மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மனதில் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

கிடைக்கப் பெறும் எண்ணற்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் உங்களுக்கான ஒரு நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலாகும். பரஸ்பர நிதித் திட்டங்களை ஒப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகள் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிதிச் சந்தைகளில் கிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாகும். உங்கள் தேவைகளை எதிர் கொள்ளும் மற்றும் நல்ல வருமானத்தைத் தரக் கூடிய உள்ளாற்றலைக் கொண்டிருக்கும் ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த நிதித் திட்டங்களின் முடிவற்ற பட்டியலை நீங்கள் சோதனையிட வேண்டியது அவசியமாகும். பரஸ்பர நிதி திட்டங்களை ஒப்பிடும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளைப் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது.

உங்கள் ஃபண்டு ஹவுஸ் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மொத்த பணத்தையும் நீங்கள் விரும்பும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு உங்களுக்குப் போதுமான நம்பிக்கையுள்ள ஒரு நிதி நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டின் மீது அக்கறை கொண்டும் மேலும் அவர்களது பணத்தைத் திறம்பட நிர்வகிக்கும் ஒரு ஃபண்டு ஹவுஸ் தேடுகிறார்கள். நிதி வீடுகளால் அமைக்கப்பட்டுள்ள குறிக்கோள்கள் முதலீட்டாளர்களுக்கு அவர்களுடைய இலக்குகளை அடையவும் அவர்களுடைய வருங்காலத்தைப் பாதுகாக்கவும் உதவி புரிகிறது. குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட வில்லையென்றால், முதலீட்டாளர்கள் அந்த நிதி நிறுவனத்தின் மீத நம்பிக்கை இழக்கிறார்கள். ஒரு நிதி மேலாளர் அவருக்குக் கீழுள்ள நிதிகளை எப்படி நிர்வகிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் நிதித் திட்டங்கள் பல்வேறு சந்தை சுழற்சி நிலவரங்களின் போது எப்படிச் செயலாற்றுகின்றது என்பதை ஒருவர் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல நிதி மேலாளர் என்பவர் நிதி நிறுவனத்திற்கு மட்டும் முக்கியமானவர் அல்ல. மேலும் முதலீட்டாளருக்கும் தான்.

நிதித் தத்துவம்

ஒரு நிதி வீட்டின் நிதித் தத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது அடுத்த முக்கியமான சோதனையாகும். ஒரு தனி நபரின் முதலீடு தொடர்பாக முடிவெடுக்கும் செயல் முறையை அறிவிக்கும் மற்றும் வடிவமைக்கும் ஒரு வழி காட்டும் கொள்கை நிதித் தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நிதி வீட்டின் முதலீட்டுத் தத்துவமானது அதன் நிதித் திட்டங்கள் வெவ்வேறு சந்தை சூழ்நிலைகளில் எவ்வாறு செயலாற்றுகிறது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகிக்கிறது. நிதித் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் முதலீடு சார்ந்த முடிவுகளை எடுத்தல் நேரடியாக ஒரு நிறுவனத்தின் நிதித் தத்துவத்தின் மீது சார்ந்திருக்கிறது.

செலவுகள் மற்றும் கட்டணங்கள்.

ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சொத்து நிர்வாக நிறுவனத்தால் செலவிடப்படும் பணத்தின் அளவு அந்த நிதி நிறுவனத்தின் செலவு விகிதமாக மதிப்பிடப்படுகிறது. நிதி ஆலோசகருக்கான கட்டணம், பதிவுகளைப் பேணுதல், சட்ட ரீதியான செலவுகள், கணக்கியல், கணக்கியல் தணிக்கை கட்டணங்கள் மற்றும் பலவும் இணைந்து செலவு விகிதத்தை உருவாக்குகின்றன. ஃபோர்ட் ஃபோலியோவை அதிகமாகக் கடைதல் உயர்ந்த கட்டணங்களுக்கு வழிவகுக்கிறது. இது முதலீட்டாளரால் ஏற்றுக் கொள்ளப்படும் செலவினமாகும். மேலும் இந்தச் செலவுகள் முதலீட்டிலிருந்து கழிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ரூ 100 முதலீடு செய்திருந்தால் அந்த நிதியின் செலவு விகிதம் ரூ 1.25 ஆகும். அப்போது உங்கள் முதலீடு ரூ 98.75 ஆக இருக்கும். குறைந்த செலவு விகிதம் என்பதற்கு முதலீடு செய்வதற்கு அதிகத் தொகை கிடைக்கப் பெறுகிறது என்பது பொருளாகும்.

கிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலாகும். பரஸ்பர நிதித் திட்டங்களை ஒப்பிடும் போது மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகள் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

விளம்பரம்

ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சொத்து நிர்வாக நிறுவனத்தால் செலவிடப்படும் பணத்தின் அளவு அந்த நிதி நிறுவனத்தின் செலவு விகிதமாக மதிப்பிடப்படுகிறது. (விளக்கம்: ஷ்யாம்)

நிதிச் சந்தைகளில் கிடைக்கப் பெறும் எண்ணற்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் உங்களுக்கான ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலான விஷயமாகும். உங்கள் தேவைகளை எதிர் கொள்ளும் மற்றும் நல்ல வருமானத்தைத் தரக் கூடிய உள்ளாற்றலைக் கொண்டிருக்கும் ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்த நிதித் திட்டங்களின் முடிவற்ற பட்டியலை நீங்கள் சோதனையிட வேண்டியது அவசியமாகும். பரஸ்பர நிதி திட்டங்களை ஒப்பிடும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய பல்வேறு சோதனைகளைப் பற்றிக் கீழே தரப்பட்டுள்ளது.

 

வெளிப்படைத் தன்மை

வாடிக்கையாளர்களுடன் மிக நல்ல உறவை பராமரிப்பதற்கு மிக உயர்ந்த நிலையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டியது அவசியமாகும். அனைத்துப் பரஸ்பர நிதி நிறுவனங்களும் அவர்கள் வாங்கும் பங்குகளை உண்மைகளை விவரிக்கும் தாள்களின் வழியாக வெளிப்படுத்துவதால் இது பரஸ்பர நிதிகளுக்கும் உண்மையாக இருக்கிறது. அக்டோபர் 1, 2016 அன்று நிறுவப்பட்ட செபியின் புதிய விதி ஏஎம்சி களை அவர்கள் முதலீட்டாளர்களுக்கு அனுப்பும் விநியோகஸ்தர்களுக்குச் செலுத்தும் அனைத்துத் தரகுகளின் அரையாண்டு ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கைகளை (சிஏஎஸ்) வெளிப்படுத்துமாறு கேட்கப்படுகிறது. இவையெல்லாமே அமைப்பில் அதிக வெளிப்படத் தன்மையைக் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகும்.

செபி கொண்டு வந்த கமிஷனை வெளிப்படுத்தும் விதியினால் மட்டுமே நடைமுறையில் ஏப்ரல் 1, 2017 முதல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டத்தில் விநியோகஸ்தர்களுக்கு நாம் கமிஷன் செலுத்துவதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பணம் எங்கே செல்கிறது என்பதை மிகச் சரியாக முதலீட்டாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அது முதலில் நுகர்வோரின் ஆர்வத்திற்குச் சேவையளிக்கிறது. எனவே நீண்ட காலத்திற்கான செல்வத்தை உருவாக்கும் விஷயத்திற்கு வரும்போது அது முதலீட்டாளரை முன்னிலைப்படுத்துகிறது. எனவே வேண்டுமென்றே உங்கள் பணத்தைக் கவருவதற்கு மிகப் பெரிய விளம்பரங்களைப் பயன்படுத்தும் உயர்ந்த செலவுகளைக் கொண்ட வழக்கமான பரஸ்பர நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதை விட வெளிப்படைத் தன்மையின் மீது அதிகக் கவனம் செலுத்தி மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதாகும்.

 

செயல் திறன்

இதில் கடைசிக் காரணி முதலீடுகளின் மீது இறுதியில் கிடைக்கும் வருவாயாகும். மேலே கூறப்பட்ட அனைத்துக் காரணிகளும் ஒரு நிதித் திட்டத்தின் செயலாற்றலுக்குப் பின்னாளுள்ள மிகப் பெரிய இயக்குநர்களாகும். ஒரு நிதித் திட்டத்தின் செயல் திறனைப் பாதிக்கும் நேரடி மற்றும் மறைமுகக் காரணிகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும், சில முக்கியக் காரணிகளைப் பற்றி நாம் மேலே விவாதித்துள்ளோம். மேலும், ஒரு நிதித் திட்டத்தின் செயல் திறன் காலப்போக்கில் மாறக் கூடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். (நேர்மறையாகவோ அத்துடன் எதிர்மறையாகவோ). இருப்பினும் நிதித் திட்டத்தின் தத்துவங்கள், நெறிமுறைகள், முதலீட்டு ஆதாரங்கள் ஆகியவை முக்கியத் தூண்கள் போன்றவையாகும். நிதித் திட்டங்களின் செயல் திறனை நீங்கள் வெறுமனே தனிமையில் அமர்ந்து ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்கு ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு முடிவெடுப்பதற்கு நிதித் திட்டங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் மற்றும் ஆராய்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to pick a mutual fund scheme: Top 5 things to keep in mind

How to pick a mutual fund scheme: Top 5 things to keep in mind
Story first published: Friday, August 18, 2017, 13:27 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns