மத்திய பட்ஜெட் 2018-க்கு முன் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய பங்குகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

கடந்த சில நாட்களாக மத்திய பட்ஜெட் குறித்துச் செய்திகள் அதிகமாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன. முதல் முறையாக இந்தியாவின் ஜிஎஸ்டி பட்ஜெட் மற்றும் பாஜக அரசின் நடப்புக் காட்சி காலத்தில் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

மத்திய அரசு இன்னும் 15 நாட்களில் தாக்கல் உள்ள பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உருவாக்கம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றில் அதிகக் கவனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் நேரடி வரி வருவாய் வரம்பை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதே நேரத்தில் பங்கு சந்தை முதலீடுகள் என்பது முக்கியம் ஆகும். பட்ஜெட் அறிவிப்பினால் அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் நன்மை பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும் உங்களுக்காக அதிகப் பயன் அளிக்கும் என்று பங்கு சந்தை வல்லுனர்கள் குறிப்பிடும் சில முக்கியப் பங்குகளை மட்டும் இங்கு அளிக்க உள்ளோம்.

டிபி கார்ப்

மிகப் பெரிய அச்சு ஊடகமான டிபி கார்ப் ரேடியோ மற்றும் டிஜிட்டல் மீடியா வணிகத்தினைத் தற்போது செய்து வருகிறது. டிபி கார்ப் நிறுவனத்தின் வருவாயில் அச்சு மற்றும் டிஜிட்டலில் இருந்து 91 சதவீதமும், ரேடியோவில் இருந்து 6 சதவீதமும் பிற பிரிவுகளில் இருந்து 3 சதவீதமும் வருகிறது. அது மட்டும் இல்லாமல் புதியதாக ரேடியோ சேனல்களை டிபி கார்ப் துவங்க திட்டமிட்டுள்ளதால் வரும் ஆண்டுகளில் இதன் வருவாய் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

டிபி கார்ப் பங்குகளைத் தற்போது 377 ரூபாய்க்கு வாங்கினால் 414 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம் என்று கூறுகின்றனர்.

 

டெக்ஸ்மாகோ ரயில்

டெக்ஸ்மாகோ நிறுவனம் கலிந்தீ ரயில் நிர்மான் (டிராக் வேலை மற்றும் சமிக்ஞை) மற்றும் பிரைட் பவர் ப்ராஜெக்ட்ஸ் (ரயில்வே மின்மயமாக்கல்) கையகப்படுத்துதல் நடவடிக்கையினை அடுத்து மொத்த ரயில் தீர்வுகளுக்கு ஏற்ற நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. புல்லெட் ரயில், ரயிவே கட்டமைப்பு போன்றவற்றுக்கு நடப்புப் பட்ஜெட்டில் அதிகப்படியான நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் வரும் நிதி ஆண்டில் அதிக லாபத்தினை அளிக்கும்.

இந்த நிறுவனத்தின் பங்குகளை 116 முதல் 120 ரூபாய்க்குள் வாங்கும் போது பட்ஜெட்டிற்குப் பிறகு 136 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் அளிக்க வாய்ப்புகள் உள்ளது.

 

இங்கர்சால் - ரேண்ட் லிமிடெட்

இண்டெர்சோல் ரேண்ட் (ஐஆர்ஐஎல்) காற்றுக் கம்பரஸர்களைத் தயாரித்து விற்கிறது, இதில் ரெகுரோரெட்டிங் கம்பரஸர்களை, மையவிலக்கு அமுக்கிகள் மற்றும் கணினி கூறுகளும் அடங்கும். உள்நாட்டுக் கம்பரஸர்களைச் சந்தையில் வலுவான சந்தை இங்கர்சால் - ரேண்ட் லிமிடெட் வைத்துள்ளது. ஆட்டோ மோடிவ், உலோகம், மருந்துகள் மற்றும் நெசவு துறைகளில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வரும் இந்த நிறுவனம் விரைவில் வெளிநாட்டுச் சந்தையில் மிகப் பெரிய இடத்தினைப் பெறும் என்று நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.

பட்ஜெட்டிற்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்குகளை 858 முதல் 568 ரூபாய் வரை வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 998 ரூபாய் வரை லாபம் பெற வாய்ப்புள்ளது.

 

சீரா சானிட்டரிவேர்

இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய சானிட்டரிவேர் நிறுவனமாகச் சீரா உள்ளது. இந்திய கழிப்பறை சாதன சந்தையில் 23 சதவீதம் வரை இந்த நிறுவனம் வசம் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை 2018 பட்ஜெட்டிற்கும் முன்பு 3,770 முதல் 3,790 ரூபாய் கொடுத்து வாங்கினால் 4,210 ரூபாய் வரை லாபம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பற்றி உங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்தியாவின் மிகப் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக 64 சதவீதம் வரை வருவாயும், பெட்ரோ கெமிக்கல் வணிகம் மூலம் 24 சதவீதம் வருவாயும், பிற துறைகளில் இருந்து 12 சதவீதம் வரை வருவாயும் பெற்று வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு பக்கம் சிறப்பான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது, விரைவில் ஜியோ பிராடுபேண்ட் மற்றும் டிடிஎச் சேவைகள் வர இருப்பதால் இந்த நிறுவனப் பங்குகளை 935 முதல் 940 ரூபாய்க்குள் வாங்கினால் பட்ஜெட்டிற்குப் பிறகு 1,010 ரூபாய் ஒரு பங்கு என லாபம் பார்க்கலாம்.

முதலீடு குறித்த உரிமைத்துறப்பு

கிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Invest in these stocks before Union Budget 2018

Invest in these stocks before Union Budget 2018
Story first published: Wednesday, January 17, 2018, 13:43 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns