சின்ன சின்ன மாற்றத்தில் பெரிய அளவில் சேமிக்கலாம்.. இளைஞர்களுக்காக சூப்பரான டிப்ஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் எத்தனைபேர் தங்களது சம்பளத்தைச் சேமிக்கிறார்கள் என்றால், எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும். இந்த நிலையைக் குறைகூற முடியாது, காரணம் மக்களின் தேவை மட்டும் அல்லாமல் பொருட்களின் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது.

ஆனால் நம்முடை தினசரி வாழ்க்கை மற்றும் செலவழிக்கும் பழக்கத்தை மாற்றினாலே எளிமையான முறையில், பணத்தைச் சேமிக்க முடியும் என இளைஞர்களுக்காகவே பிரத்தியேகமாகத் தன் சொந்த அனுபவத்தில் முக்கியமான டிப்ஸ்களைக் கூறியுள்ளார் கண்ணா.

சேமிப்பு கணக்கு

சம்பளம் வந்த உடனேயே நீங்கள் அதிகம் பயன்படுத்தாத உங்களின் சேமிப்பு கணக்கிற்கு 20 சதவீத தொகையை அனுப்பிவிடுங்கள். இதன் மூலம் மாத கடைசியில் உங்கள் சம்பளத்தில் சிறு தொகையேனும் மிச்சப்படுத்த முடியும்.

வாகனம்

இன்றைய வாழ்க்கை முறைக்கு வாகனம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் வாகனத்தைப் பயன்படுத்தும் அளவீட்டைச் சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் பெரிய அளவிலான தியாகம் செய்ய வேண்டியது அவசியமில்லை.

குடும்பத்துடன் வெளியே செல்லும் போதோ, அல்லது விரைவாகச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவது தவிர்க முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது பஸ் அல்லது லோக்கல் டிரையினைப் பயன்படுத்தினால் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்க முடியும்.

உதாரணமாகப் பெட்ரோல், பார்கிங் ஆகியவற்றில் உங்கள் பணத்தைச் சேமிக்க முடியும்.

 

ஆடம்பர ஆடைகள்

அனைவருக்கும் ஆடம்பர ஆடைகள் மீது ஆர்வமும், ஆசையும் இருக்கும். இதனை வாங்காமல் தவிர்ப்பது எப்படி..?

விழா மற்றும் வீட்டில் நிகழ்ச்சி நடக்கும் நாட்களில் உடுத்திக்கொள்ள இணையத்தள ஆடை தளத்தில் உங்களுக்குப் பிடித்த ஆடையை ஆர்டர் செய்துவிட்டு நிகழ்ச்சி நாளில் பயன்படுத்திவிட்டு, அடுத்த நாள் அதனைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இந்த முறையைப் பல முறை கையாண்டு உள்ளதாகக் கண்ணா தெரிவித்துள்ளார்.

 

ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து விட்ட நிலையில் சந்தைக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை புதிய மாடல் போன்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இதனைக் கண்டு மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர்.

ஆதலால் வருடத்திற்கு ஒரு போன் என்பதால் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஏதுவானது அல்லது. ஆகவே இத்தகைய பழக்கம் உங்களுக்கு இருந்தால் இப்போதே விட்டுவிடுங்கள்.

 

டையட்

இன்றளவில் உடல் எடை அதிகமான கொண்டு இருந்தால், பல்வேறு வியாதிகள் வருகிறது. ஆகவே எப்போது டையட் உடன் இருங்கள் அல்லது உணவே மருந்து என்ற கொள்கைக்கு மாறிவிடுங்கள்.

இல்லையெனில் மருந்தே உணவாக மாறி உங்கள் சம்பளம் முழுவதும் மருத்துவச் சேவைக்காகச் செலவிட வேண்டி வரும். அதுமட்டும் அல்லாமல் உடல் எடை குறைவாக இருந்தால் பல நன்மைகள் உண்டு குறிப்பாக எப்போதும் உத்வேகத்துடன் இருக்க முடியும்.

 

மருத்துவக் காப்பீடு

குடும்பத்திற்குக் குடும்ப மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு இரண்டுமே முக்கியமானது.

குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும், அதிகளவிலான நோய் அல்லது வியாதிகளுக்குச் சேவை பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியம். காரணம் இன்று மருத்துவச் சேவைகளுக்காக ஆகும் செலவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது.

 

கிரெடிட் கார்டு

இன்றைய இளைய தலைமுறையினர், குறிப்பாகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்வர்கள் அதிகளவில் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். எப்போது டெபிட் கார்டு அல்லது ஏடிஎம்யை பயன்படுத்துங்கள். காரணம் நீங்கள் கிரெடிட் கார்டில் பயன்படுத்திய பணத்தைக் குறிப்பிட்ட நாட்களுக்குச் செலுத்தவில்லை என்றால் அதற்கு வட்டி உடன்.

அதில் கிரெடிட் கார்டு கொண்டு பணத்தை வித்டிரா செய்தால், வங்கிகள் அதற்கு 60 சதவீதம் வரை வட்டியை விதிக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

விலையுயர்ந்த கிப்ட்

உங்கள் பாய்பிரென்ட் அல்லது கேள்பிரென்ட்களுக்கு விலையுயர்ந்த பொருட்களைக் கிப்ட் செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

இளைஞர்கள் பார்வையில்..

இந்த டிப்ஸ் அனைத்தும் மாத சம்பளம் வாங்கும் ஒரு இளைஞனின் கண்ணோட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கலாம்.

ஆனால் அதனைத் திருத்திக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்.

 

சேமிப்புப் பழக்கம்..

அதேபோல் இன்றளவில் கிராமம் மற்றும் சிறு டவுன் பகுதிகளில் இருந்து நகர்திற்கு வரும் பட்டதாரிகளிடம் அதிகத் திறமை உள்ளது, இதனால் அவர்களுக்கு ஆரம்பத்திலேயே 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். சிலருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஆனால் சம்பாதிக்கும் பெரும்பாலானவர்களிடம் சேமிப்புச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிகவும் குறைவாகவே உள்ளது. இது இன்றைய வாழ்வியலுக்கு ஆபத்தானது.

சேமித்துப் பழகுங்கள்.. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள்..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Simple savings hacks for youngsters

Simple savings hacks for youngsters
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns