உங்கள் பணத்தைச் சேமிக்கச் சூப்பரான டிப்ஸ்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வெகு நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட புத்தகம் ஒன்றில் காணக் கிடைக்கும் ரூபாய் நோட்டு அளிக்கும் மகிழ்ச்சி புதையல் ஒன்றைக் கண்டவுடன் ஏற்படும் மகிழ்ச்சிக்குச் சற்றும் சளைத்ததல்ல. அது தற்போது செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய 500 அல்லது 1000 ரூபாய் நோட்டாக இருப்பின் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் என்பது வேறு விஷயம். அதை விடுங்கள், பணத்தை விரைவாகச் சேமிக்க என்ன ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனப் பார்ப்போம், வாருங்கள்!.

"ஃப்ரீ கேஷ்" என்று சொல்லப்படும் தேவைக்கு அதிகமான தாராளமான பணப்புழக்கம் எப்போதும் வரவேற்கத்தக்கதே. அத்தகைய ஃப்ரீ கேஷை சீராக்கினால், ஒருவர் தன் சேமிப்பை மிக விரைவாக அதிகரிக்கலாம். இதோ அதற்கான சில எளிய வழிகள்.

சில்லறைக் காசை உண்டியலில் சேர்த்து வையுங்கள்

ஒரு நாள் முழுக்கச் செய்யப்படும் பல்வேறு பணப்பரிவர்த்தனைகளின் போது கிடைக்கும் சில்லறைக் காசுகள் அனைத்தையும் அந்நாளின் முடிவில் உண்டியலுக்குள் போட்டு விடுங்கள். கொஞ்சம் பொறுங்கள் - உடனே உண்டியல் வாங்க ஓடாதீர்கள். உங்கள் வீட்டிலிருக்கும் கண்ணாடிக் குவளை ஒன்றை உபயோகித்து உங்கள் சேமிப்பு அனுதினமும் வளர்ந்து வருவதைக் கண்ணார்க் கண்டு மகிழுங்கள். மாதம் ஒன்றில் நீங்கள் செலவழிக்கும் விதத்தைப் பொறுத்து சுமார் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை உங்கள் உண்டியல் சேமிப்பு இருப்பதைக் காணலாம்.

அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத, எளிதில் கிடைக்காத ரூபாய் நோட்டு எது என்று ஆராயுங்கள். அத்தகைய ரூபாய் நோட்டு உங்களுக்குக் கிடைத்தால், அதைச் செலவழிக்காது, தனியே எடுத்து வையுங்கள். அவ்வாறு சேகரிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் நோட்டையும், உங்கள் பில்களுக்கான தொகையைச் செலுத்த பணம் எடுக்கும் ஸாலரி அக்கவுன்ட்டைத் தவிர்த்து, சேமிப்புக்கெனவே தனியாக ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதில் டெபாஸிட் செய்து வையுங்கள். (சொல்ல மறந்து விட்டேன் - உங்கள் உண்டியல் சேமிப்பும் கூட இந்த வங்கிக் கணக்கில் டெபாஸிட் செய்யப்பட வேண்டும்.)

 

போக்குவரத்துச் செலவுகள்

இயன்றவரை எங்குச் செல்ல வேண்டுமென்றாலும் அரசு போக்குவரத்தையே உபயோகிக்கப் பாருங்கள். இது பெருமளவில் உங்கள் செலவைக் குறைக்கும். அவ்வாறு இயலாதெனில் தனியாக வாடகைக் கார் எடுத்து உங்கள் பணியிடத்துக்குச் செல்வதைத் தவிர்த்து ஒரே வாடகைக் காரை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் "ஷேர் அக் கேப்" ஆப்ஷனை முயற்சி செய்து பாருங்கள். கார் பூலிங் முறையும் ஒருவரது போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவும்.

தினமும் தனியாக வாடகைக் கார் அமர்த்திப் போவது தான் உங்கள் பழக்கம் எனில் அதனை மாற்றுவது சற்றே சிரமம் தான். ஆனால் வீடு திரும்பும் ம்போதோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ ஷேர் கேப் ஆப்ஷனை முயன்று பாருங்கள்.

 

உணவகம்

வெளியில் சென்று உணவு சாப்பிடுவது என்பது தவிர்க்கமுடியாத வாழ்க்கைமுறையாகி விட்ட இக்காலத்தில், வீட்டிலேயே சாப்பிட்டுப் பணத்தை மிச்சப்படுத்துவது என்பது கடினமாகி விட்டது நமக்கு.

வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தவே செய்யும்; என்றாலும், வெளியே சென்று உணவருந்துவதைத் தவிர்க்கவியலாத போது, இரவு உணவுக்குச் செல்வதைக் காட்டிலும் மதிய உணவுக்குச் செல்வது நல்லது. ஏனெனில், பெரும்பாலான உணவகங்கள் "ஹேப்பி ஹவர்ஸ்" போன்ற சலுகைகளை மதிய உணவுக்கு வழங்கி வருவதால் உங்கள் பில் தொகையில் கணிசமான அளவு குறையும்.

 

தண்ணீர் பாட்டில்

உணவகங்களில் தண்ணீர் பாட்டிலை விலைக்கு விற்பது சத்தமின்றி உங்கள் பணத்தைச் சுரண்டும் உத்தி. ஒவ்வொரு முறை உங்களுக்குத் தாகம் எடுக்கும் போதும் தண்ணீர் பாட்டில் அல்லது ஜூஸ் வாங்கத் தலைப்படுவீர்கள். வீட்டிலிருந்து பாட்டில் எடுத்துச் சென்றால் இந்தப் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

தற்போது ஹோட்டகளே தண்ணீர் பாட்டில்களுக்கு விலையை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில். உங்கள் பணம் அதிகம் செலவாகும்

 

தேவைப்படாத பொருட்களை விற்று விடுங்கள்

நாம் விரும்பும் பொருட்கள் மற்றும் நமக்குத் தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கெனக் கணிசமான அளவு பணம் செலவழிக்கப்படுகிறது. இது நமக்குப் பிற்பாடு தான் உறைக்கிறது. உங்கள் தவற்றைச் சரி செய்து கொள்ள இது தான் தருணம் என்று எண்ணுங்கள். நீங்கள் உபயோகிக்காத பொருட்கள் எவை என்பதைப் பட்டியலிட்டுக் கொண்டு, அவை அனைத்தையும் விற்று விடுங்கள். இதற்கெனச் செலவாகக்கூடிய நேரம் மிகவும் குறைவு தான். ஆனால் இது உங்களுக்குக் கணிசமான அளவு பணத்தை ஈட்டித் தருவதுடன் உங்கள் வீட்டை அடைசலின்றி வைத்திருக்கவும் உதவும்.

கேஷ் பேக் ஆஃபர்கள்

பெரும்பாலான வர்த்தகர்கள் கேஷ் பேக் ஆஃபர்களை வழங்கி வருகின்றனர். சில கிரெடிட் கார்டுகளும் கூடக் கேஷ் பேக் ஆஃபர்களுடன் கிடைக்கின்றன. இலவசங்களை நம் கைகளில் திணிக்கும் ஆஃபர்களைக் காட்டிலும் இது போன்ற கேஷ் பேக் ஆஃபர்களை முறையாக உபயோகித்தால் கணிசமான பணத்தை மிச்சப்படுத்தலாம். இலவசமாகக் கொடுக்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் இலவசமாகக் கொடுக்கப்படுவதில்லை என்பதோடு இவை உபயோகமானவையாகவும் இருப்பதில்லை. ஆனால் கேஷ் பேக் மூலம் நாம் மிச்சப்படுத்தக்கூடிய பணம் உண்மையில் நமக்கு லாபமே.

சரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுங்கள்

ஏராளமானோர் தம் வார இறுதி நாட்களை மல்டிப்ளெக்ஸ் மால்களில் தாம் கழிக்கின்றனர். இது உங்கள் பாக்கெட்டைக் காலி செய்யும் பொழுதுபோக்கு அம்சமாகும். உணவை ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைத்து, வீட்டிலேயே படம் போட்டுப் பார்க்கலாம். இதன் மூலம் சுமார் 50% செலவைக் குறைத்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இலவசமாக நடத்தப்படும் ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் கூடத் தேர்ந்தெடுத்துச் சென்று வரலாம்.

அதிகச் செலவு பிடிக்கும் கடன்கள்

சில நேரங்களில், பணத்தேவை மற்றும் நேரப் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாகக் கிரெடிட் கார்டு அட்வான்ஸ்கள், பர்ஸனல் லோன்கள் போன்ற அதிகச் செலவு பிடிக்கும் லோன்களை நாம் எடுத்திருக்கலாம். அக்கஷ்டமான சூழலைச் சமாளித்து மீண்டு வந்தபின் இத்தகைய லோன்களுக்கு மாற்றாக விலை குறைவான ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத்து ரீஃபைனான்ஸ் செய்யலாம். அவ்வாறு செய்வது காலப்போக்கில் நீங்கள் கட்ட வேண்டிய இஎம்ஐ தொகையைக் குறைப்பதோடு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Simple tips to save money quickly

Simple tips to save money quickly
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns