சொத்து அதிகமாக உள்ளதா.. அப்படினா இதை எல்லாம் உடனே செஞ்சிடுங்க..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நம்முடைய சேமிப்பில் வங்கி நிரந்தர வைப்பு நிதி, சொத்துக்கள், காப்பீட்டுத் திட்டங்கள், ஓய்வூதியத் திட்டங்கள், கடன் அட்டை நிலுவைத் தொகை, தனிப்பட்ட கடன்கள், வீட்டுக் கடன்கள், பிற கடன்கள் ஆகியவை அனைத்தும் சொத்தின் பகுதியாகும். இவையே உங்களைப் பிரதிபலிக்கும் காரணிகளாகும். இவை அனைத்தும் இணைந்தே உங்களைத் தீர்மானிக்கின்றன. இவற்றைப் பற்றிச் சிந்திக்க உங்களுக்கு அதிகமான வயதிருக்க வேண்டியதில்லை அல்லது உங்களுக்குத் தீராத நோய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

உங்களுக்கு ஏதேனும் சொத்துக்கள் உள்ளதா அல்லது உங்களுக்கு ஏதேனும் கடன் உள்ளதா. ஆம் எனில் நாங்கள் கீழே தெரிவித்துள்ள 10 விஷயங்களை உற்று நோக்குங்கள். இவை அனைத்தும் உங்களுக்குத் தொந்தரவில்லா எதிர்காலத்தை உருவாக்கக்கூடும்.

சொத்துகள் மற்றும் கடன்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்திடுங்கள்

உங்களுடைய சொத்துக்கள் மற்றும் கடன்களை விவரிக்கும் பட்டியலை தொகுக்க வேண்டும். உங்களுடைய மறைவுக்குப் பின்னர் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இத்தகைய சூழ்நிலையில், உங்களுடைய சொத்துக்களை அடையாளம் காணும் கடினமான பணியையும் அவர்களின் தலையில் தள்ளி விடாதீர்கள். உங்கள் உடைமைகள் பற்றிய விரிவான பட்டியலைத் தயாரிப்பது, உங்களுடைய மறைவிற்குப் பின்னர் உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்க உங்களின் உறவினர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

டிஜிட்டல் சொத்துகளுக்கான திட்டம்

கடந்த காலத்தில், ஒருவர் வீடு, தோட்டம் போன்ற புற சொத்துக்களின் பட்டியலைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இன்று, உங்கள் கணினியில் உள்ள உங்களுடைய கற்பனைத் திறன் சார்ந்த படைப்புகள் , வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவு கணக்குகள், பிட் நாணயங்கள் போன்ற மெய்நினிகர் நாணயங்களில் உள்ள முதலீடுகள், மற்றும் உங்கள் நிறுவனத்தின் பேஸ்புக் பக்கமும் போன்ற அனைத்தும் உங்களுடைய சொத்தாகும். இவை அனைத்தும் மிக மதிப்பு மிக்கச் சொத்துகளாகும். எனவே இவற்றைப் பற்றிய பட்டியலும் மிக அவசியம்.

காப்பீட்டுத் திட்டங்கள், வங்கி கணக்குகள், லாக்கர்கள் போன்றவற்றைப் புதுப்பிக்கவும்

வங்கி கணக்கு வைத்திருக்கும் நீங்கள் இனி உயிருடன் இல்லை என்றால், வங்கிக் கணக்கு முகவரியில் உள்ள சிறிய தவறு கூட மிகப் பெரிய சிக்கலாக மாறி விடும். உங்களுடைய சொத்துப் பட்டியலைப் பயன்படுத்தி அதிலுள்ள அனைத்துச் சொத்துக்களுக்கும் சட்ட மற்றும் நிதி ஒப்பந்தங்களைப் புதுப்பித்திடுங்கள். வங்கி கணக்குகள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து, மற்றும் தங்கப் பத்திரங்கள் வரை உங்களுடிஅய் அனைத்து ஆவணங்களும் இன்றைய தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திடுங்கள். உங்களை நம்பி உள்ளவர்கள், உங்களுக்குப் பின்னர்ப் போதுமான நிதிக் காப்புடன் வாழ்வதை உறுதி செய்ய நீங்கள் ஒரு புதிய காப்பீடு திட்டத்தைக் கூட வாங்கலாம்.

வாரிசுதாரர்களை நியமித்திடுங்கள்

வங்கி கணக்கில் வாரிசுதாரர் தானாகவே சேர்ந்து விடும் என்பது நாம் அனைவருக்குள் இருக்கும் பொதுவன தவறான கருத்தாகும். உங்களுடைய உயில் மட்டுமே உங்களுடைய சொத்துக்களுக்கான வாரிசை நியமிக்கும். உங்களுடைய வாரிசுக்கு மட்டுமே உங்களுடைய மரணத்திற்குப் பிறகு உங்கள் கணக்கை அணுகவும் செயல்படுத்தவும் உரிமையுண்டு. ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளின் பலன்கள் குறிப்பிட்ட நபர்களுக்குச் செல்ல வேண்டும் என நீங்கள் விரும்பினால், அந்தக் கணக்குகளைக் கூட்டுக் கணக்குகளாக மாற்றுங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், உங்கள் சொத்துக்கள் மற்றும் வைப்புத் தொகை ஆகிய அனைத்திற்கும் வாரிசு இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய இறுதி உயிலைத் தயார் செய்ய வேண்டும்.

உங்களுடைய சொத்துகள் மற்றும் உடைமைகள் ஆகியவற்றை உங்களுடைய மறவுக்குப் பின்னர் யார் யாருக்கு எவ்வாறு போய்ச் சேர வேண்டும் என்பதை விவரிக்கும் சட்ட ஆவனம் இந்த உயில் ஆகும். எனவே இந்த ஆவணத்தைத் தயாரிக்கும் போது ஒரு வக்கீலைக் கலந்து ஆலோசனை செய்வது மிகவும் நல்லது. உங்களிடம் பல உயில்கள் இருப்பின், எந்த ஆவணம் உங்களுடைய மறைவிற்குப் பின்னர் உங்களுடைய உயிலாகச் செயல்படவேண்டும் என்பதைச் சந்தேகமற்ற உறுதிப்படுத்தவும்.

வாழும் உயிலைத் தயார் செய்திடுங்கள்

இந்தப் புதிய விஷயம் தற்பொழுது இந்தியாவில் பரவலாகக் கவனத்தை ஈர்த்து வருகின்றது. உங்களுடைய குடும்பத்தினருக்கு உங்களின் விருப்பங்களைத் தெரிவிக்க முடியாவிட்டால், இந்த ஆவணத்தில் உங்கள் சிகிச்சையைப் பற்றிய அறிவுறுத்தல்களைத் தெரிவித்திடுங்கள். ஒரு சிலருக்கு தன்னுடைய இறுதிக் காலத்தில் ஒரு பொம்மையைப் போல் வாழப் பிடிக்காது. ஒரு சிலருக்கு தன்னுடைய மரணம் தான் வாழ்ந்த வீட்டில் நடைபெற வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். எனவே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் அறிவுரைகளை இந்த ஆவணத்தில் நீங்கள் தெரிவிக்கலாம். என்ன ஒன்று உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டதாக இருப்பது மிகவும் அவசியம்.

அறக்கட்டளைக்கான நன்கொடை விபரங்கள்.

உங்கள் குடும்பம் மிகவும் செல்வச் செழிப்பானது என்றால், உங்கள் உடைமைகளின் ஒரு பகுதியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க நீங்கள் நினைக்கலாம். அறக்கட்டளைகளுக்கான பங்களிப்பு செய்யப்பட வேண்டிய முறையுடன் அது தொடர்புடைய வழிமுறைகளை நீங்கள் குறிப்பிடலாம். உங்கள் நினைவாக ஸ்காலர்ஷிப்களை நிறுவலாம். அதற்குத் தேவையான நிதியை நீண்ட கால முதலீடுகளாக நிறுவலாம். இவை அனைத்தும் உங்களுடைய உதவும் மனப்பான்மைய வெளிப்படுத்தும் அறச் செயல்களாக விளங்கி பிறருக்கு உதவும்.

நிர்வாகி நியமனம்

உயில் என்பது உங்களுடைய விருப்பங்களை விவரிக்கும் ஒரு சட்ட ஆவணமாகும். எனினும் இது மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டு.ம். அது சரியாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது எப்படி? இந்தப் பொறுப்பு நிறைவேற்றுபவர் மீது விழுகிறது. உங்கள் விருப்பத்தின் நிறைவேற்றுபவராக நம்பகமான நபரை நீங்கள் நியமிக்கலாம். அவர் உங்களுடைய உயில் நீதிமன்றத்தின் மூலம் சரிபார்க்கப்படுவது உட்பட, உங்களுடைய விருப்பத்தைச் செயல்படுத்துவது வரை அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொள்வார்,

இறுதிச் சடங்குக்கான செலவுகள்

உங்கள் இறுதிச் சடங்கிற்கான நிதிகளை ஒதுக்கி, உங்களுடைய மரணத்திற்குப் பின்னர்ப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சடங்குகளைப் பற்றிய அறிவுரைகளை வழங்கலாம். இந்த ஆவணம் மற்றும் நிதிக்குச் சட்டப்பூர்வமாகப் பிணைப்பை ஏற்படுத்துவதன் காரணமாக உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் மரணத்திற்குப் பிறகும் மதிக்கப்படுவதை உறுதி செய்யலாம்.

வரிக்குத் திட்டமிடுங்கள்

இந்தியாவில் பரம்பரை வரி கிடையாது. இருப்பினும் சொத்தை உரிமையாளரிடம் இருந்து வாரிசுதாரர் பெறும் பொழுது பரம்பரை வரிகளைச் செலுத்த வேண்டும் என்பதற்கான சந்தர்ப்பங்கள் வரக்கூடும். ஒரு பயனாளிக்கு மரபு வழி நிரந்தர வைப்பு நிதி கிடைத்து விட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அவர் அதைப் பணமாக்கவில்லை எனில் அந்த நிரந்தர வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் வட்டிக்குக் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். இதேபோல், பயனாளி கண்டிப்பாக நிலம் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட வரிகளைக் கண்டிப்பக செலுத்த வேண்டும். எனவே நீங்கள் கண்டிப்பாக இத்தகைய வரிகளுக்கும் சேர்த்து திட்ட மிட வேண்டும். அதற்குரிய ஏற்பாட்டையும் சேர்த்துச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

எல்லோரும் செய்யலாம்

நீங்கள் செய்ய வேண்டிய இந்தச் செயல்களை வயதானவர்கள் அல்லது நோயுற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டியதில்லை. இவை அனைத்தையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். உண்மையில், ஸ்மார்ட் சொத்துப் பராமரிப்பு திட்டமிடல் என்பது நீங்கள் திடீரென மரணமடைந்தால் அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது. உங்களுடைய குடும்பம் மிகவும் அமைதியான மனநிலையில் உங்களுடைய இழப்பை நினைக்க வேண்டும் அதை விட்டு பல்வேறு பிரச்சனைகளை நமக்குத் தந்து விட்டுச் சென்று விட்டாயே என உங்களைச் சபிக்கக் கூடாது. இவை அனைத்தும் உங்களின் கைகளில் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If you have more asset? Do it first?

If you have more asset? Do it first?
Story first published: Saturday, December 30, 2017, 12:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns