உங்கள் கடன் மதிப்பீடு பாதிக்கப்படாமல் தனிநபர் கடன் பெறுவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பல்வேறு நிதி நிறுவனங்களில் ஒரு தனிநபர் கடனுக்காக விண்ணப்பித்தால், உங்கள் கடன் மதிப்பீடு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. எனவே உங்கள் கடன் மதிப்பீட்டுநிலை பாதிக்கப்படாத வகையில், சிறந்த ஆன்லைன் தனிநபர் கடனைப் பெறுவதற்கான சில வழிகளைக் குறித்து இங்குக் காண்போம்.

ஒவ்வொரு முறை நீங்கள் கடன் தொகையைச் சேர்க்கும் போதும், உங்கள் கடன் மதிப்பீடு பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் லோன்களைச் சரியான நேரத்தில் நீங்கள் திரும்பச் செலுத்தும் போது, உங்கள் சிபில் கோரை உயர்த்த அந்தக் கடனே உதவுகிறது. இதிலிருந்து உங்கள் கடன் மதிப்பீடு மற்றும் கடன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே, உங்களின் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கடன் அளிப்பவர் தீர்மானிக்கிறார் என்பதை நீங்கள் அறியலாம்.எனவே நீங்கள் ஒரு சிறந்த கடன் மதிப்பீட்டைப் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்பது விளங்குகிறது.

எதுவெல்லாம் உங்கள் கடன் மதிப்பீட்டைப் பாதிக்கும் மற்றும் பாதிக்காது?

உங்கள் வயது, திருமண நிலை மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு போன்ற காரியங்கள், எந்த வகையிலும் உங்கள் கடன் மதிப்பீட்டைத் தீர்மானிப்பதில்லை. மேலும் உங்கள் வருமானம், வங்கி இருப்பு மற்றும் பணிபுரியும் நிலை போன்ற தகவல்கள், உங்கள் கடன் மதிப்பீட்டை நேரடியாகப் பாதிப்பதில்லை. இவை கடன் பெறுவதற்கான கடைசிக் கட்ட ஒப்புதலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கடன் மதிப்பீட்டைப் பாதிக்கும் காரணிகள் மற்றும் உங்களை ஒரு சிறந்த தனிப்பட்ட கடனை பெறுவதற்குத் தகுதிப்படுத்தும் காரணி வரையறுக்கப்பட்டவை என்றாலும், அதற்குத் தனிநபர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு, ஏற்றத் தனிப்பட்ட கடனைப் பெறுவது மட்டும் போதுமானது அல்ல. அதைப் பெறுவதற்கு ஏற்றக் கடன் மதிப்பீட்டை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு கடனை பெறுவதற்கான முயற்சி அல்லது தவறான அணுகுமுறை ஆகியவை உங்களைப் பாதிப்பு மற்றும் பயனில்லாத நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.

இதையடுத்து சில முக்கியமான வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் கடன் மதிப்பீட்டிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் சிறந்த தனிப்பட்ட கடனை பெற முடியும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:

 

உங்கள் கடன் பயன்பாட்டு விகிதம் மீது கவனம் தேவை

ஒரு தனிப்பட்ட கடன் தொகையானது, உங்கள் டெபிட்-டு-இன்கம் விகிதத்தை (DTI) 40% கடக்காத நிலையில், உங்கள் கடன் மதிப்பீட்டிற்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. குறைந்த டிடிஐ மூலம் உங்கள் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையே உள்ள தகுந்த சமநிலையை நீங்கள் வைத்திருப்பது தெரியவருகிறது. மற்றொருபுறம், உங்களுக்கு அதிக டிடிஐ இருந்தால், உங்கள் வருமானத்துடன் ஒப்பிடும் போது, கடன் மிக அதிகமாக இருப்பதாகத் தெரியவரும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த கடன் அளிப்பவரிடம் இருந்து ஒரு தற்காலிக நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள்

நீங்கள் நேரடியாக ஒரு கடனுக்கு முறையாக விண்ணப்பித்தால், உங்களுக்குக் கடன் அளிப்பவர் கடுமையாக ஆராய்ந்து பார்க்க வாய்ப்புள்ளதால், உங்கள் கடன் மதிப்பீடு மீது ஒரு எதிர்மறையான விளைவு உண்டாகலாம். இதுபோல பல முறை நிகழ்ந்தால், உங்கள் கடன் மதிப்பீடு மிகவும் பாதிப்புள்ளாகும். எனவே ஒரு தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் நீங்கள் அதற்குத் தகுதியுள்ளவரா என்பதைத் தகுதி வரம்புகளைச் சோதித்தும், கடன் அளிப்பவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியும் அறிந்து கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் பலரிடம் தனிப்பட்ட கடனுக்காக விண்ணப்பிக்காதீர்கள்

இப்படிச் செய்யும்பட்சத்தில் கடன் அளிப்பதற்கான உங்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் என்பதோடு, உங்கள் கடன் மதிப்பீட்டிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே ஒரு தனிப்பட்ட கடனுக்கான தகுதி கணக்கீட்டைப் பயன்படுத்தி உங்கள் தகுதியையும், உத்தேச வட்டி விகிதத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கடன் மதிப்பீட்டை அவ்வப்போது சோதித்துப் பார்க்கவும்

இதன்மூலம் திடீர் மாற்றங்களை நீங்கள் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்படத் தேவைப்பட்டால் மதிப்பீட்டை உயர்த்திக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. பொதுவாக, உங்கள் கடன் மதிப்பீட்டின் 35% செலுத்தும் வரலாற்றையும், 30% உங்களுக்கு உள்ள கடன் தொகையையும், 15% கடனைத் திரும்பச் செலுத்த நீங்கள் எடுத்து கொண்ட கால அளவையும், 10% நீங்கள் உருவாக்கிய புதிய கடன் கணக்குகளையும், 10% நீங்கள் பயன்படுத்தும் கடன் வகைகளையும் (கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன்கள்) பொறுத்து அமைகிறது.

உங்கள் சந்தாக்களைச் சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்யவும்

உங்கள் சந்தாக்கள் காலதாமதமாகி, அவற்றைச் செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டால், அந்தக் கால அளவை முடிந்த வரை குறைத்துக் கொள்ளுங்கள். அதாவது 30 நாட்களுக்குள் தாமதமாகச் செலுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இதன்மூலம் உங்களுக்கு விருப்பமான கடனை பெற்று கொள்ள முடியும் என்பதோடு, நிராகரிக்கப்படுமா என்ற கவலையும் தேவையில்லை. மேலும் இது உங்களின் கடன் மதிப்பீட்டின் மீது ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

கடன் அளிப்பவர்களின் கட்டணம் மற்றும் கட்டண விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க மறக்காதீர்கள்

சில நிறுவனங்களின் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும், கூடுதல் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்கலாம். மிக அதிகமான செயலாக்க கட்டணங்கள், அதிகமான முன்பணமளிப்பு அபராதங்கள், சீரற்ற பராமரிப்புக் கட்டணங்கள் உள்ளிட்டவை இதில் உட்படுகின்றன. இதனால் நீங்கள் பணத்தை மீண்டும் செலுத்தும் தொகை அதிகமாகும் என்பதோடு, நீங்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ தகுந்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் கடன் மதிப்பீடு பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனவே உங்கள் தனிப்பட்ட கடனுக்கான கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது மிக அவசியமாக உள்ளது.

கடன் மதிப்பீடு ஏன் முக்கியம்?

இந்த வகையில் உங்களுக்குச் சிறந்த தனிப்பட்ட கடனை பெற உதவும் மிக முக்கியமான நிதிநிலை ஆதாரங்களில் உங்கள் கடன் மதிப்பீடும் ஒன்றாகும். கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவும், சிறந்த வட்டி விகிதத்தைப் பெறவும், உங்களுக்குத் தகுந்த கடன் மதிப்பீடு தேவைப்படுகிறது. மேலும் ஒரு தனிப்பட்ட கடனுக்காக நீங்கள் தேடும் போது, உங்கள் கடன் மதிப்பீடு தொடர்ந்து அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவே உங்களுக்குக் கடன் அளிப்பவர் மூலம் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கடனுக்கான தகுதியை கணக்கிடும் வசதி இணையத்தில் எளிதாகக் கிடைப்பதையும், மற்ற கூடுதல் அனுகூலங்களுடன் கூடிய சிறந்த வட்டி விகிதமும் அளிக்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பஜாஜ் ஃபின்சர்வ் அளிக்கும் தனிப்பட்ட கடனுக்கு, உடனடி ஒப்புதல், 24 மணிநேரத்திற்குள் விரைவாகப் பிரித்து அளித்தல், கடனுக்கான ஒரு தனிப்பட்ட வரைமுறை மற்றும் எண்ணற்ற ஒப்புதலுக்கு முந்தைய சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Find The Best Personal Loan Without Damaging Your Credit Rating

How To Find The Best Personal Loan Without Damaging Your Credit Rating
Story first published: Tuesday, December 19, 2017, 13:24 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns