புதிதாக திருமணமானவர்களா? நிதி சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடுத்துவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

திருமணம் ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய மைல்கல் நிகழ்வாகும். ஆனால் ஆரம்பக்கட்ட பரவசத்திற்குப் பிறகு, இப்போது முதற்கொண்டு உங்கள் நிதிகளை நிர்வகித்தல் உட்பட ஒரு முழுமையான புதிய வாழ்க்கை முறைக்கு உங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்கிற மெய்யுணர்வு வருகிறது. பணம் பற்றிய பேச்சில் காதல் எதுவுமில்லை - ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணைவருடன் கட்டாயமாக விவாதிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. அதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ அவ்வளவு சிறந்தது. எனவே, நீங்கள் விவாதத்தைத் தொடங்க உதவும் ஒரு நிதி சார்ந்த சரிபார்ப்பு பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பணம் தொடர்பான உங்கள் அணுகுமுறை

நீங்கள் ஒரு மாத சம்பளத்திலிருந்து அடுத்த மாத சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்கிறீர்களா? அல்லது பணத்தைச் சேமிக்கிறீர்களா? நீங்கள் அபாயங்களை விரும்புபவரா (பங்குகள் மற்றும் பங்கு நிதிகளில் முதலீடு செய்தல்) அல்லது நீங்கள் அபாயங்களை வெறுப்பவரா? (நிலையான வைப்பு நிதிகள் மற்றும் கடன் நிதிகள்). நீங்கள் பொருட்களால் தூண்டப்பட்டு (விலை உயர்ந்தவை) வாங்குவீர்களா அல்லது அவற்றை ஆராய்ந்து திட்டமிட்டு வாங்குவீர்களா? கடனில்லாமல் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா அல்லது தனிப்பட்ட கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களைக் கையாளுவதை வசதியாக உணர்கிறீர்களா? உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கடன் கொடுப்பது அல்லது வாங்குவதைப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

நீங்கள் ஒருமுறை குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிவிட்டால், தற்போதும் மற்றும் வருங்காலத்திலும் இரண்டிலும், ஒரு திருமணத் தம்பதிகள் என்ற முறையில் பணம் குறித்த உங்கள் கண்ணோட்டமும் மற்றும் அணுகுமுறையும் தான் ஒரு நிதி சார்ந்த நல வாழ்விற்கான அடித்தளத்தை அமைக்கும். நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இதைத் தீர்த்துக் கொண்டால், அது மிகச் சிறந்தது. இதுவரை செய்யவில்லையென்றால், இப்போதே செய்யுங்கள்.

 

2. உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த இலக்குகளைப் பற்றி விவாதிக்கவும்

இலக்குகள் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்ததாக, அத்துடன் குறுகிய கால மற்றும் நீண்ட கால வரையறையிலோ, உயர்கல்விக்காக, ஒரு பொழுதுபோக்குக்காக, தொண்டிற்காகச் செய்யும் தன்னார்வச் செயலுக்காக, ஓய்வுக்காக அல்லது வேலை மாற்றத்திற்காக மற்றும் பல காரணங்களுக்காக, ஒரு குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, வருடாந்திர விடுமுறைக்காக, ஒரு புதிய காரை வாங்குவதற்காக, ஒரு வீட்டை வாங்குவதற்காக, பணிஓய்வைத் திட்டமிடுவதற்காக, மற்றும் பல காரணங்களுக்காக இருக்கலாம்.
நீங்கள் இந்த இலக்குகளை மாதாந்திர/வருடாந்திர அடிப்படையில் குறுகிய கால இலக்குகள் மற்றும் நீண்ட கால இலக்குகளாக வகுத்துக் கொள்ளலாம்.

"நீங்கள் இருவரும் அந்த இலக்குகளை நடைமுறையின் அடிப்படையில் ஒன்றாக மதிப்பீடு செய்து நீங்கள் இருவரும் ஒத்திசைந்து இருக்கிறீர்களா மற்றும் சரியான பாதையில் தான் செல்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்"

 

3. உங்கள் தனிப்பட்ட சொத்துக்களையும் பொறுப்புகளையும் ஒருங்கிணைத்தல்

நீங்கள் இருவரும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள், செலவழிக்கிறீர்கள், மற்றும் சேமிக்கிறீர்கள் என்பதை முன்வையுங்கள். உங்கள் இருவரின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள் (பங்குகள், பரஸ்பர நிதிகள், தங்கம், சொத்துக்கள் மற்றும் பலவற்றின் விவரங்கள்), உங்கள் சம்பளத்தைத் தவிர இதர வருமான ஆதாரங்கள், தற்போதைய கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றின் விவரங்களைப் பட்டியலிடுங்கள்.
நீங்கள் எங்கே முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள் மேலும் உங்கள் சொத்து ஒதுக்கீட்டு யுக்திகளைத் திட்டமிடுங்கள்.

உங்கள் திருமண வாழ்க்கையை எந்தத் தனிப்பட்ட கடன்கள் அல்லது கிரெடிட் கார்ட் கடன்கள் இல்லாமல் துவங்குவது சிறந்தது. இல்லையென்றால், அதை எவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியும் என்பதை நோக்கி வேலை பாருங்கள். இதனால் நீங்கள் இருவரும் கடனின்றிச் சுதந்திரமாக இருக்க முடியும்.

 

4. செலவுகளை ஒன்றாக இணைந்து நிர்வகித்தல்

முன்னர் நீங்கள் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகளை வைத்திருந்திருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அந்த வங்கிக் கணக்குகளைத் தொடர்ந்தாலும், உங்கள் வீட்டுச் செலவுகளைச் சிறப்பாகக் கையாளவும் மற்றும் கண்காணிக்கவும் ஒரு கூட்டு வங்கிக் கணக்கைத் தொடங்குவதையும் மற்றும் கூடுதல் கிரெடிட் கார்டுகளைப் பெறுவதையும் ஆலோசியுங்கள்.
எப்போது செலவழிக்க வேண்டும், எதற்காக யார் செலவழிக்கப் போகிறார்கள், வங்கிக் கூட்டுக் கணக்கிற்குச் சம்பளத்தில் எவ்வளவு சதவிகிதம் போகும் - இவையெல்லாம் தனிப்பட்ட முடிவுகளாக இருந்தாலும், ஒவ்வொரு தம்பதியருக்கும் இதில் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கும்.

நீங்கள் இருவரும் வேலை செய்கிறீர்களா இல்லையா என்பதைப் பொறுத்து நிறைய விஷயங்கள் சார்ந்திருக்கின்றன. இதில் முக்கியமானது என்னவென்றால், இவை ஒப்புக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

 

5. ஒரு வரவு செலவுத் திட்டத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுங்கள்

நிதி சார்ந்த ஒழுக்கத்தில் உங்கள் வருமானத்திற்குள் வாழக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும், ஒரு பட்ஜெட்டைத் தயாரிப்பது உங்களுக்கு அதைச் செய்ய உதவும்.

6. ஒரு நெருக்கடி நிலை நிதியை உருவாக்குங்கள்

நெருக்கடி நிலை எந்தக் கணத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் - அது தம்பதியர் இருவரில் ஒருவரின் வேலை இழப்பாக, நோயாக, மரணம் அல்லது இயற்கை சீரழிவாக இப்படி ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க நிதியளவில் தயாராக இருக்க வேண்டும்.
ஒருமுறை நீங்கள் செலவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, 6 முதல் 12 மாதங்களுக்கான உங்கள் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொறுப்புக்களுக்கான பணத்தை நெருக்கடிநிலை நிதியின் ஒரு பகுதியாக ஒதுக்கி வையுங்கள் இது அந்தக் காலகட்டத்தை நீங்கள் கடந்து வர உதவும்.

இந்தப் பணத்தை எங்கே எப்படிச் சேமித்து வைக்கலாம் என்பது உங்கள் தனிப்பட்ட தேர்வு, அது வெவ்வேறு சேமிப்புக் கணக்குகளாக, ஒரு நிலையான வைப்பு நிதியாக, அல்லது எளிதில் பணமாக்கக்கூடிய ஒரு நிதித் திட்டமாகக் கூட இருக்கலாம்.
இங்கே முக்கியமாகப் பணம் உங்கள் இருவருக்கும் எளிதில் கிடைக்கப் பெறக்கூடியதாக அல்லது எளிதில் பணமாக்கக்கூடிய நிதிகளாக இருக்க வேண்டும்.
கடைசியாக நீங்கள் செய்ய விரும்பும் விஷயம், இரண்டு நாட்கள் காத்திருங்கள் அல்லது இந்த நிதிகளைப் பெறுவதற்காக ஆவண வேலைகளைச் செய்யச் சுற்றிச் செல்லுங்கள்.

 

7. ஆவணமாக்குதலை நிர்வகித்தல்

நீண்ட காலமாகப் பெண்கள் பொதுவாகத் திருமணத்திற்குப் பின்னால் அவர்களின் கடைசிப் பெயரை மாற்றி விடுகிறார்கள். சிலர் மணமாவதற்கு முன் மற்றும் திருமணமானதற்குப் பின் உள்ள இரண்டு கடைசிப் பெயர்களையும் பயன்படுத்துகிறார்கள். இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் ஆவணப்படுத்துதலில் உள்ள தொந்தரவுகள் காரணமாக அவர்களுடைய பெயரை மாற்றாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு எதுவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கைத் துணைவரை அடுத்த உறவினராக அல்லது தொடர்பு கொள்ள வேண்டிய நபராகப் பதிவு செய்து அனைத்து ஆவணங்களிலும் மற்றும் பணியிடத்திலும் உங்கள் திருமண நிலை புதுப்பிக்கப்பட்டதை உறுதி செய்யுங்கள்.

நீங்கள் இருவரும் தற்போது ஒரே நகரத்தில் வசிக்கிறீர்களா அல்லது வெவ்வேறு நகரங்களில் வசிக்கிறீர்களா மேலும் உங்களில் யார் ஒருவர் (அல்லது இருவரும்) நகரத்திலிருந்து இடம்பெயருவீர்கள்? நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் வசிக்கிறீர்களா அல்லது வாடகை வீட்டிலா? நீங்கள் உங்கள் பெற்றோருடன் வசிப்பீர்களா அல்லது தனியாகவா? இவற்றைப் பொறுத்து உங்களில் ஒருவர் அல்லது இருவரும் உங்கள் பாஸ்போர்ட், வங்கி, கிரெடிட் கார்ட், தரகு, பரஸ்பர நிதிகள், மற்றும் உங்கள் முதலாளி ஆகிய இடங்களில் உங்கள் முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் கூட்டு வங்கிக் கணக்கை இயக்குவதாக இருந்தால், அத்துடன் அந்தக் கணக்கை உங்கள் இருவருக்குமான ஒரு கூட்டு மின்னஞ்சல் முகவரியுடன் இணைப்பது சிறந்த ஆலோசனையாகும். இதனால் அந்த வங்கிக் கணக்குகள் மற்றும் கார்டுகள் தொடர்பான கட்டண அறிக்கைகள் மற்றும் இதர தொடர்புகளைப் பற்றி நீங்கள் இருவரும் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.

நீங்கள் தனியாக இருந்த போது உங்கள் தாய் அல்லது தந்தை உங்கள் வங்கி, காப்பீடு மற்றும் முதலீட்டுக் கணக்குகளுக்கு நியமனப்பட்டவராக அல்லது பயனாளராக அமர்த்தப்பட்டிருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அந்தக் கணக்குகளையும் அத்துடன் வருங்காலக் கணக்குகளையும் உங்கள் வாழ்க்கைத் துணைவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். திருமணமாகிவிட்டாலே ஒரு உயிலைத் தயாரித்து மேலும் அதை வழக்கமான இடைவெளிகளில் மதிப்பாய்வு செய்வது சிறந்த யோசனையாகும். சொத்து அல்லது வாரிசுரிமையைத் திட்டமிடுதல் சட்டரீதியானது என்பதற்கும் அப்பாற்பட்டு தேவையில்லாத அவநம்பிக்கைகளையும் அத்துடன் திருமணச் சச்சரவுகளையும் தவிர்க்கிறது. இப்போதெல்லாம் நீங்கள் இணையத்தில் கூட உயிலைத் தயாரிக்கலாம்.

தவறான கடைசிப் பெயர், முகவரி அல்லது நியமனப்பட்டவர் போன்ற காரணங்களினால் பிரச்சனைகள் எழுவதைத் தவிர்க்க, சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆவணப்படுத்துல் முக்கியமானதாகும்.

 

8. உங்கள் காப்பீட்டுத் திட்டத்தை மதிப்பாய்வு செய்யுங்கள்

நீங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருக்கிறீர்களா? அந்தக் காப்புறுதி பேதுமானதா அல்லது அதிகரிக்கப்பட வேண்டுமா என்று சரிபாருங்கள். நீண்ட கால வரையறைக் கொண்ட டெர்ம் இன்சூரன்ஸ் திட்டம் சிறந்தது. நீங்கள் ஒரு ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டத்தையும் வைத்திருப்பது நல்லது. அதை நீங்களே உங்களுக்காக எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் முதலாளி வழியாகவும் எடுக்கலாம். திருமணத்திற்குப் பிறகு, உங்கள் தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருக்கும் அதே சமயத்தில், காப்புறுதியை அதிகரிப்பதைத் தேர்வு செய்யலாம் அல்லது ஒரு குடும்பப் பத்திர ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

உங்கள் இருவரின் பெற்றோர் நிதியளவில் உங்களைச் சார்ந்திருக்கிறார்களா அல்லது அவர்களுக்குச் சுயமாக வருமான ஆதாரங்கள் இருக்கின்றனவா? அவர்கள் ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறார்களா? அவர்களுக்கு வயது அதிகரிப்பதைப் போலவே சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான செலவும் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்ய வேண்டியிருக்கும். மூத்த குடிமக்களுக்கான பல்வேறு ஆரோக்கியக் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. அதன் காப்பீட்டு முனைமம் அதிகமாக இருந்த போதிலும் அந்த அளவிற்குக் காப்புறுதி மதிப்புடையதாகும்.

குறைவான காப்புறுதி, நகல் அல்லது காணாமல் போன கவரேஜ் போன்றவற்றைச் சரிபார்த்து இடைவெளிகளை நிரப்புங்கள்.

 

9. நிதி சார்ந்து விழிப்புணர்வுடன் இருங்கள் மேலும் ஒருவரையொருவர் நம்புங்கள்

பெரும்பாலும், குறிப்பாக இந்திய பாரம்பரிய வீடுகளில், கணவர் நிதிகள் மற்றும் முதலீடுகளை நிர்வகிப்பதும் மற்றும் மனைவிக்கு அன்றாடச் செலவுகளைத் தவிர்த்து இதர பண விஷயங்களைப் பற்றி விழிப்புணர்வில்லாமல் இருப்பதும் பொதுவானதாகும். ஏதேனும் நெருக்கடி நிலைகள் ஏற்பட்டால் மனைவி இப்படி இருப்பது பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் மேலும் அந்தப் பெண் குடும்ப நிதிகள், நிலுவையிலுள்ள கடன்கள்/கட்டணங்கள், காப்பீட்டுத் தொகை, தற்போதைய உயிலின் நிலைப்பாடு போன்ற எதைப் பற்றியும் முற்றிலும் அறியாமையில் இருப்பார்.

இருவரும் நிதிகள் மற்றும் ஆவணப்படுத்துதல் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதும், அத்துடன் தொடக்கத்திலேயே பணத்தின் "அடிப்படை விதிகளை" அமைத்து விடுவதும் முக்கியமானதாகும். ஒருவருக்கொருவர் பணப் பழக்க வழக்கங்கள் காரணமாக வரும் சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து அது மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Just married? Here’s how to get yourselves financially in sync

Just married? Here’s how to get yourselves financially in sync
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more