ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் பெற ஆக்சிஸ் வங்கியின் புதிய திட்டம்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் ரூ. 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஆக்சிஸ் வங்கியின் சுப ஆரம்ப் (Shubh Aarambh) திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த வீட்டுக்கடன் சலுகை தளர்த்தப்பட்ட 12 மாதாந்திரத் தவணையுடன் வீட்டுக்கடனுக்கான குறைக்கப்பட்ட கால வரையறையின் அடிப்படையில் வருகிறது.

சிக்கல்

மலிவாகக் கிடைக்கக்கூடிய வீடுகளுக்கான கடன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று ஆக்சிஸ் வங்கிக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

ஆனால் இந்தச் சலுகைக் கிடைக்கப்பெறுவதற்கு, வீட்டுக்கடன் வாங்குபவர் பணத்தைத் திரும்பச் செலுத்துவதில் தவறக்கூடாது, ஒருவேளை 4 மாதாந்திரத் தவணைத் திட்டங்களுக்கு மேல் தவறினால், கடன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டத் தேதியிலிருந்து 4 வது, 8 வது மற்றும் 12 வது வருடங்கள் தள்ளுபடி செய்யப்படும்.

 

இந்த வீடுகளுக்கு கடன் வழங்கப்படும்

இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் வீட்டுக்கடனை கட்டுமானத்தின் கீழுள்ள கட்டடங்களுக்கும், குடிபுகத் தயாராக இருக்கும் கட்டடங்களுக்கும், மறுவிற்பனை வீடுகள் அத்துடன் சுய கட்டுமானம் அல்லது மனை மற்றும் அதன் கட்டுமானம் ஆகியவற்றிற்கு பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் கட்டணம் இல்லை

மேலும் இந்தச் சலுகையில், இதர வங்கிகளின் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களும் எந்தவிதமானக் கூடுதல் கட்டணங்களும் இல்லாமல் ஆக்சிஸ் வங்கியின் இந்தப் புதிய திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்.

ஆக்சிஸ் வங்கி

இந்தப் புதிய வீட்டுக் கடன் திட்ட அறிமுகத்தின் போது பேசிய ஆக்சிஸ் வங்கியின் வங்கி வர்த்தகப் பிரிவு இயக்குனர், திரு. ராஜீவ் ஆனந்த், "மலிவு விலையில் வீடுகளை வழங்கும் திட்டத்தில் அரசாங்கம் இடைவிடாமல் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தொடக்க முயற்சியில் தொடர்ந்து பங்குநராக இருப்பதில் ஆக்சிஸ் வங்கி பெருமிதமாக உணர்கிறது. இந்தத் தயாரிப்பின் மூலம் மிகுந்த போட்டி நிறைந்த சூழலில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் மேற்கொண்டு கூடுதலான மதிப்பீட்டை வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். மேலும், இது வாடிக்கையாளர்கள் வழக்கமாகக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும்படி ஊக்குவிக்கும்." என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opting For Home Loan Upto Rs. 30 Lakh? Consider This Offer

Opting For Home Loan Upto Rs. 30 Lakh? Consider This Offer - Tamil Goodreturns | ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன் பெற ஆக்சிஸ் வங்கியின் புதிய திட்டம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, September 3, 2017, 12:26 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns