உஷார்.. எக்காரணத்தை கொண்டும் இந்த ரகசியங்கள் வெளியில் சொல்ல வேண்டாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நம் உரையாடல்களில், குறிப்பாகக் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் போது, 'பகிர்வது நல்லது' 'பகிர்வது என்பது அக்கறை கொள்வது' என்பன போன்ற அறிவுரை வார்த்தைகள் அடிக்கடி எழும்.

அது மதிய உணவாக இருந்தாலும், பொம்மைகளாக இருந்தாலும் அல்லது இனிப்பு பண்டங்களாக இருந்தாலும், பகிர்தல் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது என்று நாம் குழந்தைகளுக்குச் சொல்ல விரும்புகிறோம்.

இதில் பொருந்தத்து

அது உண்மை தான் என்றாலும் கூட, அதே சமயம் உங்கள் நிதி சார்ந்த தகவல்கள் என்கிற விஷயத்தில் இது பொருந்தாது. எனவே, பகிர்தலில் பல பயன்கள் இருந்தாலும், நீங்கள் ஒருபோதும் யாரிடமும் - உங்கள் வாழ்க்கைத் துணைவர் மற்றும் குழந்தைகளிடம் கூடப் பகிர்ந்து கொள்ளக் கூடாத ஐந்து விஷயங்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கார்டு விவரங்கள்

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் காலாவதியாகும் தேதி, அதன் எண், மற்றும் உங்கள் பெயர் போன்ற விவரங்கள் அட்டையின் மீது முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். உங்கள் பெயர் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் கார்டின் மீது அச்சிடப்பட்டிருக்கும் இதர தகவல்களை நீங்கள் கண்டிப்பாக யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது அங்கே உங்களுக்காக மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்காக அல்ல.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்த விவரங்கள் தேவை. மேலும் இந்தத் தகவல் தான் முதல் நிலை பாதுகாப்பு ஆகும். இதை அணுகப் பெறாமல் உங்கள் கார்டை தவறாகப் பயன்படுத்துவதற்கு வழி இல்லை. இந்த விவரங்களைப் பாதுகாத்து வையுங்கள் மற்றும் எந்த ஒரு அங்கீகரிக்கப்படாத நபரிடமும் அவற்றை வெளிப்படுத்தாதீர்கள்.

 

சிவிவி

ஒவ்வொரு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டும் சிவிவி எண் எனப்படும் கார்டு சரிபார்ப்பு மதிப்பீட்டு எண்ணை அதன் பின்பக்கம் கொண்டிருக்கும். ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்ய இந்த எண் மிக முக்கியமானதாகும்.

இந்த எண்ணும் உங்கள் கார்டின் மீது தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும், இதை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

 

பாஸ்வோர்டுகள்

நீங்கள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு இணைய வங்கி சேவைகள் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், இரகசிய விவரங்களான வாடிக்கையாளர் அடையாள எண், கார்டு விவரங்கள் மற்றும் பாஸ்வோர்டு எனப்படும் கடவுச் சொற்கள் போன்றவை இல்லாமல் பணப்பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அதே சமயம், உங்கள் கார்டின் மீதுள்ள இதர விவரங்கள் உங்களை அறியாமலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சமரசம் செய்து கொண்டாலும், பாஸ்வோர்ட்கள் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். மேலும் வழக்கமான இடைவெளிகளில் பாஸ்வோர்டை மாற்றுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

பின்

ஏடிஎம்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் பணத்தை வெளியே எடுக்கவும் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை நிறைவு செய்யவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தனிப்பட்ட அடையாள எண் (பின்) தேவையாகும். இது ஒரு இரகசிய எண்ணாகும். மேலும் ஏடிஎம் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களில் அதைப் பயன்படுத்தும் போது உங்கள் தோள்களுக்குப் பின்னாளிருந்து யாராவது எட்டிப் பார்த்து உங்கள் இரகசிய எண்ணைத் திருடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு இதைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.

ஓடிபி

ஒன்-டைம் பாஸ்வோர்டு (ஓடிபி) எனப்படும் ஒரு முறை அனுப்பப்படும் கடவுச்சொற்கள் உங்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை அதிகப் பாதுகாப்புடையதாக ஆக்கும் இரண்டாம் நிலை அங்கீகாரக் கருவிகளாகும். உங்கள் கார்டு, இணைய வங்கி சேவை அல்லது உங்கள் ஈ - வாலட் போன்றவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் எதையேனும் வாங்கும் போது ஒரு ஓடிபி உருவாக்கப்படுகிறது. மேலும் அது வழக்கமாக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இது கடைசி நிலை அங்கீகாரமாகும், மேலும் நீங்கள் இதர பாதுகாப்புச் சவால்களை வெற்றிகரமாக முடித்திருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் இரகசிய தகவல்களைச் சமரசம் செய்து கொள்ள இது தான் உங்கள் கடைசிப் பாதுகாப்பாகும். இதை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் நீங்கள் எதிர்பார்க்கும் ரூ. 500 பற்றுக்குப் பதிலாக இந்த ஓடிபி யை பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கில் மிச்சம் மீதியில்லாமல் சுத்தமாகச் செய்து எடுத்து விட முடியும்.

எனவே யாராவது ஓடிபி யை கேட்டால் எப்பொழுதும் சந்தேகப்படுங்கள். உங்கள் வங்கியோ அல்லது நிதி சேவை வழங்குபவர்களோ ஒருபோதும் இந்தத் தகவல்களைக் கேட்க மாட்டார்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The 5 financial secrets you should never reveal

The 5 financial secrets you should never reveal
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns