசெலவுத் திட்டம் உங்கள் பணத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த நிகர மதிப்பையும் அதிகரிக்க உதவுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tips to keep your household budget on track

Tips to keep your household budget on track
Story first published: Tuesday, July 11, 2017, 17:30 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC