நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற 8 ஸ்மாப் கேப் பங்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால், நீங்கள் பங்குச் சந்தைகளில் வருவாயை ஈட்ட முனைவீர்கள். உண்மையில், முதலீட்டுப் பங்குகள் இதர சொத்துப் பிரிவுகளை விட நீண்ட கால வரையறையில் சிறப்பாகச் செயல்படுவதாக அறியப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் சில பங்குகளை நாம் இங்கே தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

இவற்றில் பங்கு விகிதத்தில் மிகக் குறைவான கடன்களைக் கொண்டுள்ள பங்குகளும் காலப்போக்கில் நல்ல வளர்ச்சியைக் கொடுப்பவையும் அடங்கும். இந்தப் பங்குகள் நீண்ட காலத்தில் பணத்தை உருவாக்கும் மிகப் பெரிய திறனைக் கொண்டுள்ளன. அவற்றில் சில மிக வேகமாக வளர்ச்சியடையும் துறைகளான கட்டுமானப் பணிகள், விவசாய ரசாயனங்கள், மேலும் நிச்சயமாக மிக விரைவாக வளர்ந்து வரும் பொதுத் துறை வங்கிகள் துறை போன்றவையும் ஆகும்.

மேட்ரிமோனி.காம்

மேட்ரிமோனி.காம்

மேட்ரிமோனி.காம் தனது பங்குகளைப் பொது மக்களுக்கு ரூ. 985 ஐபிஓ விலைக்குத் தொடக்கத்தில் வழங்கியது. இன்று, நீங்கள் இந்தப் பங்குகளை 20 சதவிகிதம் குறைவான விலைக்குச் சுமார் ரூ. 785 க்கு பெறுகிறீர்கள். பங்குகளின் இந்தக் கூரிய விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், பல்வேறு பெரிய நிதி நிறுவனங்கள் தீவிரமாகப் பங்குச் சந்தையில் விற்றன, இதனால் இந்தப் பங்குகளின் விலை தற்போதைய நிலைக்குக் கீழ் நோக்கி இழுக்கப்பட்டு விட்டது.

இருந்தாலும் இந்த விலைக்குப் பங்குகள் ஒன்றும் மோசமான வர்த்தகம் அல்ல. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகம் 18 சதவிகித வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது. இந்தத் திருமணச் சேவை வணிகம் 100 சதவிகித மகத்தான வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தத் திருமண வியாபாரம் மற்றும் ஜோடி பொருத்த வணிகம் ஒன்றிணைந்து ஒரு அபாரமான கூட்டு வளர்ச்சியைக் காணும்.

மேட்ரிமோனி.காம்: வாடகைகளிலிருந்து பெறும் சேமிப்புகள் நிகர லாபத்தை உயர்த்தும் சாத்தியங்கள்

நிறுவனம் தனது சொந்த வளாகங்கள் மற்றும் அனைத்துத் திருப்பிச் செலுத்த வேண்டிய மிகைப்பற்றுகளுக்கும் ஐபிஓ வருவாயைப் பயன்படுத்தும். கட்டிடம் முடிவடையும் வரை நிறுவனம் வட்டி வருமானத்திலிருந்தும் மற்றும் மிகைப் பற்றைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்தும் பயனடையும். இந்தியா உலகிலேயே அதிகமான இளைய சமுதாய மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

அதாவது, மக்கள்தொகை மேட்ரிமோனி.காம் போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளது. மேலும் இன்டெர்நெட் ஊடுருவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் வணிக வாய்ப்புகள் மேற்கொண்டு முன்னனேற்றமடையும் என்பது இதன் பொருளாகும். உண்மையில் பங்குகளில் கூர்மையான வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தப் பங்குகள் இப்போது ஒரு பங்குக்கு வெறும் 38 மடங்கு மட்டுமே அதிகமாக விற்கப்படுகிறது. இது ஈபிஎஸ் சிக்கலுக்கு முன் இருந்த 48 மடங்கிலிருந்து சரிந்த அளவாகும். இந்தப் பங்குகள் ரூ. 785 என்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மோசமான வர்த்தகம் அல்ல.

 

டாடா மோட்டார்ஸ்
 

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸில் முதலீடு செய்பவர்களுக்கு அதிலுள்ள ஒரு அனுகூலம் என்னவென்றால், உண்மையில் இந்தப் பங்குகள் ரூ. 598 என்றிருந்த நிலையிலிருந்து தற்போதைய நிலையான ரூ. 401 க்கு சரிந்துள்ளது. உண்மையில் இந்தப் பங்குகள் சமீபத்தில் ரூ. 375 என்ற அளவிற்குக் குறைந்து மூழ்கியுள்ளது.
எனவே, பங்குகளின் வீழ்ச்சி என்கிற காரணத்தைத் தவிர்த்து, டாடாவின் பங்குகளை வாங்குவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக நிறுவன நிர்வாகம் விலைகளைக் குறைத்து விற்பனையை அதிகரிக்க நிச்சயமான திட்டங்களைக் கொண்டிருக்கிறது. வர்த்தக வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதைத் தவிர, டாடா நேனோ வை லாபகரமானதாக்க இந்நிறுவனம் ஏற்கனவே திட்டங்களை வைத்துள்ளது. கடந்த காலத்தில் இந்தப் பிரிவில் இந்நிறுவனம் அஷோக் லேலண்ட் இடம் பங்குகளை இழந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் விலைகளைச் சேமிக்கவும் மற்றும் அதிகத் திறன் வாய்ந்ததாக்கவும் அதன் தயாரிப்பு வழித்தடங்களை முற்றிலும் மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது. மேலும் விலைகளைக் குறைப்பதற்காகச் சில குறிப்பிட்ட பகுதி வசதிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

 

புதிய அறிமுகங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும்

புதிய அறிமுகங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும்

புதிய அறிமுகங்களின் அணிவகுப்பு டாடா மோட்டார்ஸின் வளர்ச்சியை அதிகரிக்கும் மேலும் இது பெருமளவில் ஜேஎல்ஆர் கொட்டிலிலிருந்து வரும். நியு டிஸ்கவரி மற்றும் வேலார் ஆகியவற்றின் எழுச்சி லேண்ட்ரோவரின் மீளுமையை உறுதிப்படுத்துகிறது. அதே சமயம், ஸ்லோவாகியாவின் புதிய உற்பத்தி ஐரோப்பாவின் தேவைகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஎல்ஆரின் லாப வரம்புகள் வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது வரவிருக்கும் மாதங்களில் நாட்களில் லாப விகிதத்தைக் கண்டிப்பாக உயர்த்தும். மேலும் டாடா மோட்டார்ஸ் அதன் எலக்ட்ரிக் வாகனமான ஐ- பேஸை 2018 லும் மற்றும் ஈ- பேஸை இந்த வருட பிற்பகுதியிலும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 30, 2017 ல் முடிவடைந்த காலாண்டிற்கான ஒரு வெற்றி பெற்ற நிறுவனத்தின் லாப வரம்புகள், அந்நிய செலாவணி இழப்புக்களை மறுபரிசீலனை செய்வதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 - 19 ஆம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனம் ரூ. 44 க்கு ஈபிஎஸ் ஐ அறிவிக்கும். இது ஒரு பங்கின் விலையைச் சுமார் 9 மடங்குகள் மலிவானதாக்கும். மொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் நீண்ட கால வரையறையில் வாங்குவதற்கான ஒரு சிறந்த பங்கு ஆகும்.

 

லூபின் லிமிடெட்

லூபின் லிமிடெட்

இந்தியாவில் இரண்டாவது பெரிய மருந்து நிறுவனமாகவும் மற்றும் உலகளாவிய அளவில் ஆறாவது மிகப் பெரிய பொதுத்துறை மருந்து நிறுவனமாகவும் லூபின் உள்ளது. கடந்த சில காலாண்டுகளாக அமெரிக்க எஃப்டிஏ கவலைகளாலும் மற்றும் அமெரிக்கா லாப வரம்புகளைக் குறைத்ததன் காரணமாகவும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை மருந்து நிறுவனங்களில் குவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, லூபின் லிமிடெட் நிறுவனமும் ரூ. 1800 என்ற நிலையிலிருந்து தற்போதைய விலையான ரூ. 1032 க்கு விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

சிக்கலான பொது மருந்து நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வது அமெரிக்க வர்த்தகச் சந்தைகளின் வளர்ச்சிக்கு உதவி செய்வதைப் போன்றதாகும். அதைத் தான் லூபின் கவனம் செலுத்துவதைப் போலத் தோன்றுகிறது. 2017 மற்றும் 2020 க்கு இடையில் மிகப்பெரிய சிக்கலான பொது மருந்து நிறுவனங்களின் கலவையுடன் லூபின் முன்னணி பொது மருந்து நிறுவனமாக மாற விரும்பியது. மேலும் அது உலகளவில் பரவுதலை அதிகரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது. 2017 இல் இந்த நிறுவனம் சில மைல்கற்களைச் சாதித்துள்ளது. கோவா கூட்டத்தில் அமெரிக்க எஃப்டிஏ வை பெற்றுள்ளது, மேலும் இந்நிறுவனம் சில சரிவுகளையும் சந்தித்துள்ளது. சிக்கிம் மற்றும் ஜப்பானில் புதிய தொழிற்சாலையைத் திறந்துள்ளது.

 

லூபினின் முன்நோக்கிய பாதை

லூபினின் முன்நோக்கிய பாதை

முன்னேற்றத்தின் போது வரவிருக்கும் சில காலாண்டுகளில் இந்த நிறுவனம் சில லாப வரம்பு அழுத்தங்களைச் சந்திக்க நேரிடலாம். இருந்தாலும் இதன் பாதை நேர்மறையாகவே தெரிகிறது. இந்த நிறுவனம் நிதியாண்டு 2017 இல் 37 தாக்கல் பதிவுகள் மற்றும் 34 ஒப்புதல்களுடன் 154 ஏஎன்டிஏ நிலுவைத் தாக்கல்களைக் கொண்டுள்ளது. இது ஒப்புதல்கள் நடக்கும் போது இன்னும் நன்றாக இருப்பதற்கான சகுனங்கள் தெரிகிறது. நிலுவையிலுள்ள 28 எஃப்டிஎஃப் க்கள் அமெரிக்க டாலர் 12.4 பில்லியன் சந்தை விற்பனை அளவை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் சுவாசக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஊசிகளின் மீது அதிகளவில் முதலீடு செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நிறுவனத்தின் தொழிற்கூடங்கள் அமெரிக்க எஃப்டிஏ வால் சோதனையிடப்பட்டது. 483 கவனிப்புகள் வெளியிடப்பட்டன அந்தச் சோதனையின் போதே அவை தெளிவுபடுத்தப்பட்டன. லாப விகிதங்களில் அமெரிக்க எஃப்டிஏ அனுமதி போன்ற தற்காலிக பிரச்சனைகள் இருந்தாலும் 2018 - 19 ஆம் ஆண்டில் லூபின் ரூ. 60 க்கான ஈபிஎஸ் ஐ அறிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது பங்குகளை ரூ.1203 லிருந்து ரூ. 1200 க்குக் கொண்டு செல்லும். லூபின் நீண்ட கால வரைமுறைக்கு வாங்குவதற்குச் சிறந்த பங்குகளாகும்.

 

வாங்குவதற்கு ஏற்ற ஸ்மால் கேப் பங்குகள்

வாங்குவதற்கு ஏற்ற ஸ்மால் கேப் பங்குகள்

கடந்த காலத்தில் சிறிய மற்றும் நடுத்தரக் கேப் பங்குகள் அற்புதமான வருவாயைத் தந்தன. உண்மையில் பெரிய கேப் பங்குகளில் கிடைக்கும் வருவாயைச் சிறிய கேப் பங்கு வருவாய் முறியடித்தது. இதனால் இது நீண்ட மற்றும் குறுகிய கால முதலீட்டிற்குச் சிறந்த பந்தயமாக உள்ளது.

 பங்குகளின் மீது வரிவிதிப்பு

பங்குகளின் மீது வரிவிதிப்பு

நீண்ட கால மூலதன லாப வரிகளைப் பங்குகள் கவர்வதில்லை என்பதைக் கவனிக்க வேண்டியது முக்கியமானதாகும். இருந்தாலும், நீங்கள் பங்குகளை ஒரு வருடத்திற்கும் முன்னரே விற்று விட்டால், குறுகிய கால மூலதன லாப வரியாக 15 சதவிகிதத்தைக் கவரும். எனவே, முதலீடு செய்வதற்கு முன்பு வரி விதிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மாறாக, இதில் வரிவிதிப்பு பெரும்பாலும் பங்கு பரஸ்பர நிதிகளில் இருப்பதைப் போலவே இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், ஒரு வருடத்திற்கு மேல் நீங்கள் பங்குகளை வைத்திருந்து லாபத்திற்கு விற்றுவிட்டால் அதில் நீண்ட கால முதலீட்டு நற்பயன்கள் கிடைக்காது.

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரை நிதிப் பத்திரங்கள் அல்லது இதர நிதித் திட்டங்களை வாங்கவோ விற்கவோ தூண்டுவதற்காக வெளியிடப்பட்டதல்ல. கிரேனியம் தகவல் தொழில்நுட்ப தனியார் கட்டுப்பாட்டு நிறுவனம், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் இக்கட்டுரையின் எழுத்தாளர் போன்ற எவரும் இந்தக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இழப்புகள் மற்றும்/அல்லது பாதிப்புகள் ஏற்பட்டால் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Best Shares For Long Term Investment

8 Best Shares For Long Term Investment
Story first published: Tuesday, October 10, 2017, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X