ஐக்கிய அமீரகத்தில் ‘வாட்’.. ‘என்ஆர்ஐ’களே சிக்கனமாக பணத்தை சேமிப்பது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

துபாய்: யுனைடெட் அரப் எமிரேட்ஸ் நாட்டில் ஜனவரி 1 முதல் வாட் வரி ஆட்சி முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அங்கு உள்ள என்ஆர்கள் செலவழிப்பதில் மிகுந்த கவனமாக இருப்பது அவசியம்.

எனவே பணத்தை மிச்சப்படுத்துவதற்கும், சேமிப்பதற்கும் இங்கே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

பாட்டிலில் குடிநீர்

இந்த வருடமாவது ஒரு பில்ட்டர் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள் . பில்ட்டர் என்பது தற்போது தண்ணீர் குழாயோடு இணைக்கப்பட்டுத் தண்ணீரைச் சுத்தமாக்க பயன்படுகிறது. ஆனால் குழாயில் இருந்து வரும் நீரே குடிப்பதற்குத் தேவையான அளவு தூய்மையோடு இருக்கும்போது பில்டருக்கான தேவை இருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டும். ஆகவே குழாய் நீரை ஒரு பாட்டிலில் ஊற்றி எங்குப் போனாலும் எடுத்துச் செல்லலாம். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், உங்கள் அலுவலகத்தில் வாட்டர் கூலர் இருக்கலாம். அதனைப் பயன்படுத்தி உங்கள் கனவை நிஜமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் பணத்தை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்.

வங்கி கட்டணம்

கிரெடிட் கார்ட் வாங்குவதற்கு முன் பலமுறை ஆலோசித்து வாங்க வேண்டும். அவற்றில் கிடைக்கும் சலுகைகள் பற்றி நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு எல்லாச் சலுகைகள் மற்றும் இலவசங்கள் கொண்ட, உங்களுக்கு ஏற்ற கார்டை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆண்டுக் கட்டணம் எதுவும் இல்லாத கிரெடிட் கார்டை தேர்வு செய்யுங்கள். அதன் வட்டி விகிதம் மற்ற கார்டை விட எவ்வளவு குறைவானதென்று தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு, அதற்கான கட்டணங்களை ஒவ்வொரு மாதமும் சரியான தேதியில் செலுத்தி விடுங்கள். கட்ட வேண்டிய தேதிக்குப் பின் செலுத்தி அதற்கான அபராத தொகையைச் சேர்த்துக் கட்டாமல் இருக்கத் தானியங்கி கட்ட சேவையைப் பயன்படுத்துங்கள். இதன் மூலம் சரியான தேதியில், கட்டணத்தைச் செலுத்த முடியும்.

உணவை வீணாக்குவது

2015ம் ஆண்டு, யு.ஏ இ நாட்டில் 3.7 பில்லியன் மதிப்புள்ள உணவு வீனாக்கப்படுள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. அப்படியென்றால், நீங்கள் வாங்கும் தேவையற்ற உணவு பொருளால் எவ்வளவு பணம் விரயமாகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே உணவை எந்த ஒரு நேரத்திலும் வீணாக்காதீர்கள். உணவு அல்லது உணவு பொருள் வாங்க சூப்பர் மார்க்கெட் செல்வதற்கு முன் தேவையான பொருட்கள் யாவை என்பதைக் குறிப்பெடுத்துக் கொண்டு செல்லுங்கள். அந்தக் குறிப்பில் உள்ள பொருட்களைத் தவிர வேறு எந்த ஒரு பொருளையும் வாங்க வேண்டாம். காய்கறிகளை வாங்குவதற்கு முன், ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்து, நீங்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். நீங்கள் வாங்கும் காய்கறிகள், நிச்சயம் பயன்படும் என்பதை உறுதி செய்து கொண்டு வாங்குங்கள். தேவையில்லாத, பிடிக்காத காய்கறிகளை வாங்கிப் பையை நிரப்ப வேண்டாம். ப்ரிட்ஜில் பொருட்களை அடுக்கும்போது எல்லாப் பொருட்களும் தெரிவது போல் அடுக்கி வையுங்கள். இதனால் அந்தப் பொருள் வீட்டில் இருக்கிறது என்பதை மறந்து மறுமுறை அதே பொருளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

தொலைக்காட்சி

தற்போது இருக்கும் இயந்திரதனமான வாழ்க்கையில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நமக்கு நேரம் இருக்கிறதா என்பதைத் தீர ஆலோசியுங்கள். சராசரியாகக் கேபிள் டிவி சந்தாவாக ஒவ்வொரு மாதமும் 250 திராம் செலவு செய்யப்படுகிறது. இதற்கான சேவையை ஒவ்வொருவரும் முழுதாகப் பயன்படுத்துகிறோமா என்றால், இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக உள்ளது. ஆகவே கேபிள் இணைப்பிற்கு மாற்றாக நெட்ப்ளிக்ஸ் அல்லது ஸ்டார்ஸ் ப்ளே போன்ற கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இதற்கான செலவு ஒவ்வொரு மாதமும் 30திராம் மட்டுமே. இதனால் உங்களுக்குக் கிடைக்கும் சேமிப்பு 200 திராம். பெரிய திரையில் தான் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும் என்பவர்கள், உங்கள் லேப் டாப்பை தொலைக்காட்சி பெட்டியுடன் இணைத்து பார்த்துக் கொள்ளலாம்.

வெளி உணவு

வெளியில் உணவு உன்னுவது உங்கள் பணத்தை அதிகம் விரயமாக்கும். முடிந்த அளவு, வீட்டிலேயே உணவைத் தயாரியுங்கள். மதியத்திற்கான உணவைக் கூட வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல பழகிக் கொள்ளுங்கள். இதனால் உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும். இந்த வருட இறுதியில், உங்கள் சேமிப்பு அதிகரிக்க, மதிய உணவை இன்று முதல் வீட்டில் இருந்து எடுத்துச் சென்று பாருங்கள்.

முன்பே பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சில நேரங்களில் நமது வசதிக்காகச் சில செயல்களைச் செய்கிறோம், அதற்கான செலவு அதிகம் என்பது தெரிந்து கூட. உதாரணத்திற்குச் சீஸ், காய்கறி, இறைச்சி போன்றவை வெட்டி பதப்படுத்தப்பட்டுத் தற்போது சந்தையில் கிடைகின்றன. இந்த வகை உணவை வாங்கி வீட்டில் தயாரிக்கும்போது, அதனை வெட்டும் நேரம் மிச்சமாகிறது என்ற எண்ணத்தில் நாம் இவற்றை வாங்க ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், இப்படி வெட்டி வைக்கப்பட்ட உணவு பொருட்களை முழுதாக வாங்கும் போது அதன் விலை இன்னும் மலிவாக இருக்கும். உணவு தயாரிக்கும் நேரம் அதிகமானாலும், சேமிப்பு உறுதி என்பதை உணர்ந்து இதனையும் முயற்சிக்கலாம்.

புகழ் பெற்ற பிராண்ட் பொருட்கள்

மளிகைக் கடையில் பொருட்கள் வணங்கு போது, லோக்கல் மற்றும் அந்த ஊரில் தயார் செய்யப் பட்ட பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுங்கள். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விட இவற்றின் விலை மலிவாக இருக்கும். உலகத்தரம் வாய்ந்த பிராண்ட் பொருட்களை விட, உள்ளூர் சந்தை பொருட்கள் 30% குறைவான விலையைப் பெற்றிருக்கும். எல்லாப் பொருட்களையும் உள்ளூர் சந்தை பொருட்களாக வாங்க வேண்டும் என்றில்லை, வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்து வாங்க பழகிக் கொள்ளலாம்.

சந்தா

மாத மற்றும் வருட சந்தாக்களுக்கு உங்கள் பட்ஜெட்டில் ஒரு முக்கிய இடம் உண்டு. சில பத்திரிகைகளை நாம் காரணம் இன்றி வாங்கிப் பழக்கப்பட்டுள்ளோம். படிக்க நேரமில்லை என்றால், அந்தச் சந்தாவை ரத்துச் செய்திடலாம். வலைத்தளம் தொடங்கிப் பயன்படுத்தாமல் இருக்கும்போது தேவையற்ற ஆண்டுச் சந்தா செலுத்தும் வாய்ப்பு உண்டு. ஆகவே பயன்படுத்தாத பட்சத்தில் அதனை ரத்துச் செய்யலாம். பொதுவாக, ஒவ்வொரு மாதமும் முக்கியச் சந்தாவாக இருக்க வேண்டியது, 1.செய்தித்தாள் - உலக நடப்பை பற்றி அறிந்து கொள்ளவற்றகு பயன்படும். 2. ஜிம் - ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியம். மற்றவை எல்லாம் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து, மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடியது தான். ஆகவே திட்டமிட்டு தேவையற்ற சந்தாக்களை ரத்துச் செய்யுங்கள்.

காபி

தினமும் காலையில் காபி பருகுவது காலை வேளையைப் பிரகாசமாக்கும். ஆனால் அதனை வீட்டில் தயாரித்துப் பருகுவது உங்கள் சேமிப்பை அதிகமாக்கும். உங்களுக்குப் பிடித்தமான காபி உங்கள் கைகளால் தயாரிக்கப்டும்போது அதன் சுவை மேலும் அதிகமாகும். காபி தூள் அல்லது டீ பேகை அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, வெந்நீரில் போட்டு அருந்துபோது, வேலை பளுவில் சிறந்த புத்துணர்ச்சியைப் பெற முடியும். '

விலைமதிப்பான மொபைல்

ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் விலை மதிப்பான மொபைல் வாங்கி 24 மணிநேரமும் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. டியூ மற்றும் எடிசாலட் தினசரி, மற்றும் வாரம், மாதம் என்று பல வித சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் எல்லா நேரமும் இணைந்திருக்கலாம், வலைத்தளத் தேடலில் ஈடுபடலாம், லோக்கல் மற்றும் சர்வதேச அழைப்புகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

VAT in UAE: How to stop wasting your money on in 2018

VAT in UAE: How to stop wasting your money on in 2018
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns