லிக்விட் ஃபண்டுகள் அல்லது சேமிப்புக் கணக்குகள்: அவசரக்காலத்திற்குப் பணத்தினை எங்கு வைப்பது?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

தற்செயலாகச் சில நேரங்களில் நமக்கு ஒரு பெரிய தொகை தேவைப்படும். அவசரமாகப் பணம் தேவை என்ற போது பணத்தினை உடனே எடுத்துக்கொள்ளப் பலரும் விரும்ப்புவது சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை வைப்பது ஆகும். தற்செயலாக நமக்கு வேலை பறிபோனால், காய்ச்சல் பொன்ற காரணங்களுக்கு ஒரே நேரத்தில் அதிகப் பணம் தேவைப்பட வாய்ப்புகள் உண்டு.

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்து இருந்தால் மருத்துவ உதவிக்கு உதவும் ஆனால் பிற பிரச்சனைகள் ஏதும் வந்து பணம் தேவைப்பட என்ன சேமித்தால் பயன் அளிக்கும் என்றாலும் இப்படிச் சேமிக்கும் பணத்தினை எங்கு வைப்பது நல்லது என்று விளக்கமாகப் பார்ப்போம்.

லிக்விட் ஃபண்டுகளில் சரிந்து வரும் லாபம்

சாதாரணச் சேமிப்புக் கணக்குகளில் பணத்தினை வைக்கும் போது ஆண்டுக்கு 3.5 சதவீதம் மட்டுமே லாபம் அளிக்கின்றது. ஆனால் லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது 8 சதவீதம் வரை லாபம் அளிக்கும்.

தற்போது அதுவும் சரிந்து 6 முதல் 6.50 சதவீதம் லாபம் மட்டுமே கிடைக்கிறது. இணையதளச் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் இதுபோன்ற லிக்விட் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்து தேவைப்படும்போது உடனடியாக முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தினைப் பெற முடியும்.

 

வரி விலக்கு

சேமிப்பு கணக்குகளின் மூலமாக ஒரே ஆண்டில் 10,000 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் பெறும் போது வருமான வரி செலுத்த வேண்டும். இதுவே 10,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வரி விலக்கு உண்டு.இதற்கு நீங்கள் சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு 2.85 லட்சம் ரூபாய் வைத்து இருந்தால் மட்டுமே 3.5 சதவீதம் வட்டி விகிதத்திற்கு 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

லிக்விட் ஃபண்டுகளுக்கு இணையான லாபம் அளிக்கும் சேமிப்புக் கணக்குகள்

பின் வரும் சேமிப்புக் கணக்குகளில் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வைத்து இருக்கும் போது லிக்விட் ஃபண்டு திட்டங்களுக்கு இணையான லாபத்தினை அளிக்கும்.

ஆர்பிஎல் வங்கி சேமிப்புக் கணக்குகள் முதல் 1 லட்சம் ரூபாய்க்கு 5.1 சதவீதமும், அடுத்த 1 லட்சம் ரூபாய்க்கு 6.1 சதவீதமும் லாபத்தினை அளிக்கிறது. யெஸ் வங்கி மற்றும் கோடாக் மகேந்திரா வங்கி முதல் 1 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதமும் அடுத்த 1 லட்சம் ரூபாய்க்கு 6 சதவீத லாபத்தினையும் அளிக்கிறது. லக்‌ஷ்மி விலாஸ் வங்கி முதல் 5 சதவீத லாபத்தினை அளிக்கிறது. இண்டஸ்லாந்து வங்கி முதல் 1 லட்சத்துக்கு 4 சதவீத லாபமும், அடுத்த 1 லட்சத்திற்கு 5 சதவீத லாபமும் அளிக்கிறது.

 

உடனடி பணத் தேவைக்கு

எனவே அவசரக் காலத்தில் பணத் தேவை என்றால் எடுக்கக் கூடிய லிக்விடு ஃபண்டு திட்டங்களும் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து இணையதள வங்கி சேவை மூலம் முதலீடு செய்தால் எங்கு இருந்தும் உடனடியாகப் பணத்தினைத் தேவைப்படும் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Liquid funds vs savings account: Where to park your emergency fund?

Liquid funds vs savings account: Where to park your emergency fund?
Story first published: Monday, November 13, 2017, 17:14 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns