திருமணத்திற்கு முன்பு உங்கள் வருங்காலத் துணையிடம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் திருமண நிகழ்ச்சிக்கான மண்டபத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா, விருந்தினர் பட்டியலை இறுதியாகச் சரிபார்த்து விட்டீர்களா, திருமண உடைகளுக்குப் பொருத்தமான வண்ணத்தில் காற்சட்டைகளைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா, ஆனால் இதுவரை நீங்கள் உங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணைவரிடம் நிதி நிலைகளைப் பற்றி விவாதம் செய்திருக்கிறீர்களா?

பணத்தைப் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் பேசுவது உங்கள் அடுத்த விடுமுறை பயணத்தைப் பற்றிப் பேசுவதைப் போல உற்சாகமானதல்ல. ஆனால் அது நீங்கள் இருவரும் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான உரையாடலாகும். ஒரு திருமணமான தம்பதிகளாக மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் மற்றும் எத்தகைய கடினமான சூழ்நிலைகளையும் நீந்திக் கடப்பதற்கும், நீங்கள் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவரிடம் கேட்க வேண்டிய ஐந்து பணம் தொடர்பான கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. நீங்கள் வைத்துள்ள கடன் பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா?
 

1. நீங்கள் வைத்துள்ள கடன் பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா?

உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவரின் கடந்த கால நிதிகள் நீங்கள் தாங்க வேண்டிய சுமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்கூட்டி அவர்களுடைய நிதி சார்ந்த பொறுப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். கடன்களால் இயக்கப்படும் நமது பொருளாதாரத்தில் உங்கள் கடந்த காலக் கடன்கள் வருங்காலச் சேமிப்புத் திறனை பாதிக்கலாம். எனவே எந்தவொரு பெரிய முதலீட்டில் கொள்முதல் செய்வதற்கு முன் நீங்கள் இருவரும் விஷயங்களை எப்படி நிர்வகிக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வது சிறந்ததாகும். மிகப் பெரிய கடன்களை நீங்கள் இருவருமாகச் சேர்ந்து அடைத்து விட்டு பெரிய கொள்முதல்களைப் பிறகு வாங்கலாம் எனத் தள்ளிப் போடுவது உங்கள் வாழ்க்கைப் படகை நிலையாக வைத்திருப்பதோடு மேற்கொண்டு முக்கியக் கடமைகளுக்குத் தயாராகவும் உதவும்.

 2. உங்கள் நீண்டகால நிதி சார்ந்த இலக்குகள் என்ன?

2. உங்கள் நீண்டகால நிதி சார்ந்த இலக்குகள் என்ன?

உங்களுக்கு ஒரு சொந்த வீடு வாங்க வேண்டுமென்பது இலக்காக இருக்கலாம், அதே சமயம் உங்கள் வருங்காலக் கணவருக்கு ஒரு கார வாங்க வேண்டுமென்று மனதில் நினைத்திருக்கலாம். திருமணம் செய்து கொள்வதே இருவருமாக இணைந்து இலக்குகளை அடைவதற்காகத் தான். அதனால் தான் ஒருவரைப் பற்றி ஒருவர் முழுமையாகத் தெரிந்து கொள்வதே வெற்றிகரமான திட்டமிடுதலுக்கான முக்கிய ரகசியமாகும்.

எனவே நீங்கள் இருவரும் இணைந்து நிதிகளைக் கையாளும் போது, இருவருமாக இணைந்து ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வது சிறந்தது. இதனால் ஒருவர் மட்டுமே நிதி சார்ந்த கடமைகளைச் சுமக்க வேண்டியதில்லை மேலும் இருவரில் ஒருவர் இறக்க நேரிடும் போது இழந்த வருவாயை சரிக்கட்ட முடியும். மேலும் யூலிப்கள் (தொகுதியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள்) எளிதாக இணையத்தில் கிடைக்கின்றன. காப்பீடு இளைய தலைமுறை காப்பீட்டாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கிறது அவர்கள் பல்வேறு அபாயங்கள் கொண்ட சந்தை நிதித் திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் மீதமிருக்கும் தொகையில் காப்பீடு செய்கிறார்கள்.

 3. எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
 

3. எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?

குழந்தைகள் தான் திருமண வாழ்க்கையின் மிகப் பெரிய நிதி சார்ந்த கடமையாவர். மேலும் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிப்படுத்த நிதி ரீதியாக நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எனவே, உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவர் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமதனதாகும்.

முதலீடுகளைத் தவிர நீங்கள் வாழ்க்கை இலக்குகளை ஒன்றாகச் சேர்ந்து தீர்மானிக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கான நிதித் திட்டமிடலால் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதைப் பற்றி நீங்கள் ஒருமித்த கருத்துக்கு வர உதவியாக இருக்கும். பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெறக் கூடிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது ஒவ்வொரு பெற்றோருக்கும் மைல்கல்லான நிதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு சிறந்த வழியாகும். மேலும் உங்களில் யாரேனும் ஒருவரது மறைவுக்குப் பிறகும் உங்கள் நலவாழ்வை இது உறுதிப்படுத்தும்.

4. உங்கள் ஓய்வுகாலத் திட்டங்கள் என்ன?

4. உங்கள் ஓய்வுகாலத் திட்டங்கள் என்ன?

பெரும்பாலான பணிகளில் இன்று ஊழியர்களுக்கு ஓய்வுகாலப் பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. ஓய்வுக்குப் பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்ள வேண்டுமென விட்டுவிடுகிறார்கள். ஓய்வுகாலத் திட்டங்களைக் கேட்டறிதல் உங்கள் மறைமுக நிதிப் பொறுப்புகளைக் கண்டறிந்து மற்றும் விரைவில் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கும். இந்த வழியில் நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் உங்கள் வாழ்க்கை முறையை நன்கு பராமரிக்கப் போதுமான அளவு சேமிக்கலாம்.

தொகுதியாக இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் வழியாக ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வதைப் பற்றிச் சிந்தியுங்கள். அது உங்களை 15 முதல் 35 வருடங்களுக்கு இடையில் பரந்த அளவிலான சந்தைத் திட்டங்களில் உங்களை முதலீடு செய்ய அனுமதிக்கும். அதே சமயம் உங்களுக்கு ஆயுள் காப்பீட்டை தொடங்கவும் வழிவகுக்கும்.

5. நீங்கள் எதில் எப்போது முதலீடு செய்ய இருக்கிறீர்கள்?

5. நீங்கள் எதில் எப்போது முதலீடு செய்ய இருக்கிறீர்கள்?

உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவர் எதில் எப்படி முதலீடு செய்யச் செய்ய விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இது அவர் எத்தகைய முதலீட்டாளர் என்பதை உங்களுக்குப் பரிந்துரைக்கும். நம்மில் சிலருக்கு அதிக லாபத்தைப் பெறுவதற்காக அதிக அபாயங்களை எதிர்கொள்வது சரியாக இருக்கலாம். இருந்தாலும், சிலர் நமது முதலீடுகள் அதிர்ஷ்டகரமான லாபத்தை ஈட்டவில்லை என்றால் கூட அவை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள அதிக அக்கறையுடன் இருப்பார்கள்.

இருப்புத் தொகை தான் இங்குள்ள முக்கியமான விஷயம். முதலீட்டு விஷயங்களில் உங்கள் வாழ்கைத் துணைவர் பாதுகாப்பாக விளையாட விரும்பினால், சற்று அதிக வருவாயைப் பெற சிறிது அபாயத்தை எடுப்பதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவருடன் விவாதியுங்கள். இதற்கு மாறாக உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவரின் முதலீட்டு நிதிகள் அபாயங்கள் அதிகமுள்ள முதலீடுகளாக இருந்தால், உங்கள் சொந்த முதலீடுகளை நீங்கள் பாதுகாப்பான பழமையான முதலீடுகளாக வைத்திருக்க வேண்டும்.

 ஏன் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும்?

ஏன் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும்?

திருமணம் என்பது நீண்ட நாளுக்கான ஒப்பந்தம் எனவே நீங்கள் நிதியியல் ரீதியாக என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டி தெரிந்து வைத்திருப்பது சிறந்தது. எனவே பணம் வாழ்க்கையின் பல இலட்சியங்களை அடைய அவசியமானது என்பதால், உங்கள் வருங்கால வாழ்க்கை துணைவருடன் வெளிப்படையான நிதி திட்டங்களை வைத்திருப்பது நீண்ட காலத்திற்கான நம்பிக்கை மற்றும் கடமைகள் கொண்ட ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கான இரகசியமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 money related questions to ask your future spouse

5 money related questions to ask your future spouse
Story first published: Saturday, December 16, 2017, 12:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X