மருத்துவக் காப்பீட்டை தேர்வுசெய்யும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீடீரென உடல்நல குறைவோ அல்லது அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தாலோ, எப்பேர்பட்ட மனிதனாக இருந்தாலும் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விடுவார்கள். ஏனெனில், வரிசைகட்டி நிற்கும் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சவாலானது. அதனால் தான், குழு மருத்துவக் காப்பீட்டை காட்டிலும் தனிநபர் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமானது.

 

மக்கள் பெரும்பாலும் வரிவிலக்கு பெறுவதற்காகவே மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் அதைவிடச் சிறந்த பலன்களைக் காப்பீட்டுத் திட்டங்கள் தருகின்றன. ஆம், அவரசமாக மருத்துவ வசதி தேவைப்படும் போது கைகொடுக்கின்றன. ஆனால், சிறந்த திட்டத்தைத் தேர்வு செய்வது சுலபமானதில்லை. நமக்கான மருத்துவக் காப்பீட்டை தேர்ந்தெடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..

தனிநபர் (அ) குடும்ப மருத்துவக் காப்பீடு திட்டம்

தனிநபர் (அ) குடும்ப மருத்துவக் காப்பீடு திட்டம்

தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர் (பாலிசிதாரர்) ஒருவர் மட்டுமே மொத்த காப்பீடு தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, பொதுவாக ஒரே ஒரு குடும்பக் காப்பீடு (Family Floater policy) எடுக்கலாம். இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற் போல் மொத்த காப்பீடு தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம்

இருவகைத் திட்டங்கள்

இருவகைத் திட்டங்கள்

காப்பீடு நிறுவனங்கள் இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் சிறந்தது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால் , தனிநபர் காப்பீடே சிறந்தது.

 காப்பீட்டுத்தொகை
 

காப்பீட்டுத்தொகை

மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வுசெய்யும் போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தவொரு பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்

 

கோ-பே மற்றும் காத்திருப்புக் காலம்

கோ-பே மற்றும் காத்திருப்புக் காலம்

கோ-பே என்பது, காப்பீட்டாளர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது ஆகும். இம்முறை காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா? கட்டாயமில்லையா ? எனத் தெரியும். மூத்தகுடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், கோ-பே திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.

 1 முதல் 6 ஆண்டுகள் வரை

1 முதல் 6 ஆண்டுகள் வரை

மருத்துவக் காப்பீடு திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

உள்ளடங்கங்கள் மற்றும் விலக்குகள்

உள்ளடங்கங்கள் மற்றும் விலக்குகள்

ஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும் கவனிக்க வேண்டியவை உள்ளடக்கம் மற்றும் நீங்கல்கள். இவை காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரம் உங்களிடம் மருத்துவகாப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட வேண்டும்.

 மருத்துவமனை வலையமைப்பு

மருத்துவமனை வலையமைப்பு

காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டு சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவவசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் அந்த நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரக்காலங்களில் எளிதாக மருத்துவவசதி பெறலாம்.

எண்ணற்ற பலன்கள்

எண்ணற்ற பலன்கள்

மருத்துவகாப்பீட்டுத் திட்டங்கள் எண்ணற்ற பலன்களைத் தருகின்றன. இதன் மூலம் அவசரக் காலங்களில் சிரமப்படாமல் உடல்நிலையில் மட்டுமே கவனம் செலுத்தலாம். ஆயினும், நமக்குத் தேவையான அனைத்துப் பிரிவுகளும் கொண்ட சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Things You Should Consider While Purchasing Health Insurance

5 Things You Should Consider While Purchasing Health Insurance
Story first published: Friday, February 23, 2018, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X