நீங்கள் கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டிய ஐந்து சேமிப்புத் திட்டங்கள்!

ஊழியர்கள் வருங்கால நல வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி, நிலையான வைப்பு நிதி, தேசிய ஓய்வூதியத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் ஆகியவை நீங்கள் முதலீடு செய்யக்கூடிய முக்கியச் சேமிப்புத் திட்டங்களாகும்.

அன்பார்ந்த வாசகர்களே, நீங்கள் நிறையச் சம்பாதிக்கலாம், ஆனால் போதுடமான அளவு உங்களால் சேமிக்க முடியாவிட்டால், தேவைப்படும் நேரங்களில் உங்களால் பணத்தைப் பெறவும் முடியாது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் சேமிக்கவும் முடியாது. எனவே, சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டியது முதன்மையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இருந்தாலும், முதலீடு செய்யும் முடிவு எளிதானதல்ல. ஒருவர் முதலீடு செய்யும் போது அந்தச் சேமிப்புத் திட்டம் உருவாக்கும் வருவாய், முதலீட்டின் பூட்டுக் காலம், வரிப் பயன்கள், மற்றும் பலப் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கே ஐந்து முக்கியச் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அதன் பயன்களைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது:

1. பணியாளர் வருங்கால நல வைப்பு நிதி

1. பணியாளர் வருங்கால நல வைப்பு நிதி

பணியாளர் வருங்கால நல வைப்பு நிதி (ஈபிஎஃப்) என்பது சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கானது. ஈபிஎஃப் என்பது பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர்களுக்கான வருங்கால நல வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎஃப்ஓ) இந்த நிதிகளை நிர்வகிக்கிறது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

ஈபிஎஃப் இன் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் நிதியின் சராசரி வருவாயை அடிப்படையாகக் கொண்டு ஈபிஎஃப்ஓ வாரியத்தால் முடிவு செய்யப்படும். 2016-17 நிதியாண்டில், 8.65 சதவீத வட்டியுடன் வட்டியை செலுத்தியது.

வரிப்பயன்கள்

வரிப்பயன்கள்

ஈபிஎஃப் இல் கிடைக்கும் வருவாய் வருமான வரிச் சட்டம் 80 சி இன் கீழ் வரிவிலக்கிற்குத் தகுதியுடையதாகிறது. அதிகபட்சமாக ரூ. 1.50 இலட்சம் வரை ஒவ்வொரு வருடமும் ஈபிஎஃப் சேமிப்பில் நீங்கள் ஈட்டும் வட்டி மற்றும் இறுதி முதிர்வு தொகைக்கு வரி விலக்க உண்டு.

 2. பொது வருங்கால வைப்பு நிதி

2. பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி (பிபஎஃப்) கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான வட்டி விகிதம் மற்றும் வருவாயைத் தருகிறது. அது வரியிலிருந்து முற்றிலும் விலக்குப் பெற்றது. ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 ம் அதிகபட்சமாக ரூ. 1.5 இலட்சமும் ஆகும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

கடந்த வருடம் ஏப்ரல் முதல் பிபிஎஃப் மற்றும் இதர சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மறு மதிப்பீடு செய்யப்படுகிறது. பிபிஎஃப் முதலீட்டாளர்கள் 7.8 சதவிகித வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.

வரிப் பயன்கள்:

வரிப் பயன்கள்:

பிபிஎஃப் ஈஈஈ பயன்களைப் பெறுகிறது. அவை பங்களிப்பு, வட்டி மற்றும் முதிர்வு தொகை அனைத்திற்கும் வரிவிலக்கு ஆகும்.

3. நிலையான வைப்பு நிதிகள்

3. நிலையான வைப்பு நிதிகள்

நிலையான வைப்பு நிதிகள் நமது நாட்டில் கிடைக்கப்பெறும் புகழ்பெற்ற சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இன்றும் மக்கள் எஃடி இல் உள்ள நெகிழ்வுத்தன்மை மற்றும் பணமாக்கும் தன்மை காரணமாக அதில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகிறார்கள். நிலையான வைப்பு நிதிகள், நீண்ட கால வைப்பு நிதிகள் என்றும் அறியப்படுகிறது. இது அந்தத் திட்டக் காலம் முழுவதும் ஒரு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. உதாரணமாக ஒரு வருட காலத்திற்கு ரூ. 1 கோடிக்கும் குறைவான வைப்பு நிதியில் நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 6.25 சதவிகித வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆனால் இது வரிப்பயன்கள் அளிக்காது. பொதுவான எஃப்டிக்கானது ஆகும்.

 வரிப்பயன்கள்

வரிப்பயன்கள்

வங்கி வைப்பு நிதிகளில் ஈட்டப்படும் வட்டி வருமானம் முழுவதுமாக வரி விதிப்புக்கு உட்பட்டது. ஆனால் வங்கி சேமிப்புக் கணக்கில் ஒரு வருடத்திற்கு ரூ. 10,000 வரை ஈட்டப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. ஆனால் வங்கி எஃப்டி க்களில் வருடத்திற்கு ரூ. 10,000 க்கும் அதிகமான வட்டி வருவாய் பெற்றால் அதற்கு 10 சதவிகித வருமான ஆதாய வரி உண்டு. டிடிஎஸ் ஒரு குறிப்பிட்ட வங்கியின் அனைத்துக் கிளைகளில் கிடைக்கும் கூட்டு வட்டி வருவாயை சரிபார்ப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

சில வங்கிகள் வரிச் சேமிப்பு வைப்பு நிதிகளை வழங்குகிறது. இந்த வைப்பு நிதிகளில் முதலீடு செய்யும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. ஆனால், வரிச் சேமிப்பு எஃப்டி க்களில் நீங்கள் ஈட்டும் வட்டிக்கு வரி உண்டு.

 

 4. தேசிய ஓய்வூதியத் திட்டம்

4. தேசிய ஓய்வூதியத் திட்டம்

தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி துவங்கப்பட்டது. அனைத்து குடிமக்களுக்கும் ஓய்வூதிய வருமானத்தை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. என்பிஎஸ் ஓய்வூதிய சீர்திருத்தங்களை நிறுவவும் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும் நிறுவப்பட்டதாக என்பிஎஸ் வலைத்தளம் தெரிவிக்கிறது.

இதன் சொத்து ஒதுக்கீடு மற்றும் வருவாய் மேம்பாடு மற்றும் 1.5 இலட்சத்திற்கு மேல் ரூ. 50,000 வரை வரி விலக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள் குறிப்பாக இளைய சமுமதாயம் இந்தத் திட்டத்திற்குச் சேமிப்பை ஒதுக்க வேண்டும் என்கிறார். டிபிஎன்ஜி முதலீட்டு ஆலோசகர்களின் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான தருண் பிராணி.

 

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

என்பிஎஸ் வருவாய் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எங்கள் பார்வையில் பிபிஎஃப், பிஎஃ போலச் சந்தை தொடர்புடைய முதலீடுகளில் என்பிஎஸ் ம் உறுதியளிக்கப்பட்ட வருவாயைத் தருகிறது. இது இரண்டு காரணங்களால் நடக்கிறது. அவை என்பிஎஸ் இன் பங்கு சந்தை வெளிப்பாடு மற்றும் தொழில்முறை நிதி மேலாண்மை என்கிறார் அவுட் லுக் ஏசியா கேபிடல் நிறுவன நிர்வாக இயக்குனர் மனோஜ் நாக்பால்

வரிப்பயன்கள்

வரிப்பயன்கள்

என்பிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2 இலட்சம் வரை செய்யப்படும் முதலீட்டிற்கு (பிரிவு 80சி இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் பிரிவு 80 சிசிடி இன் கீழ் கூடுதலாக ரூ. 50,000 வரை) வரி விலக்கிற்குத் தகுதியுடையதாகிறது.

5. தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

5. தேசிய சேமிப்புப் பத்திரங்கள்

தேசிய சேமிப்புப் பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் அனைத்துத் தபால் அலுவலகங்களிலும் விற்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்குப் பிரிவு 80 சி இன் கீழ் வரிவிலக்கு உண்டு.

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

என்எஸ்சி ஆல் தற்போது வழங்கப்படும் வட்டி விகிதம் 7.8 சதவிகிதம் என்று இந்திய தபால் துறை வலைத்தளம் தெரிவிக்கிறது. உதாரணமாக 1.10.2006 க்கு பிறகு வாங்கப்படும் ரூ. 100 க்கான பத்திரத்தின் முதிர்வு மதிப்பு 5 வருடங்கள் கழித்து ரூ. 146.93 ஆக இருக்கும்.

வரிப்பயன்கள்

வரிப்பயன்கள்

என்எஸ்சி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் நிதிகளுக்கு ரூ. 1.50 இலட்சம் வரை வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் வரிவிலக்கு உண்டு. என்எஸ்சி திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. மேலும் வட்டித் தொகையின் மீது டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. இருந்தாலும் என்எஸ்சி திட்டத்தில் ஈட்டப்படும் வட்டிக்கு வரிவிதிப்பு உண்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+