ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் என்ஆர்ஐ-கள் இந்தியாவில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்!

உயர்வான வட்டி விகிதங்கள் மற்றும் துடிப்பான பங்குச் சந்தைகள், உங்களுடைய முதலீடுகளை வேகமாக வளர்த்தெடுக்க உதவுகின்றது. அவ்வாறு சேர்த்து வைத்த சேமிப்பானது, உங்களுடைய ஓய்வு காலத்தில், நிதி அடிப்படையில் சுதந்திரமான மனிதர்களாகச் செயல்பட அனுமதிக்கின்றது.

இந்தியா வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பணப்பரிமாற்ற நாடுகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெளிநாட்டினர் இந்தியாவிற்கு அனுப்பிய தொகையானது 69 பில்லியன் டாலர் என்கிற அளவில் மிக அதிகமாக இருந்தது. இந்த அளவு குறிப்பிடத்தக்கது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத அளவிற்கு உள்ளது.

யூஏஈ-ல் இருந்து இந்தியா வரும் பணத்தின் மதிப்பு

யூஏஈ-ல் இருந்து இந்தியா வரும் பணத்தின் மதிப்பு

இந்த மொத்த தொகையில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் அனுப்பிய தொகை மொத்த தொகையில் பெரும் பங்கு வகிக்கின்றது. உலக வங்கியின் தகவலின் அடிப்படையில், இந்தியாவிற்கு அனுப்பப்படும் மொத்த தொகையில், ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் 38.7 சதவீத பங்களிக்கின்றது. இதற்கு அடுத்த நிலையில் சுமார் 28.2 சதவீத பங்களிப்புடன் சவுதி அரேபியா உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சார்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய குடும்பச் செலவினங்களுக்காகப் பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகின்றார்கள். இருப்பினும், குறிப்பாக நீங்கள் ஒரு இந்தியராக இருந்தால், இந்த நாட்டிற்கு அதிக அளவில் பணத்தை அனுப்பி அதிகமாக முதலீடு செய்வதற்கு உங்களைத் தூண்ட பல காரணங்கள் உள்ளன.

 

 

முதல் மற்றும் முக்கியக் காரணம் ஓய்வூதியம்

முதல் மற்றும் முக்கியக் காரணம் ஓய்வூதியம்

யு.ஏ. இ என்பது வாழ்வதற்கும் சம்பாதிப்பதற்கும் உகந்தது. எனினும் ஒருவருடைய ஓய்வு காலங்களைக் கருதும் பொழுது அவர்களின் நினைவிற்கு வருவது, அவர்களின் முதல் வீடாகிய இந்தியா மட்டுமே. நீங்கள் உங்களுடைய ஓய்வு காலங்களை இங்குக் கழிக்க விரும்புகின்றீர்கள் எனில், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு பணத்தைச் சேமிப்பது அதுவும் உங்களுடைய வாழ்வின் ஆரம்பக் காலத்தில் தொடங்குவது சிறந்தது.

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

யூஏஈ இல் உள்ள வங்கிகள் வழக்கமாகச் சேமிப்புக் கணக்கிற்கு 2% வரை வருடாந்திர வட்டி (அல்லது லாபம்) விகிதத்தை வழங்குகின்றன. ஒப்பீடு அடிப்படையில், இந்தியாவில் சேமிப்பு வங்கி கணக்கிற்குக் குறைந்தது 4 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகின்றது. இந்தியாவில் ஒரு சில வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு 6 முதல் 7 சதவிகித வட்டி வழங்குகின்றன.

ஒரு வருடத்திற்கு 2% வட்டி வருமானம் கொடுக்கக் கூடிய சாதாரணச் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் மாதந்தோறும் $ 2,500 சேமித்து வைத்தால், உங்களுடைய சேமிப்பானது 25.58 ஆண்டுகளில் $ 1 மில்லியனாக இருக்கும். ஒப்பீட்டளவில், ஆண்டுதோறும் 6 சதவிகிதம் வட்டி கொடுக்கின்ற ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கில் நீங்கள் அதே அளவு சேமிக்கத் தொடங்கினால், உங்களால் சுமார் ஏழு வருடங்களைச் சேமிக்க முடியும். அதாவது உங்களுடைய சேமிப்பானது சுமார் 18.33 வருடங்களில் 1 மில்லியன் டாலரைத் தொட்டு விடும்.

 

நிலையான மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை

நிலையான மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை

என்ஆர்ஈ நிலையான மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை இன்னும் அதிக லாபகரமானது. 1 வருடம் மற்றும் 15 நாட்களுக்கும் மேலாக முதலீட்டுக் காலத்திற்கு 7% மற்றும் அதற்கு மேலான வருடாந்திர வட்டி விகிதம் (காலாண்டு கூட்டு வட்டி) வழங்கப்படுகின்றது. மேலும், கூட்டு வட்டியானது உங்களுடைய முதலீட்டை வேகமாக வளர்க்கின்றது.

ஒப்பிடும்போது, இந்தியாவில் கால வைப்புத்தொகை மற்றும் தொடர்ச்சியான வைப்புத்தொகை கணக்குகள் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளை விடக் குறைவான வருவாயைத் தருகின்றன . அதாவது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 1.25 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதம் குறைவாகத் தருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 20,000 திர்ஹாம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஐந்து ஆண்டுக் கால வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சதவிகித வட்டி கிடைக்கின்றது.

 

துடிப்பான பங்குச் சந்தை

துடிப்பான பங்குச் சந்தை

இந்தியாவில் உள்ள பங்குச் சந்தைகள் பல ஆண்டுகளாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை அள்ளித் தருகின்றன. பம்பாய் பங்குச் சந்தையில் சுமார் 5,500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, மேலும் ஆசியாவின் மிகவும் பழமையான பங்கு சந்தையாகும். இது ஒரு சந்தை மட்டுமே $ 1.7 டிரில்லியன் மதிப்புள்ள பங்குகளைக் கையாளுகின்றது. மேலும் சர்வதேச அளவில் 11 வது பெரிய பங்குச் சந்தையாகக் கருதப்படுகிறது.

வருவாய் அடிப்படையில், 30 பங்குகளை அடிப்படையாக் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண், சென்செக்ஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 10.5 சதவீதம் வருமானத்தைக் கொடுத்துள்ளது. இதனுடைய இளைய உறவினரான தேசிய பங்குச் சந்தையின் 50-பங்கு நிஃப்டி குறியீடு எண் 11.8 சதவீத வருமானத்தை ஈட்டியுள்ளது. கார், மருந்து மற்றும் பல்வேறு துறை சார்ந்த பங்குகள் இதே நேரத்தில் 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இவை போன்ற அதிக வருவாய் தரும் சொத்து வகுப்புகளில் முதலீடு உங்களுடைய செல்வத்தை மிகவும் வேகமாக அதிகரிக்கச் செய்யும்.

 

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

சந்தைகளின் ஏற்ற இறக்கங்களில் எதிர் நீச்சல் போட நீங்கள் தயங்கினால், தொழில் முறை விற்பன்னர்களினால் நிர்வகிக்கப்படும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். கடுமையான கண்காணிப்புடன் செயல்படும், இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் முதலீடு செய்வதற்கு வசதி அளிக்கின்றன. இந்தியாவில் 40 க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இவை நூற்றுக்கணக்கான திட்டங்களை வழங்குகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்ற நிறுவனங்கள் இந்தியாவிற்குப் பணம் அனுப்பும் வசதியான மற்றும் தொந்தரவாக இல்லாத பல்வேறு வழிகளை வழங்குகின்றன. உங்கள் பணத்தை உங்களைப் போன்றே கடுமையாக உழைக்க வைத்து, அதிக வட்டி, இலாப பங்குகள் மற்றும் அடிப்படை சொத்துக்களின் மதிப்பில் முந்துவது ஆகியவற்றின் மூலமாக நீங்கள் அதிகப் பணம் ஈட்டலாம். உங்கள் சேமிப்பு முறைகள் மற்றும் ஆபத்தை எதிர் கொள்ளும் திறன்களை மனதில் கொண்டு உங்களுடைய செல்வத்தைப் பெருக்கிடுங்கள். அதன் மூலம் உங்களுடைய நிதி இலக்குகளை எளிதில் அடைந்திடுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+