தினமும் 100 ரூபாய் இருந்தால் போதும்.. நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்..!

Posted By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
இன்றைய உலகில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும். ஆனால் பலர் தங்கலது 20 வயது முதல் 30 வயதுக்குள் துவங்க வேண்டிய முறைப்படுத்தப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடுகளைத் துவங்காததே அவர்கள் கனவை அடைய முடியாமல் போவதற்கான காரணமாகும்.

என்னடா மேலே தினமும் 100 ரூபாய் சேமித்தால் கோடிஸ்வரன் ஆகலாம் என்று கூறிவிட்டு இங்கு நமக்குக் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கின்றது.

எனவே வாங்க எப்படிச் சேமித்தால் 20 முதல் 30 வருடத்திற்குள் கோடிஸ்வரன் ஆக முடியும் என்று இங்குப் பார்ப்போம்.

20 வது வருடத்தில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?

20 வருடத்தில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது உங்கள் கணவா? 6 சதவீதம் வரை வட்டி அளிக்கும் முதலீடு திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 21,535 ரூபாய் நீங்கள் முதலீடு செய்து வந்தால் கோடிஸ்வரன் ஆகலாம். இதுவே 8 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 16,864 ரூபாயும், இல்லையென்றால் 10 சதவீதம் வரை அளிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 13,060 ரூபாயும், இல்லையென்றால் 12 சதவீத வரை லாபம் அளிக்கும் முதலீடு திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் 6,596 ரூபாயினை முதலீடு செய்து வந்தால் 20 வருடத்தில் நீங்கள் கோடிஸ்வரராக முடியும்.

உதாரணம்

8 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 14,864 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தால் 20 வருடத்தில் 40.47 லட்சம் நீங்கள் முதலீடு செய்து இருப்பீர்கள். இதன் மூலம் வரும் வட்டி உள்ளிட்டவற்றையால் உங்களுக்கு 20 வருடத்தில் 1 கோடி கிடைக்கும்.

25 வருடத்தில் கோடிஸ்வரன் ஆவது எப்படி?

ஒவ்வொரு மாதமும் 6 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் 14,358 ரூபாயும், இல்லையென்றால் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீடு திட்டங்களில் 10,445 ரூபாயும், இல்லையென்றால் 10 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் 7,474 ரூபாயும், இல்லையென்றால் 12 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் 5,269 ரூபாயும் முதலீடு செய்து வந்தால் 25 வருடத்தில் கோட்ஸ்வரன் ஆகலாம்.

30 வருடத்தில் கோட்ஸ்வரன் ஆவது எப்படி?

ஒவ்வொரு மாதமும் 6 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் 9,905 ரூபாயும், இல்லையென்றால் 8 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீடு திட்டங்களில் 6,665 ரூபாயும், இல்லையென்றால் 10 சதவீதம் வரை லாபம் அளிக்கும் முதலீட்டுத் திட்டங்களில் 4,387 ரூபாயும், இல்லையென்றால் 12 சதவீதம் வரை லாபம் அளிக்கும் திட்டங்களில் 2,832 ரூபாயும் முதலீடு செய்து வந்தால் 30 வருடத்தில் கோட்ஸ்வரன் ஆகலாம்.

30 வருடத்தில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்று முயற்சிக்கும் போது ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் நீங்கள் சேமித்து வைத்து அதனை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்து வந்தால் கோடிகளைத் தாண்டி லாபத்தினைப் பெறலாம்.

 

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள் போன்ற திட்டங்களில் நீண்ட காலத்திற்குகு திட்டமிட்டு நீங்கள் முதலீடு செய்யும் போது மேலே கூறியதை விட அதிக லாபங்களை உங்களால் பெற முடியும். இப்படி எல்லாம் நீங்கள் முதலீடு செய்து வந்தால் ஓய்வு காலத்தில் நீங்கள் கோடிஸ்வரனாக யாரிடமும் நிதி உதவி கேட்காமல் வாழ முடியும்.

வங்கி

21 வங்கிகளை 15ஆகக் குறைக்கத் திட்டம்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி..!

பிஎஸ்என்எல்

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல்-இன் அதிரடி ஆஃபர்..!

அதிக சம்பளம்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் அளிக்கும் நிறுவனம் இதுதான்.. ஊழியர்களின் செல்லக்குட்டி..

இந்தியர்கள் பரிதவிப்பு

டிரம்பின் புதிய உத்தரவு.. அமெரிக்காவில் 20,000 இந்தியர்கள் பரிதவிப்பு..!

ஜியோ

முதலாம் ஆண்டின் வெற்றி விழாவை கொண்டாடும் ஜியோ.. டெலிகாம் துறையின் சோகமான நிலை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

If you save 100 rupees every day, you are a Crorepati in 30 years

If you save 100 rupees every day, you are a Crorepati in 30 years
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns