‘என்ஆர்ஐ’களுக்கு ஏற்ற 8 என்ஆர்ஈ வங்கி சேமிப்புக் கணக்குகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ஆர்ஐ-கள் இந்தியாவில் என்ஆர்ஈ மற்றும் என்ஆர்ஓ சேமிப்பு கணக்குகளை நிர்வகிக்க வேண்டும்.

என்ஆர்ஐ என்றால் யார்?

இந்தியாவின் அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம் 1999 இன் படி இந்திய குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவருக்கு வேலை அல்லது வணிக ரீதியாகக் குறிப்பிட முடியாத நாட்களுக்கு வெளிநாட்டில் உள்ளார் என்றால் அவர் என்ஆர்ஐ என்று கருதப்படுவார். அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் 182 நாட்களுக்குக் குறைவாகத் தான் ஒருவர் இருக்கிறார் என்றாலும் அவரும் என்ஆர்ஐ ஆகக் கருதப்படுவார்.

என்ஆர்ஓ கணக்கு என்றால் என்ன?
 

என்ஆர்ஓ கணக்கு என்றால் என்ன?

என்ஆர்ஓ கணக்கை பயன்படுத்தி இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து பணத்தினைப் பெற்று உள்ளூரில் பரிவர்த்தனைகளைச் செய்யலாம். வெளிநாடு செல்ல இருக்கும் என்ஆர்ஐ-கள் தங்களது உள்ளூர் சேமிப்புக் கணக்கை என்ஆர்ஓ கணக்காக மாற்ற வேண்டும்.

என்ஆர்ஈ கணக்கு என்றால் என்ன?

என்ஆர்ஈ கணக்கு என்றால் என்ன?

என்ஆர்ஈ கணக்கில் வெளிநாட்டில் இருந்து மட்டுமே பணத்தினைப் பெற முடியும். ஆனால் பணத்தினை இந்தியா மற்றும் வெளிநாடு என எங்கு இருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு வரிப் பிடித்தம் ஏதும் கிடையாது. ஒருவேலை என்ஆர்ஓ கணக்கு இருக்கும் போது வட்டியின் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

என்ஆர்ஈ கணக்கு திறக்கும் போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

என்ஆர்ஈ கணக்கு திறக்கும் போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும்?

என்ஆர்ஈ கணக்கை திறக்கும் முன்பு நீங்கள் வசிக்க உள்ள நாட்டில் உங்கள் வங்கிக்கான சேவை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். பின்னர்க் கணக்கில் உள்ள பணத்திற்கு எவ்வளவு வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளவும். எனவே இதுப்போன்று எந்தச் சேமிப்புக் கணக்குகள் எல்லாம் சிறந்த முறையில் என்ஆர்ஈ சேமிப்பு கணக்குகளை அளிக்கிறது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

 ஆர்பிஎல் என்ஆர்ஐ கணக்குகள்
 

ஆர்பிஎல் என்ஆர்ஐ கணக்குகள்

ரத்னகர் வங்கி எனப்படும் ஆர்பிஎல் வங்கி என்ஆர்ஐகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு 6.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கிறது. எனவே தான் நாங்கள் உங்களுக்கு ஆர்பிஎல் வங்கியை பரிந்துரை செய்கிறோம்.

என்ஆர்ஈ மற்றும் என்ஆர்ஓ டெபாசிட்களுக்கு அதிகபட்சம் 7.10 சதவீதம் வட்டி விகிதம் வரை ஆர்பிஎல் வங்கி லாபம் அளிக்கிறது.

டாய்ச் பேங்க் வேல்யூ பிளஸ் சேவிங்ஸ்

டாய்ச் பேங்க் வேல்யூ பிளஸ் சேவிங்ஸ்

டாய்ச் பேங்க் வேல்யூ பிளஸ் சேவிங்ஸ் 2.5 சதவீத பெட்ரோல் கட்டணம் தள்ளுபடியுடன் சர்வதேச டெபிட் கார்டுகளை என்ஆர்ஐகளுக்கு அளிக்கிறது. 5 வருடம் வரை டெபாசிட் திட்டங்களில் பணத்தினை வைத்திருப்பவர்களுக்கு 8 சதவீதம் வரை டாய்ச் பேங்க் வேல்யூ பிளஸ் சேவிங்ஸ் கணக்கு அளிக்கிறது. ஆனால் சிக்கல் என்றால் அதிகத் தொகையினைக் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்பது ஆகும்.

பாங்க் ஆ பரோடா என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு

பாங்க் ஆ பரோடா என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு

ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பாங்க் ஆ பரோடா அதிகப்படியான கிளைகளுடன் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் என்ஆர்ஐ-களால் தங்களது என்ஆர்ஈ சேமிப்புக் கணக்கினை எளிதாக நிர்வகிக்க முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் லாக்கர், செக், கரன்சி போண்ர வல விதமான சேவைகளை வழங்குகிறது. இதனால் என்ஆர்ஈ சேமிப்பு கணக்கிற்கு என்ஆர்ஐகள் அதிகமாகப் பாங்க் ஆ பரோடா என்ஆர்ஈ சேமிப்புக் கணக்கினை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

கோடாக் மகேந்திரா வங்கி

கோடாக் மகேந்திரா வங்கி

கோடாக் மகேந்திரா வங்கியின் என்ஆர்ஈ சேமிப்புக் கணக்கில் பணத்தினை வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகிதமும், பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு 8.90 சதவீதம் வரையிலான வட்டி விகித லாபத்தினைக் கோடாக் அளிக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு

ஐசிஐசிஐ வங்கி என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு

ஐசிஐசிஐ வங்கி என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு வேண்டும் என்றால் குறைந்தது 10,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும். என்ஆர்ஐகளைச் சார்ந்து உள்ள குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவை என்றால் இலவச டெபிட் கார்டு மற்றும் செக் புக் பயன்படுத்தும் சேவையினையும் ஐசிஐசிஐ அளிக்கிறது. பணத்தினை இந்திய ரூபாய் மதிப்பில் நிர்வகிக்க அனுமதி அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் என்ஆர்ஈ வங்கி சேவையினை ஐசிஐசிஐ அளிக்கிறது.

எஸ்பிஐ என்ஆர்ஈ கணக்குகள்

எஸ்பிஐ என்ஆர்ஈ கணக்குகள்

எஸ்பிஐ என்ஆர்ஐ சேமிப்பு கணக்குக் குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருப்புத் தொகை முதல் கிடைக்கிறது. இது வாடிக்கையாளர்கள் கணக்கு துவங்கும் கிளை உள்ள நகரத்தினைப் பொறுத்தது ஆகும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் என்று தினமும் கணக்கிட்டு எஸ்பிஐ அளிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் எஸ்பிஐ தனது என்ஆர்ஈ கணக்குச் சேவையினை அளிக்கிறது.

எச்டிஎப்சி என்ஆர்ஈ சேமிப்புக் கணக்குகள்

எச்டிஎப்சி என்ஆர்ஈ சேமிப்புக் கணக்குகள்

எச்டிஎப்சி என்ஆர்ஈ சேமிப்பு கணக்கு பயன்படுத்துபவர்கள் கிவிக்ரெமிட், இந்தியாலிங்க், டெலிகிராபிக் டிரான்ஸ்பர் மற்றும் செக் அல்லது டிராப்ட் வசதிகள் மூலமாகப் பணத்தினை அனுப்ப முடியும். இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்பட்டால் ஏடிஎம் கார்டு ஒன்று இலவசமாக அளிக்கப்படும்.

என்ஆர்ஈ கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி பிகிதம் என ஒவ்வொரு காலாண்டும் வட்டி அளிக்கப்படும்.

சிட்டி பாங்க் என்ஆர்ஈ கணக்கு

சிட்டி பாங்க் என்ஆர்ஈ கணக்கு

அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்தியர்கள் சிட்டி பாங்க் என்ஆர்ஈ கணக்கை துவங்க 5000 அமெரிக்க டாலரை இருப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவச டெபிட் கார்டு அளிக்கப்படும். என்ஆர்ஈ கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி பிகிதம் என ஒவ்வொரு அரையாண்டிலும் வட்டி அளிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 Best NRE Savings Accounts For NRI's

8 Best NRE Savings Accounts For NRI's
Story first published: Wednesday, December 13, 2017, 16:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X